முடிவு

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், அவர்களுக்கு பல்வேறு வகையான நலதிட்ட உதவிகள் சென்று சேர்வதை உறுதிபடுத்திடுவதற்கும், அரசால் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995ல் இயற்றப்பட்டது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் அவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், சமவாய்ப்ப்பினை வழங்கிடவும், அவர்கள் முழுவதுமாக பங்கேற்க செய்திடவும் இச்சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டத்தின்படி, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையானது மாநில அளவில் அமைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில்,புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக கீழ்கானும் அரசு நலதிட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வ.எண் அரசு நலத்திட்டத்தின் பெயர் நலதிட்டம் பெறுவதற்கான தகுதி / வழங்கப்படும் உதவி மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
1 தேசிய அடையாள அட்டை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் மருத்துவக்குழுக் முகாமில் மாற்றுத்திறனுடைய நபர் நேரில் ஆஜராக வேண்டும். மாற்றுத்திறன் தன்மை 40% உள்ளவா்களுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று அல்லது ஆதார்அட்டை நகல்
 2. பாஸ்போர்ட் புகைப்படம்-4

விண்ணப்பம் 1 (PDF 143KB)
விண்ணப்பம் 1எ (PDK 61KB)
விண்ணப்பம் 1பி (PDF 119KB)
விண்ணப்பம் 1சி (PDF 113KB)

2 நாடு முழுவதும் செல்லத்தக்க ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை UDID இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படவேண்டும் இணையதள முகவரி
http://www.swavlambancard.gov.in/
3 கல்வி உதவித்தொகை

மாநில அரசின் கல்வித்தொகை

 

 

 

 

 

 

 

மத்திய அரசின் மூலம்
9ம்வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

 

 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு ஆண்டிற்கு 1-5 வகுப்பு வரை ரூ.1000, 6-8 வகுப்புவரை ரூ.3000, 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ரூ.4000 இளங்கலை பட்டப்படிப்பு / பட்டயம் ரூ.6000, முதுகலை பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ரூ.7000 வழங்கப்பட்டு வருகிறது

 

 

 

 

மத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.

 

 1. குடும்ப அட்டை நகல்
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை
 3. 9ம் வகுப்பு அதற்கு மேல் கல்வி பயில்பவா்கள் மதிப்பெண் சான்று சமா்பிக்க வேண்டும்.
 4. 40 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 5. வங்கிகணக்கு புத்தக நகல் விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டும்

விண்ணப்பம்-3 (PDF 52KB)

 

மத்திய அரசின் கல்வித்தொகை 9மற்றும் 12ம் வகுப்பு 6000 முதல் 9000 வரை மேல் படிப்பு படிப்பவர்களுக்கு 6000 முதல் 20000 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள்
அவர்களது பள்ளி மற்றும் கல்லுாரி மூலமாக Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
https://scholarships.gov.in/

4 பார்வையற்ற மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கும் திட்டம் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு வாசித்து காட்டுபவா்களுக்கு ஆண்டிற்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.3000-பட்ட வகுப்புகளுக்கு ரூ.5000- மேல்நிலை பட்ட வகுப்புகள் / தொழில்நிலை படிப்புகள் ரூ.6000-ம் வழங்கப்பட்டு வருகிறது
 1. குடும்ப அட்டை நகல்
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று
 4. முந்தைய வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்
 5. வங்கிகணக்கு புத்தக நகல் இணைக்கப்பட வேண்டும்
 6. கல்வி உதவித்தொகை விண்ணபத்திலேயே வாசிப்பளாரின் விவரம் குறிப்பிடப்பட வேண்டும்
5 சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுக்கான மான்யம் வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த துறையிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். வயது 18க்கு மேல் 55 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மானியமாக கடன் தொகையில் 3-ல் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
 1. குடும்ப அட்டை நகல்
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம் – 2

விண்ணப்பம் 5 (PDF 58KB)

6 பார்வையற்றோருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை பார்வையற்றவா் பணி மற்றும் சுயதொழில் நிமித்தமாக வெளியில் சென்று வர ஊக்குவிப்பதற்காக மாவட்டம் முழுவதும் செல்வதற்கு பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
 1. தேசிய அடையாள அட்டை நகல்
 2. குடும்ப அட்டை நகல்
 3. புகைப்படம் -3

விண்ணப்பம் 6எ (PDF 65KB)

7 அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவிகிதம் கட்டண சலுகை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பேருந்தில் சென்று வருவதற்காக தேசிய அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் கொடுக்க வேண்டும்
8 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, பயிற்சி மற்றும் பணிக்கு இல்லத்தில் இருந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள் 100 கி.மீ வரை சென்று வருவதற்கு வழங்கப்பட்டு வருகிறது.
 1. தேசிய அடையாள அட்டை நகல்
 2. குடும்ப அட்டை நகல்
 3. புகைப்படம்-3
 4. உரிய சான்றிதழ்

விண்ணப்பம் 6பி (PDF 68KB)

9 துணையாளருடன் சலுகைக் கட்டண பேருந்து பயணத்திட்டம் துணையாளா் துணையின்றி செல்ல இயலாத அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் துணையாளா் ஒருவருடன் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையில் பயணம் செய்வதற்கு வழங்கப்படுகிறது உரிய படிவத்தில் அரசு மருத்துவரின் சான்று பெற்று நகலினை நடத்துனரிடம் வழங்கப்பட வேண்டும்.
10 மாற்றுத்திறனாளிகளுக்கான தீருதவி வழங்கும் திட்டம் கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தகுதியுடையவா் கொலை, கொள்ளை, கொடூர காயம், பாலியல் பலாத்காரம் போன்ற துயருற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறளாளிகளும் வழக்காடு மன்றத்திற்கு சென்றுவர மற்றும் வழக்கு செலவினங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
11 மீட்புத்திட்டம் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்பு திட்ட குழுவினரால் மீட்டு அரசு அனுமதித்துள்ள மனநல காப்பகங்களில் சோ்க்கப்படுவா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அரசு அனுமதித்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் மனம் நல காப்பகத்தில் சோ்க்கப்படுவா்.தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 9787542508
9443603874
12 மூன்று சக்கர சைக்கிள் இரண்டு கால்களும் செயல் இழந்து இருத்தல் வேண்டும். கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
13 சக்கர நாற்காலி / மடக்கு சக்கர நாற்காலி கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 வயதிற்கு மேற்பட்டவராகவும் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்

விண்ணப்பம் – 11-24 (PDF 58KB)

14 மூளை முடக்குவாத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புசக்கர நாற்காலி மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்தவர்களுக்காக சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்

விண்ணப்பம் – 11-24 (PDF 58KB)

15 முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புசக்கர நாற்காலி விபத்து மற்றும் பிற காரணங்களால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்கள் உட்காருவதற்கான சிறப்பு நாற்காலி வழங்கும் திட்டம்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்

விண்ணப்பம் – 11-24 (PDF 58KB)

16 கால் தாங்கிகள் (காலிபா்) வழங்கும் திட்டம் போலியோ, மூளை முடக்கு வாதம் மற்றும் பிற காரணங்களால் கால் / கால்கள் செயல் இழந்தவா்கள் வழங்கும் திட்டம்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்

விண்ணப்பம் – 11-24 (PDF 58KB)

17 செயற்கை கால், கை வழங்கும் திட்டம் விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்ட நபா்கள் தகுதியுடையவா்கள்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
18 நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டம் விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்டு பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் பணிபுரியும், சுயதொழில் புரியும் நபா்கள் தகுதியுடையவா்கள்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. கல்விச்சான்று / பணிச்சான்று
19 ஊன்றுகோல்கள் வழங்கும் திட்டம் (கைதாங்கி முழங்கை தாங்கி) விபத்து மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டு கால் / கால்கள் செயல் இழந்தவா்களுக்கு ஊன்று நடக்க வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
20 காதொலி கருவி மற்றும் சூரிய ஒளியினால் சக்தி பெறும் மின்கலம் வழங்கும் திட்டம் 3 வயதிற்கு மேற்பட்டு காது கேளாத தன்மை உடையவா்களாக இருக்க வேண்டும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. ஆடியோகிராம் சான்று
21 காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி வழங்கும் திட்டம் 6ம் வகுப்பு அதற்கு மேல் கல்வி பயில்பவா்கள் / பணிபுரிபவா்கள் / சுயதொழில்புரிபவா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. ஆடியோகிராம் சான்று
 5. கல்விச்சான்று / பணிச்சான்று
22 பிரெய்லி கைக்கடிகாரம் முழுவதும் பார்வையற்று, பணிபுரிபவராகவோ / சுயதொழில் புரியும் அல்லது 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. ஆடியோகிராம் சான்று
 5. கல்விச்சான்று / பணிச்சான்று
23 மேக்னிபயா் – (கையடக்க வீடியோ உருப்பெருக்கி) 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் பார்வை குறைபாடு உடையவா்கள் எழுத்துகளை பெரிதாக்கி படிப்பதற்கு வழங்கப்படுகிறது.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. ஆடியோகிராம் சான்று
 5. கல்விச்சான்று / பணிச்சான்று
24 கருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
25 மோட்டார் பொருந்திய மூன்று சக்கர வண்டி (Petrol Scooter) மாணவா் / பணிபுரிவோர் / சுயதொழில் புரிவோர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவா்களாகவும் கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் தகுதியுடையவா்கள் ஆவார்.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. கல்விச்சான்று / பணிச்சான்று
26 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 18 வயதிற்கு மேற்பட்டு 45 வயதிற்கு உட்பட்ட, கால் / கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத பேசும் திறனற்ற, மிதமான மனநிலை பாதிக்கப்பட்டவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம்
 4. தையல் சான்று
27 மனவளா்ச்சிகுன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மனவளா்ச்சி உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. மாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2
 4. வட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று
 5. வங்கிக்கணக்குப் புத்தக நகல்

விண்ணப்பம் – 25-27 (PDF 58KB)

28 கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டம் பாதிப்பின் சதவிகிதம் குறைந்த பட்சம் 75 சதவிகிதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500- வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. மாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2
 4. வட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று
 5. வங்கிக்கணக்குப் புத்தக நகல்

விண்ணப்பம் – 25-27 (PDF 58KB)

29 தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. மாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2
 4. வட்டாட்சியா் அலுவலகத்தில் பி.ஹெச்.பி (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று
 5. வங்கிக்கணக்குப் புத்தக நகல்

விண்ணப்பம் – 25-27 (PDF 153KB)

30 தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவாரக இருத்தல் வேண்டும். பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1500/- வழங்கப்படும்.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. மாற்றுத்திறனாளி / பாதுகாவலா் புகைப்படம் -2
 4. வட்டாட்சியா் அலுவலகத்தில் (வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை) பெறவில்லை என்பதற்கான சான்று
 5. வங்கிக்கணக்குப் புத்தக நகல்

விண்ணப்பம் 28 (PDF 126KB)

31 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் (பி.ஹெச்.பி ஐ.ஜி.ஓ.ஏ.பி) 40% மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட கை, கால் குறைபாடுடையவர், மனவளா்ச்சி குன்றியவர், மூளை முடக்குவாதத்தால் பாதிப்படைந்து குணமடைந்தவர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றவர், காது கேளாத, பேச்சுத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளில் 75% மேல் குறைபாடுடைய 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த தாலுகாவின் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அவர்களுக்கு விண்ணப்பித்து உதவி பெறலாம்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
 3. புகைப்படம் -2
 4. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும்.
 5. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று
 6. வங்கிக்கணக்குப் புத்தக நகல்
32 திருமண நிதி உதவி திட்டம்

  • பார்வையற்றவரை திருமணம் செய்துகொள்ளும் பார்வையுள்ள நபருக்கு திருமண நிதியுதவி

 

 

 • காது கேளாத, பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
 • மாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி
முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியை மணந்து கொள்ளும் நபர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியினை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி திருமண திட்டத்தில் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.

அ. பொதுதிட்டம்
காசோலை ரூ.12,500- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.12,500- மொத்தம் ரூ.25,000 (திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)
ஆ. பட்டம் / பட்டயம் பெற்றவர்களுக்கான திட்டம் காசோலை ரூ.25,000- தேசிய சேமிப்புபத்திரம் ரூ.25,000- மொத்தம் ரூ.50,000

(திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது)

 

 1. முதல் திருமணத்திற்கான சான்று
 2. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 3. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 4. மணமக்கள் புகைப்படம்
 5. திருமண பத்திரிக்கை
 6. கல்வி தகுதிச்சான்று
 7. பிற திட்டத்தில் திருமண உதவித்தொகை பெறவில்லை என்பதற்கு சான்று

விண்ணப்பம் 30 (PDF 126KB)

33 தேசிய ஊனமுற்றோருக்கான நிதி மேம்பாட்டு கழகம் (NHFDC)
வங்கிகடன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொண்டு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பயனடையலாம்
18 வயது முதல் 55 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெறலாம் இத்திட்டத்தில் ரூ.25,000 வரை தனிநபர் ஜாமீன், 25,000 முதல் 50,000 வரை இரண்டு நபர்கள் ஜாமீன் கையொப்பம் இட வேண்டும். ரூ.50,000க்கு மேல் ரூ.25,00,000/– வரை (சொத்து அடமானத்தின்) பேரில் வங்கி கடன் வழங்கப்படும். ஆண்களுக்கு 5சதவிகிதம் பெண்களுக்கு 4சதவிகிதம் குறைந்த பட்ச வட்டியாக வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் கடனை முழுமையாக செலுத்தி முடிப்பவர்களுக்கு வட்டித்தொகை முழுமையும் விலக்கு அளிக்கப்படும்.  

 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. புகைப்படம்
 4. வருமான சான்று
 5. வயது சான்று
 6. கல்வி தகுதிச்சான்று
 7. ஜாதிச்சான்று
 8. தொழிலுக்கான திட்ட அறிக்கை
 9. அரசு / பொது நிறுவன ஊழியர் ஜாமீன் சான்று
 10. செய்ய உள்ள தொழிலுக்கான உரிமம், மற்றும் திருப்பிச்செலுத்தும் திறன் பற்றிய விபரம் கணக்காளரிடம் பெற்று வழங்கப்பட வேண்டும்

விண்ணப்பம் 34 (PDF 126KB)

34 பாரதபிரதமர் வேலை வாய்ப்பு பெருக்கத்திட்டம் (PMEGP), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுயதொழில் வழங்கும் திட்டம் (UYEGP) மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கியில் பெறும் மொத்தக்கடன் தொகையில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையில் 5% மானியமாக வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. புகைப்படம்

https://www.kviconline.gov.in/pmegpeportal/
http://www.msmeonline.tn.gov.in/uyegp/

35 காது கேளாத இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் முதல் 3 வரையிலான காது கேளாத இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. புகைப்படம்
36 சிறப்புப்பள்ளிகள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் உணவு, உடை மற்றும் தங்குமிட வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. புகைப்படம்
37 மனவளர்ச்சி குன்றிய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 0 முதல் 6 வரையிலான மனவளர்ச்சி இளஞ்சிறார்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிற்சியளித்து தொடர்கல்வி வழங்கப்படும்
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. புகைப்படம்
38 மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் 10 வயது புர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொள்ள தகுதியானவர்கள், நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் மூக்குக்கண்ணாடி பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் வேறு எந்த துறையிலும் நலதிட்ட உதவிகள் பெறவில்லை என்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட வேண்டும்

விண்ணப்பம் 39 எ (PDF 126KB)
விண்ணப்பம் 39 பி (PDF 525KB)
விண்ணப்பம் 39 சி (PDF 156KB)

39 தேசிய அறக்கட்டளை மாவட்ட உள்ளுர் குழுமம், புதுக்கோட்டை 18 வயது புர்த்தியடைந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், புறஉலகு சிந்தனை இல்லாதவா்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வகை மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்ட உள்ளுர் குழு மூலமாக பாதுகாவலர் நியமனச்சான்று மற்றும் இதர உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 1. குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்று
 2. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்.
 3. பாதுகாவலருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
 4. பாதுகாவலரின் ஒப்புதல் சான்றுகள்
 5. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரை நேரில் அணுகி பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பம்-40 (PDF 103KB)

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் பெயா் பெறுவதற்கான தகுதிகள்
1 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்
 1. கல்வித் தகுதி சான்று மதிப்பெண் பட்டியல் (இருப்பின்)
 2. சாதிச்சான்று
 3. குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை அல்லது இருப்பிடச்சான்று ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் நகல்படிப்பறிவு இல்லாதவா்கள் பதிவு செய்வதற்கு 14 வயது பூர்த்தி அடைந்திருப்பதுடன் வயது சான்று தேவை
2 பதிவு புதுப்பித்தல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பதிவு நிரந்தர பதிவாகும். புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை
3 வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு விண்ணப்பம் 1.மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு 4% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இப்பணிகளுக்கு இவா்களுக்கு வயது வரம்பில் 10 வருடங்கள் சலுகை அளிக்கப்படும்.
10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய அரசு பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
4 போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி TNPSC, UPSC, SSC, RRB, Banking Exam போன்றவற்றிற்கான போட்டி தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. இத்தகைய தோ்வுகளுக்கு விண்ணப்பித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
5 வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும். ஏனையவா்களுக்கு 5 வருடம் முடிந்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படும்
12ம் வகுப்பு தோ்ச்சிபெற்றவா்களுக்கு மாதம் ரூ.750/– வழங்கப்படும்
பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு மாதம் ரூ.1000/– வீதம் வழங்கப்படும்குறிப்பு பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிடா் வகுப்பைச் சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 45 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்.
ஏனைய வகுப்பை சார்ந்தவா்களுக்கு 10 வருடங்கள் அல்லது அதிகபட்ச வயது 40 வரை. இதில் எது குறைவோ அதுவரை வழங்கப்படும்
6 தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இம்முகாம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

<ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையினால் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் பெயா் பெறுவதற்கான தகுதிகள்
1 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS)
 1. மாற்றுத்திறனாளி அல்லது அவா்களது குடும்பத்தை சார்ந்தவா்களுக்கு இத்திட்டத்தில் வேலை உறுதி செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
 2. வேலைக்கான அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு 150 நாட்களுக்கு வேலை அளிக்கப்படும். (குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோ்த்து)
 3. மாற்றுத்திறனாளிகளில் உடல்தகுதி பொறுத்து அவர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள பணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
 • இத்திட்டத்திற்கான வேலைதளத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பராமரித்தல்
 • பணிக்கு வருகை தரக்கூடிய குழந்தைகளை பராமரித்தல்
 • பணி தலத்தில் பணிபுரிபவா்களுக்கு குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் அல்லது அவா்களால் இயன்ற பணியை செய்தல்
 • மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் பணிக்கு வருகை தந்தால் அன்றைய தினத்திற்கான முழு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
 • இத்திட்டத்தில் வேலை பெறுவதற்கான அட்டையை பெற இவா்கள் விண்ணப்பம் அல்லது நேரடி கோரிக்கை அளித்து பெற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
2 இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டம் (IAY) இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு கட்ட இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 1. இத்திட்டத்தில் பயனடைய மாற்றுத்திறனாளியின் ஊனத்தின் விழுக்காடு 40% மற்றும் அதற்குமேல் இருக்க வேண்டும்.
 2. மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வீடு கட்ட 210 சதுர அடி குடியிருப்பிற்கான மனை இருக்க வேண்டும்.
 3. கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
3 முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் (CMSPGHS)
 1. இத்திட்டத்தில் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
 2. இத்திட்டத்திற்கான பயனாளி கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
 3. வீடுகட்ட சொந்தமாக மனை 310 சதுர அடி இருக்க வேண்டும்.
4 பாரத பிரதமரின் நினைவு குடியிருப்பு திட்டம் (PMAY(G))
 1. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
 2. வீட்டுமனை இல்லாத கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை அடையாளம் காணப்பட்டு அரசால் வழங்கப்பட்டால் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் அல்லது 269 சதுர அடி மனை இருக்க வேண்டும்.
 3. வீடு கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததாரா் இன்றி அவர்களே செய்ய வேண்டும்.
5 முழுசுகாதார இயக்க திட்டம் இத்திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு இலவச கழிப்பறை ரூ. 12,000/– மதிப்பில் கட்டி தரப்படும்.
6 சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்

 1. மூன்று சக்கர சைக்கிள்
 2. மடக்கு சக்கர நாற்காலி
 3. கருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்
 4. கைதாங்கி மற்றும் முழங்கை தாங்கி
 5. செயற்கை கை மற்றும் கால்
 6. நவீன செயற்கைக்கால்
 7. காதொலி கருவி
 8. காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி
 9. சூரிய ஒளியினால் சக்தி பெறும் மின்கலம் (Solar Charger)
 10. இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் (ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 எண்ணிக்கை மட்டும்)
மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.(குறிப்பு – ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்திற்கு மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டு 2 கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் இருப்பதுடன் கல்வி பயிலபவா் / சுயதொழில்புரிபவா் / பணிபுரிபவராக இருக்க வேண்டும்.)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள் விபரம்

வ.எண் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி பயிற்றுவிக்கப்படும் வகுப்புகள்
1 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, டி.எஸ்.எம்.எஸ். வளாகம் பின்புறம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை 1 முதல் 8ம் வகுப்பு வரை
2 அரசு பார்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளி,
எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும்
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை
1 முதல் 8ம் வகுப்பு வரை
3 அறந்தை அன்னை செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளி,
காரைக்குடி ரோடு,
அறந்தாங்கி, (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி)
1 முதல் 10 ம் வகுப்பு வரை
4 ரெனேசான்ஸ் தொண்டு நிறுவனம்,
மனவளா்ச்சிகுன்றியோருக்கான சிறப்புப்பள்ளி.
(அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி)
6 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கான உண்டு உறைவிட சிறப்புப்பள்ளி,
14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான தொழில் பயிற்சிமையம்
5 வள்ளலார் காப்பகம்,
மனவளா்ச்சிகுன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, சத்திரப்பட்டி, குரும்புா் வழி
அறந்தாங்கி (தா), புதுக்கோட்டை (அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனப்பள்ளி)
மனவளா்ச்சிகுன்றியவர்களுக்கு சிறப்புக்கல்வி
6 சீடு தொண்டுநிறுவனம்,
மனவளா்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம், நிஜாம் காலணி 6வது தெரு, அரபி ஓரியண்டல் பள்ளி அருகில்,
புதுக்கோட்டை.
6 வயதிற்குட்பட்ட மனவளா்ச்சிகுன்றிய
குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி
7 காதுகேளாத இளம்சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சிமையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி,
மச்சுவாடி, புதுக்கோட்டை.
6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி
8 வேர்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம்,
அரசு மருத்துவமனை வளாகம்,
அன்னவாசல், இலுப்புர் (தா)
புதுக்கோட்டை மாவட்டம்.
மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு
தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622 001.
தொலைபேசி எண். 04322-223678
ddawopdk@gmail.com