முடிவு

குடுமியான்மலை

வழிகாட்டுதல்

புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவா் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இங்கு அமைந்துள்ள குகை கோவிலின் முகப்பில் கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் இசை கல்வெட்டு ஒன்றும் 100-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளது. இவ்வூரில் தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் விவசாய கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது.

தொலைபேசி 04322-221084.

புகைப்பட தொகுப்பு

  • குடுமியான்மலை - மலை
  • குடுமியான்மலை - கோவில்
  • குடுமியான்மலை - பிள்ளையார் சிலை

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையத்திலுருந்து 49 கி.மீ

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலுருந்து 20 கி.மீ