முடிவு

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்

பொதுவிநியோகத்திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுபாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை , மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு , சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.

 

பொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள்:-

  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கவும்
  • சிறப்பு அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம் ஏழை எளிய மக்களின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும்
  • பருப்பு சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்
  • மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கவும்
  • குடும்ப அட்டைதாரர்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்
  • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது
  • மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது
  • புதிய மின்னணு குடும்ப அட்டைகோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் அலுவலர்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாய விலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது

 

நுகர்வோர் பாதுகாப்பு

  • தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் -2013 அடிப்படையில் பொது விநியோகத்திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் ,வட்ட அளவில் நியாய விலைகடை அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அடிப்படையாகக்கொண்டு நுகர்வோர் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது
  • நேர்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின் வாயிலாக கண்ணுற்று நுகர்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வினை அறிதல்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேனிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நேர்வுகளில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது

பொது விநியோகத்திட்டம்பற்றிய விபரம்தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்ட செயல்முறை பின்பற்றப்படுகிறது அதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதனா அன்னயோஜனாவை செயல்படுத்துகிறது மற்றும் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தயோதனா அன்னயோஜனா பயனாளர்கள் உள்ளனர் . தமிழ்நாட்டின் பொது விநியோகத்திட்ட அமைப்பு முறை கொள்முதல் ,சேமிப்பு உணவு தானிய வழங்கல் மற்றும் பரந்த நியாய விலைக்கடை பிணையம் மூலம் நுகர்வோர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் பரிமாற்ற செயல்பாட்டைக் கண்காணித்தல் ,வழிமுறை செயல்பாட்டு மீறல் அல்லது முறைகேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாட்டு முறையை பின்பற்றுகிறது பொது விநியோகத்திட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்

  • உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.
  • தமிழ்நாடு உணவுபொருள் கழகம்.
  • இந்திய உணவுக்கழகம்.
  • கூட்டுறவுச்சங்கங்கள்.
  • மகளிர் சுய உதவிக்குழு.
  • உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொது விநியோகத்திட்ட ஒழுங்குமுறை பணிகளில் ஈடுபட்டுள்ளது.
  • தமிழ்நாடு உணவுப்பொருள் கழகம் உணவுப்பொருட்களின் கொள்முதல் மற்றும் சேமிப்பு மற்றும் அதை நியாய விலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்வது போன்ற பொறுப்புகளை ஏற்றுள்ளது.
  • கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை பணிகள் மாநில அளவிலான ஆய்வுக்குழு, மாவட்ட அளவிலான பறக்கும்படை மற்றும் பொருட்கள் வழங்கல் குற்றவியல் விசாரணைப்படைகளால் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்திய உணவுக்கழக கிடங்குகள் மற்றும் தமிழ்நாடு உணவுபொருள் கழக கிடங்குகளுக்கு இடையேயான உணவுப்பொருள் பரிமாற்ற செயல்முறையை மாவட்ட கூட்டுறவு அமலாக்கப்பணி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்கிறது. தீடீர் சோதனை மற்றும் குறைதீர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

 

தற்போது நான்கு வகை அட்டைகள் உபயோகத்தில் உள்ளன

  • அரிசி அட்டை இவ்வட்டை அரிசியை நியாய விலைக்கடைகளிலிருந்து பெற விரும்புவோர்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. இவர்கள் மற்ற பொருட்களையும் பெறலாம். 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தயோதயா அன்னயோஜனா அட்டையையும் சேர்த்து எண்ணிக்கை 4,27,672 ஆகும்.
  • சர்க்கரை அட்டை மூலம் நுகர்வோர்கள் அரிசியைத் தவிர சாதா ஒதுக்கீட்டை விட 3 கிலோ அதிக சர்க்கரை மற்றும் மற்ற பொருட்களை பெறலாம். 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்க்கரை அட்டை வைத்திருப்போர்களின் எண்ணிக்கை 4,516 ஆகும்.
  • பொருட்கள் இல்லா அட்டை மூலம் நுகர்வோர்கள் எந்த பொருளையும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பெறமுடியாது. இந்த அட்டை முகவரி அடையாள அட்டையாக உபயோகப்படுத்தப்படுகிறது. 01.06.2018-இ்ன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 95 அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.
  • எல்லா வகையான அட்டைகளையும் சேர்த்து 01.06.2018 –இன்படி 4,32,283 குடும்ப அட்டைகள் உள்ளன.
  • காக்கி அட்டை காவல் துறையில் மேலாளர் நிலை வரை உள்ள பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை ,சமையல் எண்ணெய் , துவரம்பருப்பு மற்றும் உளுந்தப்பருப்பு பொது விநியோகத்திட்டத்தில் வழங்கும் விலையில் 50% இல் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் பொது விநியோகத்திட்ட விலையில் வழங்கப்படுகிறது. 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 891 காக்கி அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.

 

தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டம் முழு கணிணிமயமாக்கபட்டு கீழ்க்கண்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தினை தானியக்க செயல்பாடாக மாற்றப்பட்டுள்ளது.. அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. (POS) இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • குடும்ப அட்டையில் ஆதார் எண், கைபேசி எண் இணைக்க இணையதளம் இணைக்கும் வழி செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு பெற தமிழ்நாடு இ – சேவை மையம் முலமாக அச்சிட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் –www.tnpds.gov.in
  • பொது விநியோகத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி மைய எண் :- 1967 (அல்லது)18004255901

 

குறுஞ்செய்தி சேவைகள்

பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்ப குறீயீட்டை 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பலாம்.

குறுஞ்செய்தி விளக்கம்

வ.எண் குறியீடு புகார்
1 PDS < இடைவெளி > 101 நியாய விலைக்கடையில உள்ள பொருள் விவரங்கள்
2 PDS < இடைவெளி > 102 நியாய விலைக்கடையின் நிலை (திறந்துள்ளது / மூடப்பட்டுள்ளது)
3 PDS < இடைவெளி > 107 கட்டண தொகை பற்றிய புகார்

 

பொது விநியோகத்திட்டம் – புதுக்கோட்டை மாவட்டம்

வ.எண் அலுவலகம் எண்ணிக்கை
1 வட்டங்கள் 12
2 கிடங்குகள் 9
3 நியாயவிலைக்கடைகள் 1017
4 மண்ணெண்ணெய் பங்குகள் 3

 

மாவட்ட குறை தீர்ப்பாளர் அலுவலகங்கள்

வ.எண் அலுவலர் பெயர் தலைமையிடம் தொடர்பு எண்
1 மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட குறைதீர் அலுவலர் புதுக்கோட்டை 9445000924
2 மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புதுக்கோட்டை 9445000311
3 தனி வட்டாட்சியர் (பறக்கும்படை) புதுக்கோட்டை 9445045622
4 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை 9445000312
5 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம், ஆலங்குடி 9445000313
6 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம், அறந்தாங்கி 9445000317
7 வட்ட வழங்கல் அலுவலர், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், குளத்தூர் 9445000314
8 வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம், கந்தர்வகோட்டை 9445000315
9 வட்ட வழங்கல் அலுவலர், திருமயம் வட்டாட்சியர் அலுவலகம், திருமயம் 9445000316
10 வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், ஆவுடையார்கோவில் 9445000318
11 வட்ட வழங்கல் அலுவலர், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர் 9445000319
12 வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம், மணமேல்குடி 9445000320
13 வட்ட வழங்கல் அலுவலர் பொன்னமராவதி. வட்டாட்சியர் அலுவலகம், பொன்னமராவதி. 9445000404
14 வட்ட வழங்கல் அலுவலர், கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம், கறம்பக்குடி 9445000405
15 வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம், விராலிமலை 04339220777