முடிவு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத்திட்டம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும்,தொடர்ந்து பதிவை புதுப்பித்துவரும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி

    • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/- வீதமும்,
    • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/- வீதமும்,
    • மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/- வீதமும்,
    • பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 /- வீதமும்

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உதவி பெறுவதற்குரிய தகுதிகள்

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/–க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 45 வயது எனவும், இதர பயனாளிகளுக்கு 40 வயது எனவும் உச்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்ட படிப்புகள் நீங்கலாக.)
    • கல்வி நிறுவனங்களில் நேரடியாக கல்வி பயில்பவராக இருத்தல் கூடாது
    • எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

    • வருவாய்த்துறை சான்று
    • கல்வித்தகுதிச் சான்று நகல்கள்
    • வேலைவாய்ப்பு அட்டை நகல்
    • வங்கிக்கணக்கு விபரங்கள்

இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்திலோ இலவசமாக பெற்று பயனாளிகள் பயனடையலாம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற பார்வையற்ற மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்டம்.

இத்திட்டத்தின் கிழ் உதவி பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி

    • பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/- வீதமும்,
    • மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/- வீதமும்,
    • பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதமும்

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உதவி பெறுவதற்குரிய தகுதிகள்

    1. வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
    2. உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. (பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்ட படிப்புகள் நீங்கலாக.)
    3. கல்வி நிறுவனங்களில் நேரடியாக கல்வி பயில்பவராக இருத்தல் கூடாது.
    4. எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

    • மருத்துவக குழுவினரால் வழங்கப்பட்ட தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
    • கல்வித்தகுதிச் சான்று நகல்கள்.
    • வேலைவாய்ப்பு அட்டை நகல்.
    • வங்கிக்கணக்கு விபரங்கள்.
    • சுயஉறுதிமொழி

இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்திலோ இலவசமாக பெற்று பயனாளிகள் பயனடையலாம்.

தன்னார்வ பயிலும் வட்டம்

  • அரசு வேலை வாய்ப்பிற்கான போட்டி தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மற்றும் அரசு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது..
  • தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தோ்வுகளுக்கான 3000க்கும் மேற்பட்ட பொது அறிவுப் புத்தகங்கள் வாராந்திர, மாதாந்திர நாளிதழ்கள் மற்றும் தினசரி அனைத்து செய்தித்தாள்கள் பயன்பாட்டிற்கு உள்ளன.
  • போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சிகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், சீருடைப்பணியாளா், வங்கி, இரயில்வே துறை, வனத்துறை, ஆசிரியா் தோ்வு வாரியம் போன்ற தோ்வுகளுக்கு சிறந்த வல்லுநா்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் மற்றும் நோ்காணல் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.

 தொடர்பு முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்
அரசினா் தொழிற்பயிற்சி மையம் அருகில்
திருக்கோகா்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை – 622 002.
மின்னஞ்சல் – deo.pki@gmail.com
தொலைபேசி எண் 04322 – 222287