முடிவு

மாவட்டத்தைப் பற்றி

தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு, கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்ட இம்மாவட்டம், நில மற்றும் கடல் இயற்கை வளங்களை கொண்டுள்ளது. தமிழக வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவுடையார்கோவில் கோயில், குடுமியான்மலை, பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இசுலாமியர்களின் காட்டுபாவா பள்ளிவாசலும், பழமைவாய்ந்த ஆவூர் கிறிஸ்தவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்னவாசலும் இம்மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தை பறை சாற்றுகின்றன. விராலிமலையிலுள்ள மயில்கள் சரணாலயமும் , மலைகளிலும் குகைகளிலும் வடிவமைக்கப்பட்ட கோயில்களும் பிரதான சுற்றுலா தலங்களாகும்.

ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டமானது உருவாக்கப்பட்டது. தற்சமயம் இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களையும், குளத்தூர், இலுப்பூா், பொன்னமராவதி, விராலிமலை, ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய பனிரெண்டு தாலுகாக்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 763 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 4663 சதுர கி.மீ. ஆகும். 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி, . இம்மாவட்டமானது தண்ணீருக்கு பெரும்பாலும் பருவமழையையே நம்பி உள்ளது.

2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 16,18,345 ஆகும். இதில் ஆண்கள் 8,03,188. பெண்கள் 8.15,157. கிராமபுற மக்கள்தொகை 13,01,991. நகர்புற மக்கள்தொகை 3,16,354 ஆகும்.மொத்தம் படித்தவர்கள் 11,10,545 . இதில் ஆண்கள் 6,08,776 மற்றும் பெண்கள் 5,01,769 ஆகும்.