முடிவு

நார்த்தாமலை

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை கோவில் மற்றும் கடம்பர் மலை கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நடைபெறும் முளைபாரி ஊா்வலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சுற்றுலாப் பயணிகளால் கண்டு களிக்கப்படுகிறது.

புகைப்பட தொகுப்பு

  • நார்த்தாமலை குகை கோவில் - முன்புறத் தோற்றம்
  • நார்த்தாமலை குகை கோவில் - பின்புறத் தோற்றம்
  • நார்த்தாமலை குகை கோவில் - பக்க தோற்றம்

அடைவது எப்படி:

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து 17 கி.மீ

சாலை வழியாக

திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோட்டிலிருந்து 2 கி.மீ