மாவட்ட சமூக நல அலுவலகம்
சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகம் புதுக்கோட்டையின் மூலம் சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பபாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருமண நிதி உதிவத் திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள், மகளிர் தையல் தொழில் சுட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச சீருடை தைத்து வழங்குதல், ஏழ்மை நம்பிக்கையிழந்த மற்றும் கைவிடப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினர் நலன் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பு சட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களையும் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான நல சட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம்
அரசாணை எண் 42 மற்றும் 43 நாள் 17.05.2011 அன் படி 17.05.2011 முதல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 18 வயது நிரம்பிய பெண்களுக்கு உதவித் தொகை ரூ.50000 மும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கமும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000 மும் திருமாங்கால்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசாணை எண் 47 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள் 23.05.2016 ன்படி திருமாங்கலயம் செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 4 கிராம் தங்கத்தினை 23.05.2016 முதல் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
10 ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூரக் கல்வி தனியார் மூலம் படித்திருந்தால் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைத்திருத்தல் வேண்டும். பழங்குடியினர் 5ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். நிதி உதவி பெறுவதற்கு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேற்படி பட்டயப்படிப்பு தமிழக அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்க்பபட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைவர்கள் ஆவர். வருட வருமானம் ரூ.72000க்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ண்பிக்கலாம்
ஈ.வெ.ரா மணியம்மைளார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம்
போதிய நிதி வசதி இல்லாததால் ஏழை விதவைகளின் மகள்களின் திருமணங்களை நடத்துவத்தில் காலதாமதம் ஏற்படுத்துவதை தவிர்த்தல்
மணப்பெண்ணின் வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும்
விதவை தாயின் கணவனின் இறப்பு சான்றிதல் , விதவை சான்றிதல் (அ) சமூக பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் விதவைகள் உதவித் தொகை பெறுவதற்கான சான்றிதழ்
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
விதவைகளுக்கு புதுவாழ்வு அளிக்க அவர்களின் மறுமணத்திற்காக நிதி உதவி வழங்குதல்
1) வருமான உச்ச வரம்பு இல்லை
2) மணமகளின் வயது 20-லிருந்து 40 – க்குள் இருக்க வேண்டும்.
3) விதவையை மறுமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
4) முதல் கணவர் இறப்புச் சான்று
5) மறுமணம் பதிவு செய்த சான்று
6) மறுமணம் புரிந்து கொண்ட பெண்ணின் வயது சான்று
7) திருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்
ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்
1) ஆண்டு வருமான வரம்பு கிடையாது
2) மணப்பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
3) தாய் தந்தை இருவரையும் இழந்த ஆதரவற்ற பெண்ணாக இருக்க வேண்டும்.
4) விண்ணப்பதாரரின் வயது சான்றிதழ்
5) விண்ணப்பதாரர் தாய், தந்தை இருவரும் இல்லாததன் காரணமாக முழுமையான ஆதரவற்றவர் என்று சான்றிதழ்
6)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி கலப்புதிருமண நிதி உதவித் திட்டம்
திருமணம் செய்து கொண்ட தேதியிலிருந்து 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருமணம் பதிவு செய்த சான்றிதழ்
வருமான வரம்பு இல்லை
மணமகளின் வயது 18 பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்
கலப்பு திருமணம செய்து கொண்ட தம்பதியரினல் ஒருவர் ஆதிதிராவிடர்/பழங்குடியினராக இருக்க வேண்டும்.
விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக குறிப்பேடுகள் வழங்குதல்
மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு குறிப்பேடுகள் இலவசமாக வழங்குதல்
விதவையின் குடுமப் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72000 க்கு மிகாமல்
ஆண்டொண்றுக்கு மாணவர், மாணவியர் ஒருவருக்கு
1 ஆம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை ரூ.50
3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.125
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.175
9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.300
மேல்நிலை முதலாமாண்ட மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளுக்கு ரூ.600
சத்தியாவணி முத்து அம்மையர் நினைவு மகளிர் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள் , கணவரால் கைவிடப்பட்ட பெணகள் உடல் ஊனமுற்ற ஆண் மற்றம் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தஙகள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குதல்
20 முதல் 40 வயது வரையிலுள்ள தையல் வேலை தெரிந்த ஆதரவற்ற விதவைகள் , சமூக ரீதியில் நலிவுற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர்.
முதலமைச்சரின் இரண்டு பெண்குந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
குடும்ப நலத் திட்த்தை மேம்படுத்த பெண் குழந்தை வேண்டாமென்ற எண்ணத்தை கைவிட ஊக்குவித்தலும் மற்றும் பெண் சிசுக் கொலையை ஒழித்தலும்.
பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. கருத்தடை செய்து கொள்ளும் தாயின் வயது 35 க்குள் இருக்க வேண்டும். 01.04.2005 முதல் ஒரு பெண் குழந்தை திட்டத்தின் படி 3 வயதுக்குள்ளும், இரு பெண் குழந்தைகள் திட்டத்தின்படி இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மேற்படக்கூடாது.
ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50000 மும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.25000மும் வைப்பீடு செய்யப்படுகிறது. 01.08.2011 அன்றைய தினம் முதல் பிறந்த குழந்தைகளுக்கு திட்டம் 1 ன் கீழ் ஓரு குழந்தைக்கு ரூ.50,000 காப்பீடு செய்து பத்திரம் வழங்கப்படும். திட்டம் 2 ன் கீழ் தலா ரூ.25000 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு காப்பீடு செய்து பத்திரம் வழங்கப்படும்.
பெண்குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகலுடன் விண்ணபித்து முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்படும்.
பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி
குறைந்த நடுத்தர வருமான தொகுதியை சேர்ந்த பணிபுரியும் மகளிருக்கு உணவு மற்றும் உறைவிட வசதிகளுக்கு வகை செய்தல்
உள்ளுரைவோர்கள் வாடகையான மாதம் ஒன்றுக்கு ரூ.200 செலுத்த வேண்டும், எணவு மற்றும் மின் கட்டணம் விகிதாச்சார அடிப்படையில் பகிர்மானம் செய்யப்படும்.
இலவச சீருடைத் திட்டம் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மூலம் இலவச சீருடை தைத்து வழங்கப்படுகின்றன.
இச்சங்கங்களில் உறுப்பினராகும் பெண்களுக்கு தையல் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்.
அரசுப்பள்ளி மற்றும் அரசு மான்யம் பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மதிய உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் பிற்பட்ட வகுப்பினர் மற்றும்மிகவும் பிற்பட்ட வகுப்பினர் துறை சார்ந்த பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி 1 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சீருடை தைத்து வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கையர் நல வாரிய செயல்பாடுகள் பயன்பெறுவதற்கான தகுதிகள்மற்றும் நிபந்தனைகள்
மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அரவாணி என உறுதிசெய்யப்பட்ட பின் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, சுயதொழில் துவங்குவதற்கான மான்யம், சுயதொழில் புரிவதற்கான பயிற்சிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
பெண்உரிமைகளுக்கெதிரான குற்றங்களுக்கான தடுப்புச் சட்டம்
இச்சட்டத்தின் கீழ் சமுதாயத்தால் இழிவுபடுத்தப்பட்டு பெண் உரிமையை பறிக்கும் இனத்தினரால் பாதிக்கப்பட்டவர்களின் புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.
குடும்ப வன்முறையான பாதிக்கப்பட்ட பெண்கள் இச்சட்டத்தின் கீழ் புகார்கொடுக்கலாம்
வரதட்சனை கேட்பது காரணமாக துன்பப்படுவோர் புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்ற உதவியுடன் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்ற உதவியுடன் உறைவிட கட்டளை, பாதுகாப்பு கட்டனை, பொருள்கள் திரும்ப பெறும் கட்டளை வழக்கு முடியும் வரை இடைக்கால நிவாரணக் கட்டளை பெற்றுத்தரப்படும்.
மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பாராமரிப்புச் சட்டம்
இச்சட்டத்தின் கீழ் வயதான காலத்தில் தன்னைக் கவனிக்காத பிள்ளைகள் பற்றிய புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் உடைவிடக் கட்டளை, பாதுகாப்பு கட்டனை மற்றும் பொருள் உதவி கட்டனை பெற்றுத்தரப்படும்.பாதிப்படையச் செய்த முதியோரின் பிள்ளைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
இச்சட்டத்தின் கீழ் 18 வயது நிறைவடையாத ஆண், பெண் திருமணத்தை தடுக்க புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.
கட்டாய திருமணத்திற்கு உட்படுத்தப்பட்ட 18 வயது நிறைவடையாத ஆண், பெண் இருபாலருக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்படும். இருபாலருக்கும் மேற்கொண்டு கல்வி தொடர தகுந்த ஆலோசனை வழங்கி, கல்வி தொடர வழிவகை செய்யப்படுகிறது.
முதியோர் இல்லம்
மாநில மற்றும் மத்திய அரசு மானிய உதவி பெற்று நடத்தப்படும முதியோர் இல்லங்களில் வாழ வசதியின்றி தவிக்கும் முதியோர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் இவர்களுக்கு உறைவிடம், உணவு, உடை மற்றும் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகிறது.
தகவல் பெறுவதற்கு தொடர்புகள்
இடம் | அலுவலர் | தொலைபேசி |
---|---|---|
மாவட்ட அளவில் | சமூக நல அலுவலர் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியரக வாளகம் புதுக்கோட்டை |
04322- 222270 |
வட்டார அளவில் தொடர்புகொள்ள வேண்டியவர்
இடம் | அலுவலர் | தொலைபேசி |
---|---|---|
அன்னவாசல் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04339-230622 |
அறந்தாங்கி | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04371-220538 |
அரிமழம் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04333-271223 |
ஆவுடையார்கோவில் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04371-233323 |
கந்தர்வகோட்டை | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04322-275728 |
கறம்பக்குடி | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04322-255226 |
குன்றாண்டார்கோவில் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04339-246251 |
மணமேல்குடி | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04371-250390 |
பொன்னமராவதி | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04333-262070 |
புதுக்கோட்டை | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04322-221805 |
திருவரங்குளம் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04322-242281 |
திருமயம் | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04333-274227 |
விராலிமலை | விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) | 04339-220224 |