முடிவு

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, சுத்திகரிப்பு, திறன், பெண்கள் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, சுனாமி மறுவாழ்வு ஆகியவற்றிற்கான பல்வேறு மத்திய நிதியுதவி, அரசு நிதியுதவி மற்றும் வெளிநாட்டு உதவியளிக்கும் திட்டங்கள் செயல்படுத்த கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதிலும் அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன் கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது.

கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது.கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது.பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.1981 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது. இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குழு இதனை கட்டுப்படுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் வாடகை, அலுவலக செலவீனங்கள் உட்பட்ட இதர செலவீனங்கள் 30% மேற்படாமல் ஒதுக்கப்படுகிறது.

13 -க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ‘C பிரிவில் சேர்க்கப்பட்டு, வருடத்திற்கு ரூ.164.25 லட்சங்கள் ஒதுக்கப்படுகிறது. வருடாந்திர பணவீக்கத்தை ஈடு செய்ய ஒவ்வொரு வருடமும் இந்த தொகை 5% உயர்த்தப்படுகிறது.

திட்ட விவரங்கள்
திட்டம் இணைப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் Details (PDF 45KB)
முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் Details (PDF 242MB)
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் Details (PDF 844KB)
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் Details (PDF 858KB)
தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் Details (PDF 1018KB)
தன்னிறைவுத் திட்டம் Details (PDF 507 KB)
தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் Details (PDF 397KB)
அம்மா பூங்கா Details (PDF 45KB)
அம்மா உடற்பயிற்சிக் கூடம் Details (PDF 53KB)
தேசிய கரிமவாயு மற்றும் உர மேலாண்மை திட்டம் Details (PDF 275KB)
ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் Details (PDF 5MB)
ஊரக கட்டிடங்கள் பராமாpப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டம் Details (PDF 1MB)
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) Details (PDF 5MB)

 

  1. MGNREGS – சமையல் அறை கூடம் கட்டுதல் நிர்வாக அனுமதி (கோப்பு எண் 4580/2022/H1 தேதி 06-04-2023)
  2. MGNREGS – சமையல் அறை கூடம் கட்டுதல் நிர்வாக அனுமதி (கோப்பு எண் 4580/2022/H1 தேதி 17-04-2023)
  3. MGNREGS – சமையல் அறை கூடம் கட்டுதல் நிர்வாக அனுமதி (கோப்பு எண் 4580/2022/H1 தேதி 21-04-2023)