வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
வேளாண் விரிவாக்கத் திட்டப் பணிகள் – (அட்மா)
மாவட்ட அளவில் செயல்பாடுகள்
அட்மா ஆட்சிமன்றக் குழு
மாவட்ட அளவில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கொள்கைகளை வரையறுப்பதோடு உரிய முறையில் வழிகாட்டுதல், திட்ட செயலாக்கத்தினை ஆய்வு செய்தல் ஆகியவை அட்மா ஆட்சி மன்றக் குழுவின் பணியாகும்.
அட்மா நிர்வாகக் குழு
அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் செயல் திட்டத்தினை தயாரித்து அதனை செயல்படுத்தும் முக்கிய பணி தொழில்நுட்ப மேலாண்மை முகமை நிர்வாகக் குழுவின் பணியாகும்.
வட்டார அளவில் செயல்பாடுகள்
வட்டார தொழில்நுட்பக் குழு
இது வட்டார அளவில் அமைக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. அவை வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு மற்றும் வட்டார தொழில்நுட்பக் குழு ஆகும். வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு என்பது சுமார் 20 முதல் 25 விவசாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவாகும். ஆனால் வட்டார தொழில்நுட்பக் குழு என்பது வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர்களை கொண்டதாகும்
விவசாயிகள் பயிற்சி
விவசாயிகள் பயிற்சி( 7, 5 மற்றும் 2 நாட்கள்)
- வெளி மாநில அளவிலான பயிற்சி
- உள் மாநில அளவிலான பயிற்சி
- உள் மாவட்ட அளவிலான பயிற்சி
செயல்விளக்கங்கள்
- செயல்விளக்கங்கள் (வேளாண் துறை)
- செயல்விளக்கங்கள் (சகோதரத்துறை)
விவசாயிகள் கல்விச் சுற்றுலா – அதிக பட்சமாக 10 நாட்கள்
- வெளி மாநில அளவிலான கல்விச் சுற்றுலா
- உள் மாநில அளவிலான கல்விச் சுற்றுலா
- உள்மாவட்ட அளவிலான கல்விச் சுற்றுலா
குழுக்களை உருவாக்குதல்
- விவசாயக் குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
- சுழல்நிதி வழங்குதல்