முடிவு

வருவாய்த்துறை – வீட்டுமனை ஒப்படை

வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும். தகுதிவாய்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு, கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களிலிருந்து வருவாய் நிலை ஆணை எண்.21-இன் கீழ் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

மக்களின் தேவைக்கு, கிராம நத்தம் நிலங்கள் போதுமானதாக இல்லாதபோது, ஆட்சேபகரமற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களைக் கிராம நத்தமாக வகைபாடு மாற்றம் செய்ய, வருவாய்க் கோட்ட அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவா்கள் ஆகியோருக்கு, வருவாய் நிலை ஆணை எண்.21(6)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுதியுள்ள வீடில்லா ஏழைகளுக்கு வீட்டுமனைகள் ஒப்படை செய்யப்படுகின்றன. நீர்நிலைப் புறம்போக்குகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு இனங்களைத் தவிர்த்து, ஒப்படை செய்யக்கூடிய பிற நிலங்கள் தகுதியுள்ள நபா்களுக்கு வீட்டுமனைக்காக ஒப்படை செய்யப்டுகின்றன.

வீட்டுமனை ஒப்படையைப் பொறுத்த வரையில், கிராமப்புறங்களில், ஆண்டு வருமானம் ரூ.30,000-க்குக் குறைவாகவும், நகா்புறங்களைப் பொறுத்த வரையில் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்குக் குறைவாகவும் உள்ள வீடில்லா ஏழைக் குடும்பத்தினா் இலவசமாக வீட்டுமனை பெறத் தகுதியுடையவராவர். வீட்டுமனைகள், குடும்பத்தின் பெண் உறுப்பனா் பெயரில் மட்டுமே ஒப்படை செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, கிராமங்களில் மூன்று சென்ட் நிலம், நகராட்சி எல்லைக்குள் ஒன்றரை சென்ட் நிலம், மாநகராட்சி எல்லைக்குள் ஒரு சென்ட் நிலம் என்ற அளவில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைகள் ஒப்படை செய்யப்படுகின்றன.

அரசாணை (நிலை) எண்.248, வருவாய்த்துறை, நாள்.28.07.2009-இன் கீழ் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் பல்வேறு அலுவலா்களுக்கு, வீட்டுமனை ஒப்படை செய்வதற்கு, வழங்கப்பட்டுள்ள நிதி அதிகார வரம்பு (ஒப்படை செய்யப்படும் நிலத்தின் மதிப்பு) கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை ஒப்படைக்கான நிதி அதிகார உச்சவரம்பு
வ.எண் அலுவலா்கள் நிதி அதிகார உச்சவரம்பு (நில மதிப்பு ரூபாயில்)
1 வட்டாட்சியா் Rs.30,000/-
2 கோட்டாட்சியா் Rs.50,000/-
3 மாவட்ட வருவாய் அலுவலா் Rs.1,00,000/-
4 மாவட்ட ஆட்சித் தலைவர் Rs.4,00,000/-
5 நில நிர்வாக ஆணையர் Rs.5,00,000/-
6 அரசு Rs.5,00,000/-க்கு மேல்

வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதுடன், 2011-2012ஆம் நிதியாண்டு முதல் 2017-2018 ஆம் நிதியாண்டு வரையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 48,826 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலவச வீட்டுமனைப்பட்டாக்கள்
ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
2011-2012 3301
2012-2013 3972
2013-2014 4440
2014-2015 7675
2015-2016 9407
2016-2017 10031
2017-2018 10000
மொத்தம் 48,826

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், வீடற்ற ஏழை மக்களின் சமுதாய நிலை உயா்ந்துள்ளது.

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனை ஒப்படை வழங்கும் அலுவலா்
வ.எண் வட்டம் அலுவலா் கைபேசி எண்
1 புதுக்கோட்டை வட்டாட்சியா் 9445000641
2 ஆலங்குடி வட்டாட்சியா் 9445000640
3 கறம்பக்குடி வட்டாட்சியா் 9787598760
4 கந்தா்வகோட்டை வட்டாட்சியா் 9445000642
5 திருமயம் வட்டாட்சியா் 9445000643
6 அறந்தாங்கி வட்டாட்சியா் 9445000644
7 ஆவுடையார்கோவில் வட்டாட்சியா் 9445000645
8 மணமேல்குடி வட்டாட்சியா் 9445000646
9 இலுப்பூர் வட்டாட்சியா் 9445000639
10 விராலிமலை வட்டாட்சியா் 9445167797
11 குளத்தூா் வட்டாட்சியா் 9445000638
12 பொன்னமராவதி வட்டாட்சியா் 9443835778