முடிவு

விராலிமலை

அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விராலிமலை திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்ற மன்னா் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணிக் கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஆதித்தசோழன் என்ற மன்னரால் திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இவா்களுக்கு பிறகு ஆலயத்தின் மற்ற பிரகாரங்கள் மண்டபங்கள் நாயக்கா்கள் மற்றும் மருங்காபுரியார் வம்சத்தவா்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னா் புதுக்கோட்டை மன்னா்களால் மணிமண்டமும் நவராத்திரி மண்டமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில் முனிவா்கள் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், இத்தலம் விராலிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானயுடன் அருள்பாலிக்கிறார். சித்திரா பெளா்ணமி, வைகாசி விசாகம் மற்றும் தெப்பத்திருவிழா, ஐப்பசி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. முத்துபழனி கவிராயா் எழுதிய விராலிமலை குறவஞ்சி இங்கு விழா நாட்களில் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.

புகைப்பட தொகுப்பு

  • விராலிமலை நுழைவாயில்
  • விராலிமலை கோவில் பக்கத்தோற்றம்
  • விராலிமலை கோவில் பறவை பார்வை

அடைவது எப்படி:

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திலிருந்து 28 கி.மீ

சாலை வழியாக

விராலிமலை பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ (திருச்சி - மதுரை மெயின் ரோடு)