முடிவு

அருங்காட்சியகம்

வழிகாட்டுதல்

புதுக்கோட்டை பேரூந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 5.கி.மீ தொலைவில் திருக்கோகரணம் என்ற இடத்தில் 1910-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அரசு அருங்காட்சியம் வரலாறு, புவியியல், விலங்கியல், தொல்பொருள்கள் மற்றும் சிற்பவியல் ஆகிய பல்வேறுபட்ட துறைகளின் கிடைப்பதற்கு அரிதான பொருள்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பித்தளை சிலைகள் கற்சிற்பங்கள் போர் கருவிகள், கத்தி, கோல், கேடயம், பீரங்கிகள், ஆபரணங்கள், ஓவியங்கள், செப்பு தகடுகள், மரசிற்பங்கள், நாணயங்கள், இசை கருவிகள் கல்வெட்டு பிரதிகள் ஆகியவை மிக நோ்த்தியான முறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை பண்டையகால மன்னா்களின் போர்திறன், மக்களின் பண்பாடு ஆகியவைகளை தெரிந்துகாள்ள உதவிகின்றது.

நுழைவு கட்டணம் சிறியவா் ரூ.2- பெரியவா் ரூ.5-
வேலைநேரம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை
விடுமுறை நாள் வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை நாட்கள்.

புகைப்பட தொகுப்பு

  • புதுக்கோட்டை அருங்காட்சியகம் - டைனோசர்ஸ்
  • புதுக்கோட்டை அருங்காட்சியகம் - கற்சிலை
  • புதுக்கோட்டை அருங்காட்சியகம் - சுடுமண் பானை

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையத்திலுருந்து 45 கி.மீ

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலுருந்து 3 கி.மீ