முடிவு

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம்

வேளாண்மை நிலையமாக 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் வேளாண்மைத் துறையில் விரிவாக்கப் பணியில் புதிதாக பணியமர்த்தப்படும் விரிவாக்கப் பணியாளர்களுக்கு புத்தூட்ட பயிற்சி அளிப்பதற்காக 1975-ஆம் ஆண்டு மாநில வேளாண்மை பயிற்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையமாக 1993 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. உலக வங்கி உதவியுடன் இரண்டாம்கட்டமாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் வேளாண்மைத் துறையில் விரிவாக்கப் பணியில் பணியாற்றும் முதுநிலை மற்றும் இடைநிலை அலுவலர்களுக்கு மேலாண்மை பயிற்சி அளிக்க இந்த பயிற்சி நிலையம் மாநில அளவிலான மேலாண்மை பயிற்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. நிலையத்தின் குறிக்கோள் உழவர் பெருமக்கள் உயர் விளைச்சல் பெற்று அதிக லாபம் அடைந்து உன்னத வாழ்வின் உயர் நிலையினை அடைய களப்பணியாளர்களான விரிவாக்க பணியாளர்களுக்கு பயிற்றுவித்தலே ஆகும்.

புதுக்கோட்டை – கொடும்பாளுர் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தூரத்தில் குடுமியான்மலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையத்தின் மூலம் 2007-08 முதல் 2017-18 வரை 16340 தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சு பணியாளர்களுக்கும் அலுவலக நிர்வாகம், அலுவலக மேலாண்மை மற்றும் கணிணி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் 1500 தொழில்நுட்ப அலுவலர்களுக்கும் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் ரூ.30.00 லட்சம் செலவில் பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது.