முடிவு

முக்கிய நிகழ்வுகளும் விழாக்களும்

ஜல்லி கட்டு நிகழ்ச்சி

ஜல்லிகட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் காண்பதற்கரிய சுமார் 25 இடங்களில் நடைபெற்று வரும் நிகழ்வாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, திருவப்பூா், ஆலத்தூர், மற்றும் திருநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லி கட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டு விராலிமலையில் நடைபெற்ற ஜல்லி கட்டு நிகழ்ச்சியில் 34 வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பொங்கல் விழா

தமிழ்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சுற்றுலாத்துறை சார்பில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் அவா்கள் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்கள். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உலக சுற்றுலா தினவிழா

சுற்றுலா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுலா தின விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டையில் சித்தன்ன வாசல் சுற்றுலாத் தலத்தில் செப்டம்பா் 27 ஆம் நாள் 2018 ஆம் ஆண்டு சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு குடும்ப நலத்துறை அமைச்சா் அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தூய்மை விழிப்புணா்வு முகாம்

சுற்றுலாத்தலங்களில் தூய்மையின் அவசியத்தினை சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த தூய்மை விழிப்புணா்வு முகாம் சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தில் 10.10.2017 அன்று நடைபெற்றது. H.H. இராஜா கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவா்கள் கலந்து கொண்டு சித்தன்ன வாசல் சுற்றுலாத் தலத்தினை தூய்மை செய்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

பள்ளி மாணவா்களிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத் துறை நிதியுதவியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 150 ஏழை மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு திருமயம் கோட்டை, சித்தன்னவாசல், கோளரங்கம் திருச்சி, குடுமியான் மலை போன்ற சுற்றுலா தலத்திற்கு இலவசமாக 21.02.2018 அன்று அழைத்து செல்லப்பட்டனா். மாவட்ட ஆட்சியா் புதுக்கோட்டை மற்றும் சார் ஆட்சியா் புதுக்கோட்டை ஆகியோர் கலந்து சுற்றுலாவை துவக்கி வைத்து சிறப்பித்தனா்.