அறிமுகம்
அனைவருக்கும் கல்வி இயக்கம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், இடை நிற்றலைத் தவிர்த்தல், கல்வியைப் பெறுவதில் இடைவெளி ஏற்படுத்தும் பாலினப் பாகுபாடு மற்றும் சமூகப் பிரிவினைகளை நீக்கி குழந்தைகளின் கற்றலை உறுதி செய்தல் ஆகியவற்றைம் குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் பல்வேறு கற்றல் வழிமுறைகள், புதிய பள்ளிகளைத் துவக்குதல், மாற்றுப் பள்ளி வசதிகளை அமைத்துத் தருதல், பள்ளிக் கட்டிடங்களைக் கட்டித்தருதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், கல்விசார் வளங்களை அளித்து கற்பித்தலுக்கு உதவுதல், பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி மாணவர்களின் கற்றல் அடைவுநிலை மேம்பட உறுதுணையாக உள்ளது. மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் தனது வட்டார வளமையங்களின் மூலம் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்துவதிலும், ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதை கண்காணிப்பதிலும் முக்கியமான பங்கு வகுக்கிறது.
இதற்கெனத் தெரிவு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பணியை அனைவருக்கும் கல்வி இயக்கம் செவ்வனே செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியாளர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார். கல்வி சார் நிர்வாகத் தலைவராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயலாற்றுகிறார். மேலும், உதவித்திட்ட அலுவலர், புள்ளிஇயல் அலுவலர், ஆசியிர் பயிற்றுநர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் உடலியக்க நிபுணர்கள், கட்டிடப் பொறியாளர்கள், கணினி விவரப் பதிவாளர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பணிபுரிகின்றனர்.
திட்டச் செயல்பாடுகள்
பள்ளிகள்
வ எண் | பள்ளிகளின் வகைகள் | அரசு ஊ.ஒ. பள்ளி | அரசு உதவி பெறும் பள்ளி | நக ராட்சி | ஆ. தி. நலம் | மொத்தம் | அரசு உதவி பெறாத தனியார் பள்ளி | மெட்ரிக் பள்ளிகள் | அரசு அனுமதி பெறாத பள்ளி | சிபிஎஸ்சி | மொத்தம் | கூடுதல் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | தொடக்கப் பள்ளிகள் | 1030 | 58 | 9 | 11 | 1108 | 174 | – | 5 | – | 179 | 1287 |
2 | நடுநிலைப் பள்ளிகள் | 283 | 24 | 9 | 2 | 318 | – | 7 | – | 1 | 8 | 326 |
3 | உயர்நிலைப் பள்ளிகள் | 105 | 13 | 3 | 2 | 123 | 7 | 31 | – | 5 | 43 | 166 |
4 | மேல்நிலைப் பள்ளிகள் | 102 | 17 | – | 1 | 120 | 4 | 43 | – | 4 | 51 | 171 |
மொத்தம் | 1520 | 112 | 21 | 16 | 1669 | 185 | 81 | 5 | 10 | 281 | 1950 |
வட்டார வள மையங்களில் ஆசிரியர் பயிற்சி
ஆண்டு | வட்டார வள மையங்களின் எண்ணிக்கை | பயிற்சி வழங்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை | ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை | பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் நாட்களின் எண்ணிக்கை | செலவு செய்த தொகை (இலட்சம்) | செலவிடப்பட வேண்டிய தொகை ய தொகை (இலட்சம்) |
---|---|---|---|---|---|---|
2016-17 | 13 | 54234 | 72.92 | 50.574 | 49.03 | 0 |
2017-18 | 13 | 55203 | 95.13 | 40.100 | 36.24 | 58.89 |
மொத்தம் | 109437 | 168.05 | 90.674 | 85.27 | 58.89 |
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 05.03.2018 முதல் 28.03.2018 வரை 20 நாட்கள் பயிற்சி வழங்கவும் மற்றும் மாநிலத்திட்ட இயக்ககத்திலிருந்து நேரடியாக (Journal entry) அச்சகத்தாரர்களுக்கு தொகை வழங்கவும் ரூ.58.89 இலட்சம்) செலவிடப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் 6278 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 20 நாட்கள் பணியிடைப்பயிற்சி வழங்கப்படுகிறது. மேற்கண்ட அட்டவணையில் வழங்கப்பட்ட மொத்த பயிற்சி நாட்கள் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது
பள்ளிக் கட்டிடங்கள்
2016-2017 ஆம் கல்வி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவறை கட்டும்பணிகளுக்கு உரிய தொகை 2017 – 18 ஆம் கல்வி ஆண்டில் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 75 கழிவறை கட்டும் பணிகளும் முடிவுற்றன. 2016-2017 மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான வகுப்பறை மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
2016-2017வகுப்பறை மராமத்துப் பணிகள்122.02724.32
ஆண்டு | வேலை | ஒதுக்கப்பட்ட பணிகள் | 1 யூனிட் (இலட்சம்) | தொகை (இலட்சம்) |
---|---|---|---|---|
2016-2017 | ஆண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் | 22 | 1.96 | 43.12 |
2016-2017 | பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் | 8 | 2.066 | 16.528 |
2016-2017 | மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் | 45 | 0.88 | 39.6 |
2017-2018 | வகுப்பறை மராமத்துப் பணிகள் | 10 | 2.381 | 23.81 |
2017-18 ஆம் கல்வி ஆண்டில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான 51 கழிவறை கட்டும் பணிகள் ரூ.44,88 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான கல்வி
ஆண்டு | பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை | ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை | பயனடைந்த குழந்தைகளின் எண் | செலவு செய்யப்பட்ட தொகை |
---|---|---|---|---|
2016-2017 | 689 | 44.43 | 689 | 44.43 |
2017-2018 | 730 | 46.31 | 730 | 46.31 |
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணக்கெடுப்பு பணி சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியப்பயிற்றுநர்களால் மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்படும் சிறப்புக் குழந்தைகள் அரசுப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அலிம்கோ நிறுவனத்திடமிருந்து உதவி உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
மேலும் இக்குழந்தைகளின் பயிற்சிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறப்பாசிரியர், உடலியக்கப் பயிற்சியாளர்கள் ஊதியம் மாதம் ரூ.16000/- வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து பயணப்படியாக ஒரு குழந்தைக்கு தலா ரூ.300 மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டு | மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் எண் | ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (இ | பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை | செலவு செய்யப்பட்ட தொகை(இலட்சம்) |
---|---|---|---|---|
2016-2017 | 4236 | 104.84758 | 4236 | 104.84758 |
2017-2018 | 4201 | 99.126 | 4201 | 99.126 |
பள்ளிப் பராமரிப்பு மானியம்
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை தூய்மை, குடி நீர் இணைப்புகள் சரிசெய்தல், பள்ளிகளில் தரைதளம் சரிசெய்தல், வண்ணம் பூசுதல் மற்றும் மின்இணைப்புகள் சரிபார்த்தல் போன்ற பணிகளுக்கான பள்ளி பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது.
ஆண்டு | பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை | ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (இலட்சம்) | பயனடைந்த பள்ளிகளின எண்ணிக்கை | செலவு செய்யப்பட்ட தொகை (இலட்சம்) |
---|---|---|---|---|
2016-2017 | 1550 | 115.6 | 1550 | 115.6 |
2017-2018 | 1550 | 116.1 | 1550 | 116.1 |
பள்ளி மானியம்
அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல் வழி மற்றும் படைப்பாற்றல் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல். எழுதும் பலகை மற்றும் கீழ்மட்ட கரும்பலகை வண்ணம் பூசுதல், தீயணைப்பான் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான பொட்கள் வாங்குவதற்காக பள்ளி மானியம் வழங்கப்படுகிறது.
ஆண்டு | பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை | ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (இலட்சம்) | பயனடைந்த பள்ளிகளின எண்ணிக்கை | செலவு செய்யப்பட்ட தொகை (இலட்சம்) |
---|---|---|---|---|
2016-2017 | 1662 | 110.25 | 1662 | 110.25 |
2017-2018 | 1662 | 110.25 | 1662 | 110.25 |
திட்ட ஒதுக்கீடு
ஆண்டு | மொத்தம் ஒதுக்கீடு (இலட்சம்) | பெறப்பட்ட தொகை (இலட்சம்) | செலவழிக்கப்பட்டதொகை இலட்சம்) | சதவீதம் |
---|---|---|---|---|
2016-2017 | 9765.661 | 8762.971 | 8735.661 | 99 |
2017-2018 | 10338.017 | 3558.829 | 3537.929 | 99 |
குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி தனியார் சுயநிதிப் பள்ளிகள் 25% இட ஒதுக்கீடு விவரம்
அரசாணை எண் 60 பள்ளிக் கல்வித்துறை நாள் 02.04.2013 சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர மேம்பாடு
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வதுடன் மாணவர்களின் கற்றல் திறனில் தர மேம்பாடு அடைய கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
-
தரக் கண்காணிப்பு முறைமையின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் இரண்டாம் பருவத் தேர்வு முடிவுகள் (கல்வி மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள்) பள்ளி வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
-
ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பள்ளிகளைப் பார்வையிடும்போது தழிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களின் வாசிப்புத் திறன், பிழையின்றி எழுதும் திறன் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை செய்யும் திறன்களை மாணவர்கள் வாரியாக மதிப்பீடு செய்கின்றனர். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி, தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பள்ளியிலேயே வழங்கப்படுகிறது
-
2017 – 2018 ஆம் கல்வி ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வானது ஜுலை 2017 மற்றும் ஆகஸ்டு 2017 முதல் கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2018 மற்றும் மார்ச் 2018 வரை இரண்டாம் கட்ட அடைவுத்திறன் தேர்வு நடைபெற்றுள்ளது.
-
முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட அடைவுத்திறன் தேர்வு மதிப்பெண்களை ஒப்பீடு செய்து முன்னேற்றம் அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டுகளும் முன்னேற்றம் இல்லாத பள்ளிகளுக்கு தனித்தனியாக செயல்திட்டம் பள்ளிகளில் தயார் செய்யப்பட்டு அதனை ஜுன் 2018 முதல் அப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
-
ஆசிரியர்களின் செயல்திறன்கள் PINDICS (PERFORMANCE INDICATORS) மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் ஆசிரியர்களின் விவரங்கள், அவர்களின் கற்றல் கற்பித்தல் வேலை நாட்கள், பயிற்சியில் பெற்ற தகவல்களை வகுப்பறையில் பயன்படுத்துதல், ஆசிரியர்களிடம் உள்ள தனித்திறமைகள், குழந்தைகள் பெறவேண்டிய கற்றல் அனுபவத்தை திட்டமிட்டு வடிவமைத்தல், பாடம் சார்ந்த கூடுதல் அறிவு, மாணவர்களுடனான உறவு முறை, சக பணியாளர்களுடனான உறவு முறை பெற்றோர் மற்றும் சமூகத்துடனான உறவு முறை, புதுமை படைத்தல், ஆய்வுகளில் ஈடுபடுதல் போன்றவை மதிப்பீடு செய்யபட்டு அவை
- எதிர் பார்த்த நிலையை அடையாமை
- எதிர் பார்த்த நிலையை நெருங்குதல்
- எதிர் பார்த்த நிலையை அடைதல்
- எதிர்பார்த்த நிலைக்கு மேல் என வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்றாற்போல் ஆசிரியர்களுக்கு பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
-
ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காவது வாரத்தில் வட்டார அளவிளான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அம்மாதத்தில் பார்வையிட்ட பள்ளிகளின் நிறைகுறைகளை உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவரின் முன்னிலையில் விவாதித்து பின்தங்கிய பள்ளிகளுக்கு குழுவாக சென்று பார்வையிட்டு (Team Visit) குறைகள் அனைத்தும் வட்டார அளவில் சரிசெய்யப்படுகிறது.
-
அதே போல் ஒவ்வொரு மாதமும் முன்றாவது வாரத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதில் ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர்கள் (பொ) வட்டார கல்வி அலுவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்ட பள்ளிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு குறைகள் சரி செய்யப்பட்டு வருகிறது.
-
2017-2018 ஆம் கல்வியாண்டில் தேசிய அடைவுத்திறன் தேர்வு (மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு) 165 பள்ளிகளில் SCERTE மூலம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 48.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனை கொண்டு 2018-19-ஆம் கல்வியாண்டில் Learning Outcomes முறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தேசிய அடைவுத்திறன் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
வகுப்பு | தமிழ் % | கணிதம் % | அறிவியல் % | சமூக அறிவியல் |
---|---|---|---|---|
III | 57.7 | 56.2 | 63.28 | – |
V | 58.95 | 40.94 | 52.36 | – |
VIII | 58.84 | 32.39 | 35.01 | 31.78 |
மாவட்ட சராசரி | 48.33 |
-
மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மணமேல்குடி, கறம்பக்குடி மற்றும் விராலிமலை ஒன்றியங்களில் குழு ஆய்வு நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளியில் கண்டறியப்பட நிறைகுறைகள் விவாதிக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் குறைகளை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தரமான கல்வியை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
புதிய தொடக்கப் பள்ளிகள்
புதுக்கோட்டை மாவட்த்தில் 2018 – 19 ஆம் கல்வியாண்டில் பின்வரும் மூன்று குடியிருப்புகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வ.எண் | ஒன்றியம் | ஊராட்சியின் பெயர் | குடியிருப்பின் பெயர் |
---|---|---|---|
1 | குன்றாண்டார் கோயில் | ஒடுக்கூர் | கொட்டப்பள்ளம் |
2 | அன்னவாசல் | திருவேங்கைவாசல் | உய்யக்குடிப்பட்டி |
3 | கறம்பக்குடி | தீத்தாணிப்பட்டி | முருங்கைக்கொல்லை |