முடிவு

மாவட்டத்தைப் பற்றி

தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு, கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்ட இம்மாவட்டம், நில மற்றும் கடல் இயற்கை வளங்களை கொண்டுள்ளது. தமிழக வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவுடையார்கோவில் கோயில், குடுமியான்மலை, பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இசுலாமியர்களின் காட்டுபாவா பள்ளிவாசலும், பழமைவாய்ந்த ஆவூர் கிறிஸ்தவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்னவாசலும் இம்மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தை பறை சாற்றுகின்றன. விராலிமலையிலுள்ள மயில்கள் சரணாலயமும், மலைகளிலும் குகைகளிலும் வடிவமைக்கப்பட்ட கோயில்களும் பிரதான சுற்றுலா தலங்களாகும்.

Tmt I. S. Mercy Ramya IAS
திருமதி. ஐ.சா. மெர்சி ரம்யா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்
  • பதிதல்கள் ஏதுமில்லை

மாவட்டம் – ஒரு கண்ணோட்டம்

பொது:

மாவட்டம்: புதுக்கோட்டை
தலைமை இடம்: புதுக்கோட்டை
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 4663 ச.கி.மீ

மக்கள் தொகை:

மொத்தம்: 1618345
ஆண்கள்: 803188
பெண்கள்: 815157
கிராமம்: 1301991
நகரம்: 316354
  • திருமயம் கோட்டை முகப்பு காட்சி
    திருமயம் கோட்டை
  • சித்தன்னவாசல் - மலை.
    சித்தன்னவாசல் - மலை காட்சி
  • புதுக்கோட்டை அருங்காட்சியகம் - மரபடிமம் .
    புதுக்கோட்டை அருங்காட்சியகம் - மரபடிமம்