முடிவு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

இது ஓர்  பொன்விழாகண்ட அரசு நிறுவனம்

வைரவிழாவினை நோக்கி வெற்றிநடைபோடும் நிறுவனம்

தொழிற்பயிற்சி நிலையத்தை பற்றி

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையமானது 1964-ம் வருடம் 26.45 ஏக்கர் பரப்பளவில் 5 தொழிற்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 10 தொழிற்பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது. மேலும் ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்காக இயங்கக்கூடிய ஒரே முதன்மை தொழிற்பயிற்சி நிலையமாகும். இதில் ஆண், பெண் என மொத்தம் 672 பயிற்சியாளர்கள் ஒரு வருடத்தில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இத்தொழிற்பயிற்சி நிலையமானது புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.புதுக்கோட்டை  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பொன்விழா கண்ட பயிற்சி நிலையமாக வைர விழாவை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.அனைத்து மக்களுக்கும் தொழிற்கல்வி கிடைப்பதை புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உறுதிசெய்கின்றது.இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற பல்வேறு பயிற்சியாளர்கள் இன்று மத்திய, மாநில அரசுகளின் தொழில்நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவதன் மூலம் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை முதன்மை ஐடிஐ

வ. எண் தொழிற்பிரிவு பெயர் பாடப்பிரிவு காலம் (ஆண்டு)
இருக்கை (எண்ணிக்கை)
கல்வித் தகுதி
1 பொருத்துநர் 2 40 10ம் வகுப்பு
2 கடைசலர் 2 40 10 ம் வகுப்பு
3 இயந்திரவேலையாள் 2 40 10 ம் வகுப்பு
4 கம்மியர் கருவிகள் 2 24 10 ம் வகுப்பு
5 கம்பியாள் 2 20 8 ம் வகுப்பு
6 கம்மியர் மோட்டார் வண்டி 2 24 10 ம் வகுப்பு
7 பற்ற வைப்பவர் 1 40 10 ம் வகுப்பு
8 கம்மியர் டீசல் 1 48 10 ம் வகுப்பு
9 பம்பு ஆபரேட்டர் கம் மெக்கானிக் 1 40 10 ம் வகுப்பு
10 கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் 1 48 10 ம் வகுப்பு
11 பற்ற வைப்பவர்(PPP) 1 40 8 ம் வகுப்பு
12 பொருத்துநர்(PPP) 2 40 10 ம் வகுப்பு
மொத்த இருக்கை

 

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்விராலிமலை

வ. எண் தொழிற்பிரிவு பெயர் பாடப்பிரிவு காலம்(ஆண்டு) இருக்கை (எண்ணிக்கை)
கல்வித் தகுதி
1 மின்சார பணியாளர் 2 20 10 ம் வகுப்பு
2 கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்பவெட்பநிலை 2  24  10 ம் வகுப்பு
3 இயந்திரவேலையாள் 2 20 10 ம் வகுப்பு
4 கட்டிட பொறியாளர் உதவியாளர் 2 24 10 ம் வகுப்பு
5 பற்ற வைப்பவர் 1 40 10 ம் வகுப்பு
மொத்த இருக்கை

 

புதுக்கோட்டை அரசு முதன்மைதொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும்தனியார்தொழிற்பயிற்சி நிலையங்கள் பற்றிய தகவல்கள் 

தொழிற் பயிற்சி நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு ஐடிஐ குறியீடு தொலைபேசி எண் இமெயில் முகவரி           முகவரி
சென்ட்ரல் ஐடிஐ, புதுக்கோட்டை 01-Aug-1996 PR33000354 04322-236230 centralitipdkt@gmail.com 9-ஏ திருச்சி ரோடு, புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம் அஞ்சல் குறியீட்டு எண்: 6220024
செயின்ட் ஜேம்ஸ் ஐடிஐ,- அன்னவாசல் 01-Jan-1986 PR33000137 9597311868 stjamesitc1986@gmail.com அன்னவாசல், புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622101
செயின்ட் ஜோசப் ஐடிஐ, – நமணசமுத்திரம் 01-Jun-1994 PR33000300 04333-294693  

josephitc253@gmail.com

 

நமணசமுத்திரம், புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622658
செயின்ட் மேரீஸ் ஐடிஐ – ஆலங்குடி 01-May-2003 PR33000529 04322-252455 kasebastians@yahoo.co.in 3/824-ஏ எம்.ராசியாமங்களம்,
கறம்பக்குடி ரோடு, ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622301
பிரகதாம்பாள் ஐ.டி.ஐ – புதுக்கோட்டை 01-Jun-1994 PR33000299 04322-223897 sbitipudugai@gmail.com மாலையீடு, விளக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622003
சதுரகிரி ஐ.டி.ஐ – ஆலங்குடி 01-Jul-2012 PR33000615 04322-250522 sathuragiriiti@gmail.com 256/1 மெயின்ரோடு, ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622301
ரீஜினல் ஐ.டி.ஐ – ஆலங்குடி 01-Aug-1996 PR33000348 04322-252463 ansari.avanam@gmail.com மெயின்ரோடு, ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622301
எம்.ஆர்.அருணாச்சலம் ஐ.டி.ஐ – உமையாள்புரம் 01-Oct-1984 PR33000111 9786171601 mrarvtc@yahhoo.in உமையாள்புரம், ஊனையூர் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622505
ஹைடெக் குட்வில் ஐ.டி.ஐ – திருமயம் 01-Oct-2010 PR33000601 9787353354 hytechgoodwillitc@gmail.com திருமயம்-காரைக்குடி ரோடு, கொசப்பட்டி, ஊனையூர் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622505
எம்பவர் ஐ.டி.ஐ  – மண்டையுர் 01-Aug-2011 PR33000606 9943012435 sudhakar.me9@gmail.com திருச்சி-புதுகோட்டை ரோடு,  மண்டையூர் அஞ்சல்
புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622515
அட்வான்ஸ்டு ஐ.டி.ஐ – புதுக்கோட்டை 01-Aug-1996 PR33000353 04322-261876 advanceditipdkt@gmail.com 12 கவர்னர் ரோடு,  ராஜகோபாலபுரம், புதுக்கோட்டை மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்: 622003
ஏ.சி.முத்தையா ஐ.டி.ஐ- புதுக்கோட்டை 01-Jan-1997 PR33000360 04333-244435 acmvtckpt@yahoo.com எஸ்.பி.கே. தெரு, கோனாபட்டு,
புதுக்கோட்டை மாவட்டம் அஞ்சல் குறியீட்டு எண்: 622503

 தொழிற்பிரிவு தகவல்கள்

பொருத்துநர்
(பொறியியல் பிரிவு/இரண்டு ஆண்டு/NSQF LEVEL5)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • பாதுகாப்பு மற்றும் 5 எஸ் அமைப்பு முறையின் பயன்கள்
    • கருவிகள், இயந்திரங்கள், நெருப்பு மற்றும் மின்சார சாதனங்கள் போன்றவற்றை கையாளும் விதம்.
    • பணிப் பொருளை அளவிடுதல், துளையிடுதல், தரமிடுதல், மரையிடுதல்
    • அறுத்தல், ராவுதல் மற்றும் நிறைவு செய்தல், நுண் அளவு கருவிகளைக் கொண்டு திறன்பட அளவை அறியும் முறை.
    • இயந்திரங்களினால் செய்யப்படும் பணிகள் தரமிடுதல், பற்றிணைப்பு முறை, கடைசல் வேலைகள், உலோகத் தகடு மேம்பாட்டு பணி மற்றும் குழாய் பொருத்தும் பணி
    • பணிப்பொருளை 0.92mm க்கு நுட்பமான துல்லியத்திற்கு பொருத்துதல்
    • இயந்திரங்களில் பழுதடைந்த பாகங்களை கழற்றி பழுது பார்த்து, சரிசெய்து மீண்டும் ஒருங்கிணைத்து இயங்க செய்தல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • திறன்பட குறியிடுதல் மற்றும் அளத்தல் முறைகள்
    • நுண்அளவு கருவிகள், கேஜ்கள் கையாளுதல் விதம் மற்றும் அளக்கும் முறைகள்
    • பொருத்தும் பணிகள் மற்றும் பேக்கிங்
    • இயந்திர பராமரிப்பு பணிகள்
    • கட்டுருவாக்கும் பணிகள்
    • பாகங்களை ஒன்றிணைக்க கூடிய பணிகள்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • மத்திய அரசு நிறுவனங்கள், இந்திய ரயில்வே, இந்திய விண்வெளி ஆய்வு மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
    • மாநில அரசு நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், போக்குவரத்து துறை மற்றும் மின்சார வாரியம்
    • தனியார் நிறுவனங்கள், அசோக் லேலண்ட், கூண்டாய், போர்டு இந்தியா லிட், அட்கோ இந்தியா லிட், நிசான் மோட்டார்ஸ், எம்.ஆர்.எப் காற்றாலை, கைபேசி தொழில்நிறுவனங்கள், ராயல் என்பீல்டு,யமகா மோட்டார்ஸ், டி.வி.எஸ் மற்றும் பலதனியார் நிறுவனங்கள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • தொழில்நுட்ப பணியாளர், இயந்திரம் இயக்குபவர்

இடைநிலை

    • மேற்பார்வையாளர்

முதுநிலை

    • பொறுப்பாளர், தொழில்முனைவோர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • வேலை பழகுநர் பயிற்சி
    • கைவினைஞர் திட்ட பயிற்றுநர் பயிற்சி
    • பட்டய பொறியியல் (டிப்ளோமா படிப்பு)

கடைசலர் (டர்னர்)
(பொறியியல் பிரிவு/இரண்டு ஆண்டு/NSQF LEVEL5)

 ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • லேத் மற்றும் உபகரணங்களை இயக்குவது, கட்டுப்டுத்துவது மற்றும் கண்காணிப்பது போன்ற திறன்கள்
    • வரைபடத்தின் படி பணிப்பொருளை உருவாக்க சரியான திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் திறன் வளர்த்தல்
    • பணிப் பொருளை நன்றாக செய்து முடிக்க தேவையான அளவிடும் கருவிகள், வெட்டுக் கருவிகள் மற்றும் பணிப் பொருளை பிடிக்கும் கருவிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் திறன்.
    • பல்வேறு வகையான லேத் செயல்பாடுகளை ( டர்னிங், துளை பெரியதாக்குதல், மரை வெட்டுதல், இரண்டாக பிரித்தல்) செய்யத் தேவையான வெட்டுக்கருவிகளை கிரைண்டிங் செய்து கூர்மையாக்கும் திறன்
    • சிமுலேசன் மென்பொருள் பயன்படுத்தி சி.என்.சி லேத்தினை இயக்குவதற்கான (இயந்திர செயல்பாடுகள், ஜாப் மற்றும் கருவிகள் செட்டிங் போன்ற பல காரணிகள்) பயிற்சியளிக்கப்படுகிறது.
    • சி.என்.சி லேத்தினை இயக்கி வரைபடத்தின்படி பொருட்களை உருவாக்கும் திறன்
    • பிறரிடம் தகவல்தொடர்பு கொள்ளும் திறன்.

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • பாதுகாப்பாக வேலை செய்யும் நடைமுறைகள்
    • வழக்கமான மற்றும் சி.என்.சி லேத்தினை இயக்க அறிந்திருத்தல்
    • பல்வேறு விதமான காரணிகளை பயன்படுத்தி லேத்தின் அலைன்மெண்ட் ஐ சோதித்து பிழைகளை சரிசெய்ய அறிந்திருத்தல்
    • இயந்திரங்களில் ஏற்படும் இயக்கப் பிழைகளுக்கான காரணம் கண்டறிந்து பழுதுகள் சரிசெய்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    •  அரசு ஐடிஐ மற்றும் பொறியியல் கல்லுரிகளில், பணிமனை உதவியாளர்
    • மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், இந்துஸ்தான் மெசின் டுல்ஸ் லிமிடெட், பாரத் கெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்திய ரயில்வே, கெவி வெகிகல் பாக்டரி, இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஓ.என்.ஜி.சி. மற்றும் பல
    • தனியார் நிறுவனங்கள், போர்ட், கூண்டாய், பாட் லிபாய், , டி.வி.எஸ், எல்.எம்.டபிள்யு, டாடா, அசோக் லேலண்ட் மற்றும் பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • பயிற்சி இயந்திர ஆபரேட்டர், இயந்திர ஆபரேட்டர், அரை திறனுடைய வேலையாள், தொழில் பயிற்சி நிலையங்களில் பணிமனை உதவியாளர்

இடைநிலை

    • தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர், சி.என்.சி. மெசின் ஆபரேட்டர், முழு திறனுடைய வேலையாள் (கிரேடு 1,2,3) , போர்மேன், மேற்பார்வையாளர், புரோகிராமர்

முதுநிலை

    • இளநிலை பணி மேலாளர், பணி மேலாளர், சிப்ட் பொறியாளர், பயிற்சி அலுவலர், சுய தொழில், தொழில் முனைவோர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற்சாலையில் தொழிற் பழகுநர் ஆக சேராலம்
    • ஐடிஐ யில் பயிற்றுநராக பணியில் சேருவதற்கு பயிற்றுநர் பயிற்சி மையத்தில் சி.ஐ.டி.எஸ் – ல் சேர்ந்து சான்றிதழை பெறுதல்
    • பட்டய பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேருதல் (டிப்ளோமா படிப்பு)
    • தேசிய திறன் பயிற்சி மையங்களில் நடைபெறும் சிறப்பு குறுகிய கால வகுப்புகளில் சேரலாம்,
      (ஆட்டோ கேட், புரோ இ)

 

இயந்திர வேலையாள்

(பொறியியல் பிரிவு/இரண்டு ஆண்டு/NSQF LEVEL5)

 ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • பல்வேறு வகையான வழக்கமான இயந்திரங்களை இயக்கும் திறன்
    • இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இயக்குவது, கட்டுப்டுத்துவது மற்றும் கண்காணிப்பது போன்ற திறன்கள்கள்
    • வரைபடத்தின் படி பணிப்பொருளை உருவாக்க சரியான திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் திறன் வளர்த்தல்
    • சிமுலேசன் மென்பொருளில் பணிப் பொருளை செய்வதற்கான இயக்க வரிசைகளை சரிபார்த்தல்
    • சி.என்.சி. லேத் மற்றும் சி.என்.சி மில்லிங் இயந்திரங்களை இயக்கி பொருட்கள் உருவாக்கும் திறன்,
    • பணிப்பொருளை நன்றாக செய்து முடிக்க தேவையான அளவிடும் கருவிகள், வெட்டுக் கருவிகள் மற்றும் பணிப் பொருளை பிடிக்கும்கருவிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் திறன்.
    • தகவல்தொடர்பு கொள்ளும் திறன்.

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • பாதுகாப்பாக வேலை செய்யும் நடைமுறைகள், பணியிடத்தை சுத்தமாக வைத்திருத்தல் பற்றி அறிந்திருத்தல்
    • வழக்கமான மற்றும் சி.என்.சி லேத்தினை இயக்க அறிந்திருத்தல்
    • ஜியோமெட்ரிக் டாலரென்ஸ் பற்றிய அறிவை அறிந்திருத்தல்
    • இயந்திரங்களில் ஏற்படும் இயக்கப் பிழைகளுக்கான காரணம் கண்டறிந்து பழுதுகள் சரிசெய்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • அரசு ஐடிஐ மற்றும் பொறியியல் கல்லுரிகளில் பணிமனை உதவியாளர் பணி
    • மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களான பாரத் கெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்,  நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்திய ரயில்வே, கெவிவெகிகல் பாக்டரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சுரங்கம், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், அணுமின் நிலையம் மற்றும் பல
    • தனியார் பெரு உற்பத்தி நிறுவனங்களான போர்ட், ரெனால்ட், கூண்டாய், டி.வி.எஸ்
    • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில்
    • இயந்திர வெட்டுக்கருவி உற்பத்தி நிறுவனங்கள் அடிசான், எஸ்.ஆர்.பி.லிட்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • பயிற்சி இயந்திர ஆபரேட்டர், இயந்திர ஆபரேட்டர், அரை திறனுடைய வேலையாள்

இடைநிலை

    • சி.என்.சி. மெசின் ஆபரேட்டர், முழு திறனுடைய வேலையாள் (கிரேடு 1,2,3) , போர்மேன், மேற்பார்வையாளர்,

முதுநிலை

    • இளநிலை பணி மேலாளர், பணி மேலாளர், தொழில் முனைவோர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற்சாலையில் தொழிற் பழகுநர் ஆக சேரலாம்.
    • ஐடிஐ யில் பயிற்றுநராக பணியில் சேருவதற்கு பயிற்றுநர் பயிற்சி சி.ஐ.டி.எஸ் மையத்தில் சேர்ந்து சான்றிதழை பெறுதல்
    • பட்டய பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேருதல் (டிப்ளோமா படிப்பு)
    • தேசிய திறன் பயிற்சி மையங்களில் நடைபெறும் சிறப்பு குறுகிய கால வகுப்புகளில் சேரலாம், (கேட், கேம் வகுப்புகள்)
    • டி.ஜி.டி. யால் நடத்தப்படும் மேம்படுத்தப்பட்ட பட்டயப்படிப்பில் சேராலாம்

பற்றவைப்பவர்

(பொறியியல் பிரிவு/ஒரு ஆண்டு/NSQF LEVEL- 4)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • கருவிகள் ,உபகரணங்களை பாதுகாப்பாக கையாளும் விதம்
    • பல்வேறு வகையான ஏசி மற்றும் டிசி வெல்டிங் மெசின்களை கையாளுதல்
    • ஆர்க் வெல்டிங் இணைப்பு முறைகள்
    • வாயு (கேஸ்) வெல்டிங் இணைப்பு முறைகள்
    • வாயு வெட்டு (கேஸ் கட்டிங்) செய்யும் முறைகள்
    • கேஸ் டங்ஸ்டன் ஆர்க் வெல்டிங் முறைகள்
    • கேஸ் மெட்டல் ஆர்க் வெல்டிங் முறைகள்
    • வெல்டிங் இணைப்பில் உள்ள குறைகளை கண்டறிந்து சரி செய்யும் முறைகள்
    • வெல்டிங் இணைப்புகளை பரிசோதனை செய்யும் முறைகள்
    • தொழிற்சாலை விதிமுறைகளை பின்பற்றுதல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • மெட்டலுக்கு தகுந்த எலக்ட்ராடுகளை தேர்வு செய்தல்
    • வெல்டிங் வேலையில் அனைத்து நிலைகளிலும் வெல்டிங் செய்தல்
    • உருமாற்றம் வராமல் தகுந்த விதிமுறைகளை பின்பற்றிவெல்டிங் செய்தல்
    • கருவிகள் மற்றும் உபகரணங்களை முறையாக கையாளுதல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு நிறுவனங்களான பாரத் கெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், ,நெய்வேலி நிலக்கரி சுரங்கம், இந்திய ரயில்வே, கெவி வெகிகல் பாக்டரி, எஃகு தொழிற்சாலை
    • தனியார் நிறுவனங்களான போர்ட், ரெனால்ட், கூண்டாய், ராயல் என்பீல்டு, டி.வி.எஸ், யமகா, மாருதி, சுசுகி, வெல்டிங் பணிமனை, கட்டுருவாக்கும் பணிகள்
    • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில்
    • சுயதொழில்
    • தொழில் முனைவோர்
    • வெளிநாடு வேலை வாய்ப்புகள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • தொழில் பயிற்சி நிலையங்களில் பணிமனை உதவியாளர், வெல்டிங் உதவியாளர்

இடைநிலை

    • தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர், ஸ்கில்டு வெல்டர்

முதுநிலை

    • மேற்பார்வையாளர், மேலாளர், பயிற்சி அலுவலர், தொழில் முனைவோர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • வேலை பழகுநர் ஆக சேராலம்.
    • கைவினைஞர் திட்ட பயிற்றுநர் பயிற்சி
    • வெளிநாடு செல்ல வெல்டிங் பரிசோதனை, சிறப்பு வெல்டிங் பயிற்சி

 

கம்மியர் மோட்டார் வாகனம்

(பொறியியல் பிரிவு /இரு ஆண்டு/NSQF LEVEL-5)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செய்தல்
    • வாகனத்தில் டிரான்ஸ்மிசன், சஸ்பென்சன், ஸ்டியரிங், பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்தல்
    • வாகனத்தில் உள்ள எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்தல்
    • இலகு ரக வாகனத்தை பயன்படுத்தி ஓட்டுநர் பயிற்சியில் பல்வேறு திறன்களை வழங்குதல்,
    • டயர் வல்கனைசிங் மற்றும் வீல் அலைன்மென்ட் செய்தல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • சர்வீஸ் மேனுவல்படி வாகனத்தை சர்வீஸ் செய்யதல்
    • போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டுதல்
    • மின்சார வாகன செயல்பாடு பற்றி அறிந்திருத்தல்
    • தரமான முறையிலும் குறித்த நேரத்திலும் வேலைசெய்து முடித்தல்
    • உபகரணங்களை கையாளும் திறன் பெற்றிருத்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • ஏர்போர்ட், இந்திய ரயில்வே, கெவிவெகிகல் பாக்டரி மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பணிமனைகள்
    • மாநில அரசு தானியங்கி பணிமனைகள், மத்திய, மாநில அரசு போக்குவரத்து பணிமனை
    • டிபன்ஸ் ரிசர்ச் டெவலப்மென்ட் ஆர்கனைசேசன், இஸ்ரோ பணிமனைகள்
    • மண்டல பணிமனைகள்( மருத்துவம்)
    • டி.வி.எஸ், யமகா, மாருதி, கூண்டாய், சுசுகி போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
    • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
    • ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்றுநராகவும், உரிமையாளராகவும் வாய்ப்பு

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • செமி ஸ்கில்டு டெக்னீசியன், உதவியாளர், பணிமனை உதவியாளர்,

இடைநிலை

    • உதவியாளர், போர்மேன், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர்

 முதுநிலை

    • மேலாளர், தொழில் முனைவோர், பயிற்சி அலுவலர், சுயதொழில்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற் பழகுநர் ஆக சேராலம்.
    • ஐடிஐ யில் பயிற்றுநராக பணியில் சேருவதற்கு பயிற்றுநர் பயிற்சி சி.ஐ.டி.எஸ் மையத்தில் சேர்ந்து சான்றிதழை பெறுதல்
    • பட்டய பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேருதல் (டிப்ளோமா படிப்பு)

கம்மியர் கருவிகள்

(பொறியியல் பிரிவு/இரு ஆண்டு /NSQFLEVEL- 5)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • மின்சாரதை அளக்கும் கருவிகளை சோதித்தல், பழுது பார்த்தல் மற்றும் அளவு திருத்தம் செய்தல்
    • அழுத்தம், ஓட்டம், நிலை, வெப்பம், வேகம் போன்ற மாறிகளை அளக்கும் கருவிகளை சோதித்தல், பழுது பார்த்தல் மற்றும் அளவு திருத்தம் செய்தல்
    • டிரான்ஸ்மிட்டர் மற்றும் கட்டுப்பாட்டு வால்வுகளை சோதித்தல், பொருத்துதல் மற்றும் அளவு திருத்தம் செய்தல்
    • வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு பி.எல்.சி ஐ வடிவமைத்தல்
    • எஸ்.சி.எ.டி.ஏ. டி.சி.எஸ் ஆகிய தொழிற்சாலைகளில் தானாக இயங்கும் ஆலைகளில் பயன்படுத்துதல்
    • கைட்ராலிக்ஸ் மற்றும் நியுமேட்டிக்ஸ் இயங்கும் விதங்களை தெரிந்து கொள்ளுதல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • மின், மின்னணு மற்றும் செயல்முறை மாறிகளை அளக்கும் கருவிகளை அளவு திருத்தம் செய்யும் திறன்
    • ஆலைகளை கட்டுப்படுத்தும் நுட்பம், பராமரித்தல் மற்றும் அதற்குரிய ஆவணங்களை கையாளுதல்
    • டிரான்ஸ்மிட்டர் மற்றும் கட்டுப்படுத்தும் வால்வுகளை எந்த கசிவும் இல்லாமல் பொருத்துதல் மற்றும் அதனை திருத்தம் செய்தல்
    • பி.எல்.சி. எஸ்.சி.எ.டி.ஏ. டி.சி.எஸ், கைட்ராலிக்ஸ் மற்றும் நியுமேட்டிக்ஸ் ஆகியவறை பயன்படுத்தும் திறன் பெற்றிருத்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • தமிழ்நாடு மின்சார வாரியம்
    • இந்திய ரயில்வே
    • அணுமின் நிலையம்
    • இந்திய கடலோர காவல் படை
    • வேலைவாய்ப்பு மற்றும பயிற்சி துறை
    • தமிழ்நாடு செய்திதாள் ஆவணங்கள் லிமிடெட்
    • வெளிநாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள்
    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • உதவியாளர், டெக்னிக்கல் உதவியாளர், அப்ரண்டீஸ்

இடைநிலை

    • ஸ்கில்டு டெக்னீசியன், மேற்பார்வையாளர், சேவை பொறியாளர்

முதுநிலை

    • மேற்பார்வையாளர், பொறியியலாளர், தொழில் முனைவோர், தொழில் நுட்ப வல்லுநர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற் பழகுநர் ஆக சேராலம்.
    • ஐடிஐ யில் பயிற்றுநராக பணியில் சேருவதற்கு பயிற்றுநர் பயிற்சி சி.ஐ.டி.எஸ் மையத்தில் சேர்ந்து சான்றிதழை பெறுதல்
    • கருவி தொழில்நுட்பத்தில் பட்டயம் அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டம்.
    • பி.எல்.சி. கைட்ராலிக்ஸ் மற்றும் நியுமேட்டிக்ஸ் மேம்பட்ட பயிற்சி

 

பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக்

 (பொறியியல் பிரிவு /ஒரு ஆண்டு /NSQF LEVEL- 4)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • டீசல் என்ஜின் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பற்றி அறிதல்
    • பாதுகாக்கும் உபகரணங்களை சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பற்றி அறிதல்
    • பரிமாற்று பம்ப், சுழற்சி பம்ப் மற்றும் மையவிலக்கு விசை பம்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்யும் பயிற்சி
    • பம்ப் செட்டுகளை பராமரித்தல் மற்றும் பிளைன் அண்டு ஜெனரல் போரிங் சர்வீஸ் செய்தல் பயிற்சி
    • எதிர்பாராமல் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் பயிற்சி
    • எரிந்த காயில்கள், சுவிட்சுகள், கேபிள்கள் மற்றும் பியுஸ்களை மாற்றுதல் பயிற்சி
    • ஏ.சி. மோட்டார் பம்ப் டி.ஓ.எல். களில் ஏற்படும் குறைபாடுகளையும் மற்றும் பைப் பிட்டிங்கில் ஏற்படும் கசிவுகளையும் சரிசெய்யும் பயிற்சி,

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • சர்வீஸ் மேனுவல்படி சர்வீஸ் செய்தல்
    • தரமான முறையிலும் குறித்த நேரத்திலும் வேலையை முடித்தல்,
    • கருவிகளை கையாளும் திறன் பெற்றிருத்தல்
    • பைப் பிட்டிங் பற்றி அறிந்திருத்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • தொழிற்பயிற்சி நிலையங்கள்
    • மாநில அரசின் குடிநீர் வடிகால் வாரியம், அணைகள்
    • மத்திய அரசின் ரயில்வே, துறைமுகம், அணுசக்தி நிலையங்கள்
    • ஆட்டோமொபைல் பணிமனைகள்
    • கட்டுமான பணிகள்
    • சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள்
    • சர்க்கரை ஆலைகள், இரசாயன தொழிற்சாலைகள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • செமி ஸ்கில்டு டெக்னீசியன், உதவியாளர், பணிமனை உதவியாளர்

இடைநிலை

    • ஸ்கில்டு டெக்னீசியன், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர்

முதுநிலை

    • மேனேஜர், பயிற்சி அலுவலர், தொழில் முனைவோர், சுய வேலைவாய்ப்பு

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற் பழகுநர் பயிற்சி.
    • கைவினைஞர் திட்ட பயிற்சி
    • பட்டப்பொறியியல் (டிப்ளோமா)

கம்மியர் டீசல்

(பொறியியல் பிரிவு /ஒரு ஆண்டு /NSQF LEVEL- 4)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பாகங்கள் மற்றும் இயங்கும் முறையை அறிதல்
    • டீசல் என்ஜின் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பற்றி அறிதல்
    • ஸ்கேன் கருவியைப் பயன்படுத்தி என்ஜினில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்தல்
    • எரிபொருள் செலுத்தும் அமைப்பில் பியுல் என்ஜின் பம்ப், சி.ஆர்.டி.ஐ, டர்போ சார்ஜரில் ஏற்படும் குறைகளை சரிசெய்தல்
    • டீசல் என்ஜினில் செய்ய வேண்டிய காலமுறை பராமரிப்பு மற்றும் கேஸ் அனலைசர் பயன்படுத்தி மாசு கட்டுப்பாட்டு அளவை அறிதல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • சர்வீஸ் மேனுவல்படி சர்வீஸ் செய்தல்
    • தரமான முறையிலும் குறித்த நேரத்திலும் வேலையை முடித்தல்,
    • கருவிகள் மற்றும் உபகரணங்களை கையாளும் திறன் பெற்றிருத்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • தொழிற்பயிற்சி நிலையங்கள், பொறியியல் காலேஜ்
    • மத்திய, மாநில அரசின் நிறுவனங்களான அரசு தானியங்கி பணிமனை, மணடல பணிமனை (மருத்துவம்)
    • டி.வி.எஸ், சிம்சன், டேபே நிறுவனங்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேசன்கள்
    • சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • செமி ஸ்கில்டு டெக்னீசியன், உதவியாளர், பணிமனை உதவியாளர்

இடைநிலை

    • ஸ்கில்டு டெக்னீசியன், போர்மேன், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர்

முதுநிலை

    • மேனேஜர், பயிற்சி அலுவலர், தொழில் முனைவோர், சுய தொழில்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற் பழகுநர் பயிற்சி.
    • கைவினைஞர் திட்ட பயிற்சி
    • பட்டப்பொறியியல் (டிப்ளோமா)

ஒயர்மேன்

(பொறியியல் பிரிவு /இரண்டு ஆண்டு /NSQF LEVEL-5)

ஐ.டி.ஐ.யில் பயிற்றுவிக்கப்படும் திறன்கள்

    • சோதனை சாதனங்கள், சால்டரிங் அயன், ஒயர் ஸ்டிப்பர், சுத்தியல் மற்றும் ஸ்கூரு டிரைவர் போன்ற நிலையான கருவிகள் மற்றும் கான்டியுட் கருவிகளை கையாளுதல்,
    • வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின் வயரிங் மற்றும் அதன் அமைப்புகளை சரிசெய்தல்
    • பல்வேறு வகையான வயரிங் அமைப்பின் திட்டம், மதிப்பீடு செலவுகளை கணக்கிடுதல்,
    • கனிணி வலையமைப்பு வயரிங் சர்க்கியுட்களை திட்டமிடல், வரைதல், மதிப்பிடல், அதன் தரத்தை கவனித்து கொள்ளுதல்
    • கன்ட்ரோல் பேனல் வயரிங்கை தேர்ந்தெடுத்தல், அசம்பிள் மற்றும் சோதனை செய்தல்
    • சிங்கிள் பேஸ் மற்றும் த்ரி பேஸ் இன்டக்சன் மோட்டார்களை நிறுவி, இயக்க தேவையான ஸ்டார்டர்களை இந்திய மின்சார விதிகளின்படி வயரிங் செய்து இயக்குதல்

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்

    • பல்வேறு வகையான மின்வயரிங் அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வயரிங் நிறுவுதல் மற்றும் பராமரித்தல்
    • பணி ஆர்டர்கள், அவுட்லைன் வரைபடங்கள், திட்டம் அல்லது பொறியாளர்களை பயன்படுத்தி வரைதல் ஆகியவற்றை பயன்படுத்தி உயர் மின்னழுத்த இயக்கிகளை நிறுவி இயக்குதல்
    • அனைத்து வகையான மின் அமைப்புகள், ஓபன், குளோஸ், ஸ்டார் உள் அமைப்புகளை அறிந்திருத்தல்

ஐ.டி.ஐ. முடித்தபின் வேலைவாய்ப்புகள்

    • மாநில அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள், பொறியியல் காலேஜ், பணிமனை உதவியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், மருத்துவமனை
    • மாநில அரசின் சுகர் மில்ஸ், மருத்துவமனை
    • மத்திய அரசின் ரயில்வே, பெல், ஓ.என்.ஜி.சி, இஸ்ரோ
    • தனியார் நிறுவனங்கள்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்னவாகலாம்?

ஆரம்ப நிலை

    • உதவியாளர், பயிற்சியாளர், தொழிற்பழகுநர்

இடைநிலை

    • லைன்மேன், ,மேற்பார்வையாளர், இளநிலை பயிற்சி அலுவலர், ஆய்வக உதவியாளர்

முதுநிலை

    • போர்மேன், சீப் இன்சார்ஜ், பயிற்சி அலுவலர்

ஐ.டி.ஐ. முடித்தபின் என்ன படிக்கலாம்

    • தொழிற்பழகுநராக சேர்ந்து தேசிய தொழில்பழகுநர் சான்றிதழ் பெறலாம்
    • தேசிய திறன் பயிற்சி மையங்களில் நடத்தப்படும் குறுகிய கால பயிற்சிகளில் சேராலாம்.
    • கைவினைஞர் திட்ட பயிற்சி

தொடர்பு முகவரி
முதல்வர்
அரசினர்தொழிற்பயிற்சி நிலையம்
திருக்கோகர்ணம் அஞ்சல்,
புதுக்கோட்டை 622002
தொலைபேசி எண்:04322-221584, 04322-224584
மின்னஞ்சல் முகவரி:principalgitipdkt@gmail.com