ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1630 அங்கன்வாடி மையங்களும் 169 குறு அங்கன்வாடி மையங்களும் செயல்படுகின்றது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் குறிக்கோள்கள்
- 0 முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து ,சுகாதாரம்,மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்துதல் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து குழந்தை பராமரிப்பு பழக்கத்தினை குடும்ப அளவில் மேம்படுத்துதல்.
- பெண்களிடையே குறிப்பாக கருவுற்றுள்ள மகளிர், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்துதல்.
- குடும்பத்தின் ஊட்டச்சத்து சுகாதார பிரச்சினை தொடர்புடைய தேவையான பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மேலோங்கச் செய்வதுடன் தாய்மார்கள் மற்றும் வளர்இளம் பெண்களின் தன் உரிமை மேம்பாட்டினை உயர்த்துவது
- வாழ்க்கை சுழற்சி முறையிலான ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தனை வருமைக்கோட்டுக்கு கீழே உள்ள தகுதியான தாய்மார்கள், குழந்தைகள். வளர்இளம் பெண்கள் மற்றம் முதியோர் ஆகியோருக்கு அளிப்பதன் மூலம் தமிழகத்தை ஊட்டச்சத்து நிலையில் உயர்த்துவது
முன்பருவக்கல்வி
குழந்தைகள் மையத்தில் 2-5 வயது குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கல்வி அளிக்கப்படுகிறது குழந்தைகள் முழு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாதத்திற்கு ஒரு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
மதிய உணவு வழங்குதல்
2-5 வயதிற்குட்பட்ட முன்பருவக் கல்வியில் பயனடையும் குழந்தைகளுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் மதிய உணவாக கலவை சாதம் அனைத்து நாட்களிலும் வழங்கப்படுகிறது.
வ.எண் | விவரம் | மொத்த பயனாளிகள் |
---|---|---|
1 | 2-5 வயது குழந்தைகள் | 40421 |
2 | 1-2 வயது குழந்தைகள் | 20711 |
தகவல் தொடர்பு பணிகள்
அ. வீடுகள் சந்திப்பு
அங்கன்வாடி பணியாளர்கள் மாதந்தோறும் பத்து நாட்கள் வீடு சந்திப்பு செய்து பல்வேறு தலைப்புகளில் மக்களுக்கு சத்துணவு சுகாதார கல்வி அளித்து வருகின்றனர்
ஆ. சமுதாய குழுக்கள் மூலம் சத்துணவு சுகாதார கல்வி அளித்தல்
கிராம அளவில் சிறுவர் தொடர்பு குழு, பெண்கள் தொடர்பு குழு வளர்இளம் பெண்கள் கூட்டம் நடத்தி சத்துணவு சுகாதாரக் கல்வி அளிக்கப்படுகிறது
- சிறுவர் தொடர்பு குழு – முதல் வாரம் (வியாழக்கிழமை)
- பெண்கள் தொடர்பு குழு – இரண்டாவது வாரம் (வியாழக்கிழமை)
- வளர் இளம் பெண்கள் தொடர்பு குழு – மூன்றாவது வாரம் (வியாழன்)
- கிராம அளவிலான மேம்பாட்டுக் குழு – நான்காம் வாரம் ( வியாழன்)
இ. உலகத் தாய்பால் வாரவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல்வாரம் உலகத்தாய்ப்பால் வாரமாக அனுசிக்கப்படுகிறது இளம் தாய்மார்களிடையே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது
இவ்விழாவின் நோக்கங்கள்
- சீம்பாலின் முக்கியத்துவத்தை விளக்குதல்
- குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டியதின் அவசியத்தை உணரச்செய்தல்
- குழந்தை பிறந்து 6 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவு தர வேண்டியதின் அவசியத்தை விளக்குதல்
- தொடாந்து இரண்டு வயது வரையில் குழந்தைக்கு உணவுடன் தாய்ப்பாலும் தர வேண்டியதின் அவசியத்தை விளக்குதல்
ஈ. தேசிய ஊட்டச்சத்து வாரவிழா
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா மாதம் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
- வளர் இளம் பருவத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டியதின் அவசியம்
- கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு வகைகள் மற்றும் பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றது.
- உள்ளுரில் கிடைக்கக் கூடிய விலை மலிவான உணவுப் பொருள்களை கொண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம்
உ.அயோடின் தினவிழா
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அயோடின் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இவ்விழா நடத்தப்பட்டு அயோடின் உப்பினை நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அயோடின் குறைபாட்டினால் நமது உடலில் நேரும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றது.
குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அயோடின் உப்பினை பயன்படுத்த வேண்டும் எனவும் அயோடின் உப்பு ஏழை எளிய மக்களின் நலனுக்காக மலிவு விலையில் நியாய விலைக்கடைகளில் கிடைக்கின்றது என்ற தகவலையும் தெரிவிக்கப்படுகிறது
ஊ.குழந்தைகள் தின விழா
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் குழந்தைகள் திறமைகள் ஊக்கு விக்கப்படுகவதுடன் குழந்தைகள் உரிமைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை அளிக்கிறது
திட்டங்கள்
சமுதாய வளைகாப்பு
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 86 தொகுதிகளில் 3440 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்டது. இதற்காக வருடத்திற்கு 8,60,000 ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்படுகிறது
கலைக்குழு
ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சி திட்டத்தின் பணிகள் சமூகத்திற்கு சென்றடையும் வகையில் கலைக்குழுவின் மூலமாக கதை பாட்டு மற்றும் நாடக வடிவில் திட்டத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது
பாரம்பரிய உணவு திருவிழா
மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சி திட்டதின் பணிகள் மூலமாக பாரம்பரிய திருவிழா நடத்தப்படுகிறது. அரிதாகிவரும் சிறுதானிய வகைகளை அதன் சத்து மாறாமல் சுவை மிகுந்த உணவு வகைகளாக தயாரிப்பது குறித்து மக்களுக்கு சென்றடையும் வகையில் இந்த விழிப்புணாவு திருவிழா நடத்தப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட திட்ட அலுவலா(ICDS) புதுக்கோட்டை
செல் : 9488017656