முடிவு

அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை

பொது விவரங்கள்

முகவரி அரசு அருங்காட்சியகம், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002. அலைபேசி 04322 – 236247
துவங்கப்பட்ட ஆண்டு 1910
அரசு எடுத்துக்கொண்ட ஆண்டு. 1950
உரிமையாளர் சொந்த கட்டிடம்
பார்வையாளர்கள் 3200 / மாதம்
பரப்பளவு ( a ) வளாகம் – 1 ஏக்கர்
( b ) கட்டிடப் பரப்பளவு – 24,000 ச. அ.
வகை பல்நோக்கு அருங்காட்சியகம்
பிரிவுகள் 1. தொல்லியல்
2. மானிடவியல்
3.நாணயவியல்
4. கலைகள்
5. விலங்கியல்
6. தாவரவியல்
7. புவி அமைப்பியல்
8. தொழிற்கலைகள்
9.புதுக்கோட்டை காட்சிக்கூடம்
மேற்கொள்ளப்பட்டுவரும் கல்விப் பணிகள் கண்காட்சிகள், பயிற்சிகள், சொற்பொழிவுகள், போட்டிகள், கருத்தரங்குகள், கள ஆய்வுகள்.
நூலகத்திலுள்ள நூல்களின் எண்ணிக்கை 2125
பணியாளர் விவரங்கள் காப்பாட்சியர்- 1
உதவி காப்பாட்சியர் – 1
உதவியாளர் – 1
இளநிலை உதவியாளர் – 1
போலி உயிரினமாக்குநர் (தரம் 2 ) – 1
தட்டச்சர் – 1
தொழில்நுட்ப உதவியாளர் – 1
காட்சிக்கூடக் காவலர்கள் – 9
காவலர்கள்- 2
தோட்டக்காரர் – 1
மொத்தப் பணியாளர்கள் – 19
கலந்துகொள்பவர்கள். பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியர் / பொதுமக்கள்

அரும்பொருட்களின் எண்ணிக்கை ( பிரிவு வாரியாக )

Serial No. Section Total Collections
1. தொல்லியல் 2130
2. மானிடவியல் 721
3. நாணயவியல் 3157
4. கலை 53
5. தாவரவியல் 223
6. கலை 1488
7. புவி அமைப்பியல் 522
8. தொழிற்கலைகள் 619
9. புதுக்கோட்டை காட்சிக்கூடம் 62
10. மொத்தம் 8976

சிறப்பம்சம்கொண்ட அரும்பொருட்கள்

உடும்புகள்.

ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் காணப்படுகின்றன. நான்கு வகைகள் மானிட்டர் பல்லிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. தண்ணீர் மானிட்டர், மஞ்சள் மானிட்டர், பாலைவன மானிட்டர் மற்றும் பொதுவான இந்திய மானிட்டர். பொதுவாக, இந்தியாவின் தென்னிந்தியாவின் மானிட்டர் பொதுவாக 4 அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்தியாவில் காணப்படும் நான்கு மானிட்டர் பல்லிகள் இந்தியாவின் வனவிலங்குச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

டிரோன்னோசாராஸ்.

“டிரோ’’ — ஆட்சியாளர், “சாரஸ்’’ — பல்லி. இது அற்றுப்போன ஈர் காலி மாமிசப் பட்சினி வகையைச் சேர்ந்த ஊர்வன. 6 மீ உயரமும், 15 மீ நீளமும் உடையது. இயங்கும்போது உடலை சமன்செய்வதற்கு நீண்ட வாலை கொண்டது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. இதன் எடை சுமார் 7 டன்கள். பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட மிகவும் பலம்வாய்ந்தவை. முன்னங்கால்கள் பலம் குறைவானது. தாடைகளில் வாள்கள் போன்ற கூர்மையான பற்கள் காணப்பட்டன.

அர்த்தநாரீஷ்வரர்.

”அர்த்த’’ என்பதற்கு பாதி என்று அர்த்தம். கடவுள் சிவன் தனது உடலின் இடது பாகத்தை பார்வதிக்கு அளித்துள்ளார். இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்றும் குடும்ப வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் அவசியம் என்ற தத்துவத்தை அறியலாம்.

மெல்லுடலிகள்

மென்மையான உடலைக் கொண்டுள்ளதால் இவ்விலங்குகளுக்கு மெல்லுடலிகள் என்று பெயர். இதன் உடலைச் சுற்றி சுண்ணாம்புப் பொருளாலான ஓடு காணப்படும். இவ்விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் போது உடலை இந்த ஓட்டிற்குள் பாதுகாப்பாக மறைத்துக்கொள்ளும். சில மெல்லுடலிகளில் ஓடுகள் காணப்படாது. ஆனால் ஓடுகள் உண்டானதற்கான ஆரம்பநிலை காணப்படும். பெரும்பாலான மெல்லுடலிகள் ஆழமற்ற கடலிலும், ஆழ்கடலிலும், கடல் புறப்பரப்பிலும் காணப்படும். சிலவகை நன்னீரிலும், நிலத்திலும் வசிக்கின்றன.

கணுக்காலிகள்.

உலகில் காணப்படும் விலங்குகளில் கணுக்காலிகள் தொகுதியிலுள்ள விலங்குகளே அதிக எண்ணிக்கையிலுள்ளன. இதில் நண்டுகள், இறால்கள், பூச்சிகள், எட்டுக்கால் பூச்சிகள், தேள்கள், உண்ணிகள், பூரான்கள் அடங்கும். இவைகள் 20,000 அடி உயரத்திலுள்ள மலைகளிலும், 18,000 அடி ஆழமுள்ள கடலிலும் காணப்படுகின்றன. இதன் உடலமைப்பு இருபக்க சமச்சீரமைப்பும், கண்டங்களுடனும், ஜோடியான கால்களையும் கொண்டிருக்கும்.

falconiforms.

இவைகள் பகலில் இரை தேடுபவை. மாமிசங்களை உண்பதற்கேற்ப உடலமைப்புகளைக் கொண்டுள்ளன. அலகுகள் வலுவாகவும், வளைந்தும், மேல்தாடை கீழ்தாடையை விட நீளமாகவும் காணப்படும். வலுவான பாதங்களையும் நகங்களையும் கொண்டிருக்கும். இவை சிறந்த பார்வை திறன் கொண்டவை.

வாள்மீன்கள்.

வாள்மீன்கள் பெரிய சுறாவைப் போன்ற திருக்கை மீன்களாகும். இவற்றின் தலையிலிருந்து வாள் போன்ற நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பின் இருபுறமும் பற்கள் காணப்படுகின்றன. நன்கு வளைந்த மீனின் வாள் அமைப்பு 6 அடி நீளமும் ஒரு அடி அகலமும் இருக்கும். 10 அடி முதல் 20 அடி வரை வளரக்கூடியது. இந்த வாள் அமைப்பு மீன்களைப் பிடிப்பதற்குப் பயன்படுகின்றன.

பவளக்கால்நாரை.

இவைகள் நீண்ட மெல்லிய கழுத்தையும், மெல்லிய இறகுகளற்ற சிவப்புநிற நாரைகளைப் போன்றே காலமைப்பையும், விசித்திரமான பெரிய நடுவில் வளைந்த அலகையும் கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. ஆழமில்லாத உப்பு நீர் நிலையில் இரை தேடும். கட்ச் வளைகுடாவிலும், பழவேற்காட்டிலும், வேதாரண்யத்திலும் இவை காணப்படுகின்றன.


படத்தொகுப்பினை காண இங்கே சொடுக்கவும்