முடிவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லீம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்டேர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு விவரம் பின்வருமாறு

வகுப்பு ஒதுக்கீடு சதவிகிதம்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள் நீங்கலாக) 26.5%
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் 3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 20%
ஆதிதிராவிடர் 18%
பழங்குடியினர் 1%

விடுதிகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்த ஏழை மாணவ, மாணவியர் அனைத்து வசதிகளுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகாமையில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.

விடுதியில் சேர்ப்பதற்கான தகுதிகள்

  1. மாணவ மாணவியர் 4ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயில வேண்டும்.
  2. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் (மாணவியருக்கு தூர விடுதி பொருந்தாது)

கல்லூரி விடுதி

  1. பட்டயம், பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு பயில வேண்டும்.
  2. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
  3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் (மாணவியருக்கு தூர விடுதி பொருந்தாது)

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்/விடுதியின் காப்பாளர்/காப்பாளினி

விடுதிகளில் இட ஒதுக்கீடு முறை
வகுப்பு ஒதுக்கீடு சதவிகிதம்
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு 60%
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 20%
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 15%
இதர வகுப்பினர் 5%

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான சேர்க்கை

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக விடுதியின் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை

ஒவ்வொரு விடுதியிலும் 4 சதவிகித இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான சேர்க்கை

மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் விடுதிகளில் எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும், படிப்பு முடியும் வரை தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட , மிகவும்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள்

அரசு மற்றும் அரசு உதாவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்புக்கட்டணம், கற்பிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் கற்பிப்பு மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துகிறார்கள். எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு கீழ்க்கண்டவாறு கல்வி உதவித்தொகைகள் பள்ளிக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன

வகுப்பு மற்றும் படிப்பு : 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் சலுகைகள் : கற்பிப்புக் கட்ணம்
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.200/- (மாதம் ரூ.20 வீதம் 10 மாதங்களுக்கு)
9ம் மற்றும் 10ம் வகுப்பு ரூ.250/- (மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கு)
தேர்வுக்கட்டணம்
1 0ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு என தேர்வுக் கட்டணம் அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு ஈடு செய்யப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ மாணவியருக்கான நிபந்தனைகள்

பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.20000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்
குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்க்க்கூடாது
மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பு மாணவ மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.

பரிசுகள் மற்றும் விருதுகள்

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவியர் 10 மற்றுமு 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளி கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்

தகுதி அணுக வேண்டிய அலுவலர்கள்
பி.வ., மி.பி.வ., சீ.ம., வகுப்பைச் சார்ந்து சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்

விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

தகுதி அணுக வேண்டிய அலுவலர்கள்
பி.வ., மி.பி.வ., சீ.ம., வகுப்பைச் சார்ந்து சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
துணி தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்
வயது 20-45 வரை
சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்

விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்குதல்

தகுதி அணுக வேண்டிய அலுவலர்கள்
நிலமற்ற, வீடற்ற, ஏழை, பி.வ/மி.பி.வ/சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்

சீர்மரபினர் நல வாரியம்

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைப்போல் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கீழ்காணும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேற்படி நலத்திட்ட உதவிகளைப் பெற இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தள்ளவர்கள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வ.எண் நலத்திட்டம் உதவித்தொகை
1 விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை 1,00,000/-
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால்
ஊனத்தின் தன்மைக்கேற்ப
10,000/- to 1,00,000/-
2 இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15000
3 ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000
4 கல்வி உதவித் தொகை
பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு 1000
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1500
முறையான பட்டப்படிப்பிற்கு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு 1750
முறையான பட்ட மேற்படிப்புக்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு 5000
தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டபடிப்புக்கு 6000
தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு 6000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பிற்கு 8000
ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு 1200
5 திருமண உதவித் தொகை 2000
6 மகப்பேறு உதவித் தொகை
மகப்பேறு: மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் 6 மாதங்களுக்கு 6000
கருச்சிதைவு: – கருக்கலைப்பு 3000
7 மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் Upto 500
8 முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் 1000

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைப்போல் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவைத் தவிர, இவர்கள் சுயதொழில் புரிய மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேற்படி நலத்திட்ட உதவிகளை பெற தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வ.எண் நலத்திட்டம் உதவித்தொகை
1 விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை 1,00,000/-
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப 10,000/- to 1,00,000/-
2 இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15000
3 ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000
4 கல்வி உதவித் தொகை
1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவியருக்கு 500
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவியருக்கு 1000
10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
11ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
12ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு 1500
முறையான பட்ட படிப்பிற்கு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட படிப்பிற்கு 1750
முறையான பட்ட மேற்படிப்பிற்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்பிற்கு 5000
ஒ) தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு 6000
ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு 1200
5 திருமண உதவித் தொகை 2000
6 மகப்பேறு உதவித் தொகை
மகப்பேறு: மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் 6 மாதங்களுக்கு 6000
கருச்சிதைவு: – கருக்கலைப்பு 3000
7 மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் 500
8 முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் 1000
9 சுய தொழில் தொடங்க மானியம் 7500
தனிநபர் மானியம் 10000
குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்க மானியம் 1,25,000

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO)

தமிழ்நாடு பிற்படுத்த்ப்பட்டோர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக – பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.

நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள்

  • சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்
  • விவசாயம்
  • போக்குவரத்து
  • கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள்
  • இளம் தொழிற் பட்டதாரிகள் சுயதொழில்
  • தொழிற்கல்வி பயிலுதல்

தகுதிகள்

  • பயனாளி பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98,000-க்கும் நகர்ப்புறங்களில் ரூ.1,20,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.
  • சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை இடம்
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்
  • கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
  • கூட்டுறவு கடன் சங்கங்கள்-வங்கிகள்

சிறுபான்மையினர் நலம்

தமிழக அரசு சிறுபான்மையினர் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்திடவும். பாரத பிரதமின் புதிய 15 அம்ச திட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திடவும் இச்சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேற நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் தனியே சிறுபான்மையினர் நல இயக்ககம் உருவாக்கப்பட்டு இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள அலுவலரை துறைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இயங்கி வருகிறது.

இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் இனத்தவருக்கென்று ஏற்கனவே உள்ள 30 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியர்களுக்கென கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு – அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கென 3.5 சதவீது தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டள்ளது.

கல்வி உதவித் தொகைகள்

அரசு – அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு மைய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகை திட்டங்களின் விவரம் பின்வருமாறு:-

வ.எண் திட்டத்தின் பெயர் வகுப்பு-பாடப்பிரிவு நிதி பங்கீடு
1 பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 100% (மைய அரசு)
2 பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை XI வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை 100% (மைய அரசு)
3 தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை தொழிற்கல்வி –தொழில்நுட்ப கல்வி 100% (மைய அரசு)

கல்வி உதவித் தொகை மாணவ-மாணவியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மைய அரசால் செலுத்தப்படும்.

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பொதுவான நிபந்தனைகள்

  1. மாநிலத்தின் சிறுபான்மை மக்கள் தொகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை (புதியது) திட்டங்களுக்கு மதவாரியாக ஒதுக்கீடு மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு ஒதுக்கீடு நிர்ணயம் இல்லை.
  2. தமிழ்நாட்டினை பிறப்பிடமாக கொண்டு இந்திய நாட்டின் வேறு மாநிலத்தில் படித்தாலும் அவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
  3. தொடர்புடைய கல்வி உதவித் திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
  4. ஒவ்வொரு திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளில் 30 விழுக்காடு மாணவியெருக்கென ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. ஒரு குடும்பத்தைச் சார்ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
  6. அஞ்சல் வழி மூலம் பயில்பவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
  7. மைய அரசின் கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை-ஆதிதிராவிடர் நலத்துறை-பிறதுறைகள்-நல வாரியங்கள் ஆகியவற்றில் கல்வி உதவித் தொகைக்கென விண்ணப்பித்திருந்தாலும் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே கல்வி உதவித் தொகை பெற இயலும்.
  8. தொழிற் கல்வி, தொழில்நுட்பக் கல்வியில் முதல் பட்டதாரி சலுகை (கற்பிப்புக் கட்டணம்) பெற்றுள்ள மாணவ-மாணவியர் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் முறை

மாணவ, மாணவியர் புதியது-புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் (Online)https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப்படிவத்தை படியிறக்கம் செய்து கீழ்க்கண்ட ஆவணங்கள்-ஆவணங்களுடன் கல்வி நிலையங்களில் உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. நிழற்படம்
  2. கைபேசி எண்
  3. இமெயில் (மின்னஞ்சல் முகவரி)
  4. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்
  5. சாதி-மதம் சான்றிதழ் (அல்லது) ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத் தாளில் சுய உறுதிமொழி
  6. வருமான சான்று அல்லது ரூ.10மதிப்புள்ள நீதிமன்றம் சாதார முத்திரைத்தாளில் சுய உறுதி மொழி
  7. இருப்பிட-உறைவிடச்சான்று
  8. ஆதார் எண்
  9. கல்வி கட்டண ரசீது
  10. செயல்நிலையில் உள்ள வங்கிக் கணக்கு எண், IFS Code குறிப்பு மைய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவியர் ரூ.50,000-க்கு மேற்பட்டு கல்விக் கட்டணம் செலுத்தியருப்பின் மேற்படி ஆவணங்கள் அனைத்தையும் இணைய வழி(online) மூலமாக பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதப்பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2011-12ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்துவர்கள் புனித பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டள்ளது. இதற்கென அரசின் நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ரூ.20,000- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜெருசலேம் பயணக் குழுவினரால் பயண நிரல் இறுதி செய்து பயண முகவர்கள் மூலம் புனித பயணம் மேற்கொள்ளப்படும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்த்தை அடைவதெற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்-ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் உறுப்பினராகவும் நலத்திட்ட உதவிகள் பெற தகுதியுடையவராவர்.

பதிவு பெற்றவுடன் உறுப்பினர் அமர்ராகிவிட்டால் அவரைச் சார்ந்த அவரது மனைவி (அ) கணவன் ,பிள்ளைகள் , விதவை மகள் மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் வாரிசு தார்ர் (Legal Heirs) பட்டியலில் அடங்குவர்.

குடும்பம் என்பதில், ஆண் உறுப்பனரா இருப்பின. அவரது மனைவி, திருமணமான அல்லது திருமணமாகாத அவரது பிள்ளைகள், சார்ந்துள்ள பெற்றோர், விதவை மருமகள், உறுப்பினரின் இறந்த மகனின் பிள்ளைகள், ஆகியோர் அடங்குவர். பெண் உறுப்பினராக இருப்பின், அவரது கணவர், பிள்ளைகள், ஆகியோர் குடும்பம் என்ற வரைமுறையில் அடங்குவர்.

உறுப்பினர் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

பதிவு பெற்ற உறுப்பினருக்கும் ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும்.

உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நல உதவிகள் விவரம்

வ.எண் நல உதவிகள் உதவித் தொகை
1 விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை 1,00,000/-
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப 10000 to 1 Lakh
2 இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை 15000
3 ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை 2000
4 கல்வி உதவித் தொகை
10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு 1500
முறையான பட்டப்படிப்பு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டபடிப்பு 1750
முறையான பட்ட மேற்படிப்பிற்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்பிற்கு 5000
தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டபடிப்புக்கு 6000
தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு 6000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்புக்கு 8000
ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐடிஐ 1200
5 திருமண உதவித் தொகை 2000
6 மகப்பேறு உதவித் தொகை
மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் (6 மாதங்களுக்கு) 6000
கருச்சிதை-கருக்கலைப்பு 3000
7 கண்கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் 500
8 முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) 1000

குறிப்பு : உறுப்பினர்கள் இவ்வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறப்படின் வேறு வாரியங்களிலிருந்து இதே நலத்திட்ட உதவிகள் பெற இயலாது.