முடிவு

முன்னாள் படைவீரர் நல அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர் அவர் தம் சார்ந்தோருக்கான நலத்திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துறை சென்னை தலைமை செயலகத்திலுள்ள பொது(முபவீ)த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தின் ஆளுமையில் செயல்பட்டுவருகிறது. அரசு துணைச்செயலர் பொது(முபவீ)த் துறையின் இயக்குநரும் ஆவார். இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கான நலத்திட்டங்கள் பின்வருமாறு:-

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்துசெயல்படுத்தப்படும் திட்டங்கள்
வ.ண் நிதியுதவி வகை தொகை ரூ.
1 உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி மாதம் 10,000/-
2 உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களது விதவையருக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி மாதம் 4,000/-
3 முன்னாள் படைவீரரது ஆதரவற்ற / அனாதை சிறார்களுக்கான நிதியுதவி உள்ளபடியான கல்வி செலவீனம்
4 முன்னாள் படைவீரர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் தையற்பயிற்சி அலகில் பயின்ற முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான நிதியுதவி இலவச தையல் இயந்திரம்
5 முன்னாள் படைவீரர் நலத்துறை தையல் அலகில் பயிலும் பயிற்சியாளருக்கான நிதியுதவி  பயிற்சி உதவித் தொகை நாள் ஒன்றுக்கு ரூ. 50/- மற்றும் மூலப் பொருட்களுக்கானநிதியுதவி ரூ. 1,000/-
6 அரசு பொது மருத்துவமனைகள் / மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் தமிழகஅரசால் அங்கீகரிக்கப்பட்ட நல ஆக்க நிலையங்களில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் காசநோய் / தொழுநோய் / புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கான நிதியுதவி கைசெலவு பணம் தினந்தோறும் ரூ. 50/-
7 நல ஆக்க நிலையங்களில் உள்ளகாசநோய் / தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் தனதுவீட்டிற்கு சென்று வர நிதியுதவி வருடம் ஒருமுறை போக்குவரத்துக் கட்டணம்
8 சிறப்பு மருத்துவரது பரிந்துரையின் படி வாங்கப்படும் பற்சட்டம், கண்ணாடி, காதுகேட்கும் கருவி, அறுவை சிகிச்சைபூட்ஸ் / ஜாக்கொட்ஸ் / செயற்கை உபகரணம் / ஊன்றுகோல் அல்லது இதர உபகரணங்களுக்கான நிதியுதவி ரூ. 4,000/- வரை
9 பூனே கிர்கியில் உள்ள ஊனமுற்ற படைவீரர்களுக்கான குயின்மேரிஸ் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெறுபவர்களுக்கான மாதாந்திர பயிற்சி உதவித்தொகை மாதம் ரூ. 900/-
10 கண்பார்வை குறைபாடு உள்ளோருக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
11 தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 5,000/-
12 புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
13 பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
14 காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கானஆயட்காலநிதியுதவி மாதம் ரூ. 5,000/-
15 முன்னாள் படைவீரரைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயுட்கால நிதியுதவி மாதம் ரூ. 5,000/-
16 ஓய்வுதியம் ஏதும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கான மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை அல்லது இருதய அறுவை சிகிச்சை போன்ற பெரிய அறுவை சிகிச்சைகளுக்கான நிதியுதவி மொத்தமாக 50,000/-
17 முன்னாள் படைவீரரது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
18 முன்னாள் படைவீரரது மனநலன் குன்றிய மனைவி / விதவைக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
19 புற்றுநோய், பக்கவாதம், முழுமையாக கண்பார்வை குறைபாடுள்ள முன்னாள் படைவீரரின் குழந்தைக்கான ஆயட்கால நிதியுதவி மாதம் ரூ. 7,000/-
20 காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரரின் குழந்தைக்கான ஆயுட்கால நிதியுதவி மாதம் ரூ. 5,000/-
21 முன்னாள் படைவீரரது இரு பெண் குழந்தைகளுக்கான திருமணமானியம் 25,000/-
22 60 வயதிற்குமேற்பட்ட / வேலைசெய்ய இயலாத / ஓய்வுதியம் ஏதும் பெறாதவருமானம் ஏதும் ஈட்ட இயலாத நிலையில் உள்ளமுன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவையர்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி மாதம் ரூ. 4,000/-
23 தீ, வெள்ளம், கலவரம், விபத்து மற்றும் இதர இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இறப்பின் துயர் துடைப்பதற்கான நிதியுதவி அதிகபட்சமாக ரூ. 15,000/-
24 போர் விதவையர் போரில் ஊனமுற்றோர் சக்ராவீர விருதுபெற்றோர் மற்றும் இராணுவ குடும்ப ஓய்வுதியம் பெறும் விதவையருக்கு வீட்டுவரிச் சலுகை. வீட்டுவரி மீளப்பெறுதல்
25 தொழுநோயால் பாதிக்கப்பட்டமுன்னாள் படைவீரர் அவரது விதவையருக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் ரூ. 2,500/– மதிப்பிலான பொருட்கள்
26 முன்னாள் படைவீரர் இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியம் ரூ. 10,000/-
27 முன்னாள் படைவீரரது விதவையர் இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியம் ரூ. 7,000/-
28 உடல் வளர்ச்சி குன்றிய (Dwarf) முன்னாள் படைவீரர் சிறார்களுக்கான ஆயுட்கால நிதியுதவி ரூ. 5,000/-
29 வீட்டுக்கடன் மானியம் (முன்னாள் படைவீரர் / விதவையர் முதன் முதலில் கட்டும் / வாங்கும் வீட்டிற்கு மட்டும்) ரூ. 1,00,000/-(ஒருமுறை மட்டும்)
30 தொழில்நுட்ப பயிற்சிகள் பயிலும் முன்னாள் படைவீரர்கள் / கைம்பெண்கள்/சிறார்களுக்கு நிதியுதவி

 

தட்டச்சு கீழ்நிலை ரூ. 3,000/-

தட்டச்சு மேல்நிலை ரூ. 5,000/-

சுருக்கெழுத்து கீழ்நிலை ரூ. 7,000/-

சுருக்கெழுத்து மேல்நிலை ரூ. 10,000/-

31 இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தும் செலவினம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஈடுசெய்தல் ரூ. 6,00,000/-(அதிகபட்சம் 5 திரளணிகளுக்கு மட்டும்)

 

தொகுப்புநிதியில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்

போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான நலத்திட்டங்கள்

     போர் மற்றும் போர் ஒத்தநடவடிக்கைகளில் 50 சதவீதத்திற்குமேல் ஊனமுற்ற மற்றும் மரணம் அடைந்தமுன்னாள் படைவீருர்களின் மகள்களுக்குதிருமண  நிதியுதவியாக ரூ. 1,00,000/- மற்றும் திருமாங்கல்யம் செய்வற்காக 8 கிராம் தங்கநாணயம் வழங்கப்படுகிறது. 50 சதவீதத்திற்குகீழ் ஊனமுற்ற முன்னாள்       படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 50,000/- மற்றும்           திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்கநாணயம் வழங்கப்படுகிறது.

  • போர் மற்றும் போர் ஒத்த நடவடிக்கைகளில் மரணமடைந்த படைவீரர் குடும்பத்திற்க்கும் மற்றும் ஊனமுற்றோருக்கும் வருடாந்திர பராமரிப்பு   மானியம்      ரூ. 25,000/- ஆயுள் முழுவதும் வழங்கப்படுகிறது.
  • போரில் மற்றும் போரை ஒத்த நடவடிக்கைகளில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கும் / ஊனமுற்ற முன்னாள் படைவீரருக்கும் வீடுபராமரிப்பு மானியம் ரூ. 50,000/- வழங்கப்படுகிறது.
  • போரில் வீரமரணம் அடைந்த படைவீரர் மனைவிக்கு கருணைத்      தொகையாக ரூ. 1,00,000/-ம் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள்       படைவீரருக்கு ரூ. 50,000/-ம் வழங்கப்படுகிறது.

சுயதொழில் செய்வோருக்கான ஆதரவு நடவடிக்கைகள்

  • சுயதொழில் செய்யும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் விதவைவாங்கும்      வங்கி கடனில் ரூ. 10,00,000/-வரை உள்ள தொகைக்கு 75 சதவீதம்          வரை  வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
  • முன்னாள் படைவீரர் மற்றும் விதவையர்கள் மூலம் நடைபெறும் சுயஉதவிக் குழுவிற்கு வங்கிகடன் ரூ. 15,00,000/- வரை வட்டி மானியம் 100 சதவீதம் வழங்கப்படும்.
  • தொழிற்கூடம் அமைத்துதொழில் புரிவோருக்கு மொத்த தொழில் கூட செலவில் 25 சதவீதமானியம் அல்லது ரூ. 50,000/-வரை வழங்கப்படும்.

 முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான கல்வி மேம்பாட்டிற்கு ஆதரவு நடவடிக்கைகள்

  • கல்வி உதவித்தொகையாக முன்னாள் படைவீரர்கள் மகன் / மகளுக்கு ரூ. 500 முதல் ரூ. 10,000/- வரை ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு ஒன்றாம்    வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வகுப்பு வரை வழங்கப்படுகிறது.
  • தொழில் நுட்ப தொழிற்கல்வி தொழில்சார் பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டபடிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகையாக ரூ. 25,000/-(விடுதி கட்டணம் உட்பட) வழங்கப்படுகிறது.
  • பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் ரூ 20,000/-(விடுதிகட்டணம்    உட்பட) வழங்கப்படுகிறது.
  • தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சான்றிதழ் படிப்புகள் பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி  உதவித்தொகையாக வருடத்திற்கு ரூ . 10,000/– வழங்கப்படுகிறது.
  • இராணுவத்தில் சேரும் முன்னாள் படைவீரரின் சிறார்களுக்கு தொகுப்பு      மானியம் ரூ. 25,000/– முதல் 1,00,000/– வரை வழங்கப்படுகிறது.

மையமுப்படைவீரர் வாரியத்தின் செயல்பாடுகள்

  • 65 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு மாதம் ரூ. 4,000/- வீதம் நிதியுதவி

சிறுவர்கள் கல்விஉதவித்தொகை

(அ)பட்டப்படிப்பு வரை மாணவர் /  மாணவியருக்கும் மற்றும்  பட்ட மேற்படிப்பு வரை விதவையருக்கும் மாதம் ரூ. 1,000/

(ஆ)தேசியபாதுகாப்பு அகாடமியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பயிற்சிகாலத்தில் மாதம் ரூ. 1,000/

(இ) முன்னாள் படைவீரர்களின் உடல் ஊனமுற்றசிறார்களுக்கு மாதம் ரூ. 1,000/

  • வறுமையில் வாடும் முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் 100% உடல் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் அனாதை மகள்கள் ஆகியோருக்குவீட்டுமராமத்துப் பணிமேற்கொள்ள ரூ. 20,000/-நிதியுதவி.
  • முன்னாள் படைவீரர்கள் / விதவையர்களின் இரண்டு மகள்களுக்கு திருமண     நிதியுதவியாக ரூ. 50,000/-
  • முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் மறுமணத்திற்கு ரூ. 50,000/- நிதியுதவி.
  • முன்னாள் படைவீரர் சுகாதார பங்களிப்பு திட்டத்தில் உறுப்பினரல்லாதமுன்னாள்           படைவீரர்கள் மருத்துவச் செலவுக்குரூ. 30,000/- வரை நிதியுதவி.
  • முன்னாள் படைவீரர்களின் விதவையர்களுக்கு ரூ. 5,000/- ஈமச்சடங்கு   நிதியுதவி.
  • முன்னாள் படைவீரர்களின் அனாதை மகளுக்கு (திருமணமாகும் வரை) மற்றும் ஒருமகனுக்கு (21 வயதுவரை) ரூ. 1,000/- நிதியுதவி.
  • முன்னாள் படைவீரர்களின் விதவையர்களுக்கு தொழிற்பயிற்சி நிதியுதவிரூ. 20,000/- (ஒருதடவை)
  • பாரதப் பிரதமரின் கல்விஉதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அலுவலர் பதவிக்குகுறைந்த பதவியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின்      குழந்தைகள் தொழிற்கல்வி பயில இக்கல்வி உதவித்தொகை மகன்களுக்கு  மாதம் ரூ. 2,500/- வீதமும்மகள்களுக்கு ரூ. 3,000/- வீதமும் வழங்கப்படுகிறது.

மாநில முப்படைவீரர் வாரியம் மற்றும் மாவட்ட முப்படைவீரர் வாரியத்தின் செயல்பாடுகள்

          மாநில முப்படைவீரர்கள் வாரியம் மற்றும் மாவட்ட முப்படைவீரர்கள் வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாடுமுன்னாள் படைவீரர் நலநிதி மற்றும் தொகுப்பு நிதியின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

வங்கிக்கடன் வட்டிமானியத்திட்டம் (BLISS)

திட்டம்  வங்கிக்கடன் பெற்று சுயத்தொழில் செய்வோருக்கும்  மற்றும் வங்கியில் பெற்ற கல்விக் கடன்  பெறுவோருக்கும் 75% வட்டிமானியம் வழங்குதல்
தகுதி முன்னாள் படைவீரர்கள் / விதவைகள் (வயதுவரம்புஇல்லை)
அதிகபட்சகடன் தொகை  வரம்பு இல்லை
வட்டிமானியம் சலுகை கடன் தொகை ரூ. 10,00,000/– வரை மட்டும்

வங்கிலிருந்து கடன் பெறுவதற்கு முன்னரே விண்ணப்பித்திடவேண்டும். ஒவ்வொரு காலாண்டிற்கும் கடனை திருப்பி செலுத்தியதற்கான வங்கி சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டியமுகவரி

உதவி இயக்குநர்
முன்னாள் படைவீரர் நலஅலுவலகம்
கல்யாணராமபுரம் முதல் தெரு
திருக்கோகர்ணம் (அ)
புதுக்கோட்டை – 622002
தொலைபேசி-04322-236593
மின்னஞ்சல் முகவரி-exwelpdk@tn.gov.in