முடிவு

மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம் (சமிதி)

மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம் (சமிதி) 2012 ஆம் ஆண்டு முதல் ஸ்டாமின் வளாகம் குடுமியான்மலையில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை மற்றும் சகோதரத்துறை விரிவாக்க அலுவலர்களுக்காக இந்நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய குறிக்கோள்கள்

  • பொது, தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்களை சார்ந்த விரிவாக்க பணியாளர்களுக்கு, விரிவாக்க மேலாண்மை குறித்த திறனை மேம்படுத்துதல்.
  • திட்டமிடுதல், எடுத்துரைத்தல், செயலாக்கம், வரன்முறை மற்றும் மதிப்பீடு பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்குதல்.
  • வேளாண்மை விரிவாக்க பணிகள் திறனை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துதல்.
  • இரண்டாம் நிலை விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.
  • மேலாண்மை தொடர்புகள், பங்குபெறும் முறைகள் குறித்த வழிமுறைகளை ஏற்படுத்துதல்.
  • வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் உள்ள வேளாண்மை சார்ந்த நிலையங்களை ஒருங்கிணைத்து வருடாந்திர பணிமனை நடத்துதல்.

மேற்குறிப்பிட்டுள்ள செயல்பாட்டு திட்டங்களின்படி சமிதி மூலம் வேளாண்மை விரிவாக்க மேலாண்மை முதுகலை படிப்பு (Post Graduate Diploma in Agricultural Extension Management)> இடுபொருள் விற்பனையாளர்களுக்கான வேளாண் விரிவாக்க சேவை பட்டயப்படிப்பு (Diploma in Agricultural Extension Services for Input Dealers), பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான பூச்சிக்கொல்லி மேலாண்மை குறித்த சான்றிதழ் படிப்பு, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி (Skill Training of Rural Youth) மற்றும் பண்ணை ஆலோசகர் (Farm Advisor) போன்ற திட்டங்களை ஒருங்கிணைத்து, கண்காணிப்பு செய்து செயல்படுத்தப்படுகின்றன. மேலும் வேளாண்மை திட்டங்கள் தயாரித்தல், செயல்படுத்துதல், கண்காணிப்பு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்வதில் ஆலோசனைகள் சமிதி மூலம் வழங்கப்படுகின்றது.

சமிதி மூலம் நடத்தப்பட்ட பயிற்சிகள்
வ. எண் வருடம் அட்மா பணியாளர்களுக்கான அறிமுக பயிற்சிகள் அட்மா பணியாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சிகள் மாநிலத்திற்குள்ளே பயிற்சிகள் வெளி மாநில பயிற்சிகள் வெளி மாநில கண்டுணர்வு பயணம் மொத்தம்
1 2014-15 150 160 310
2 2015-16 291 411 792 73 1567
3 2016-17 440 2769 227 320 3756
4 2017-18 180 616 1803 232 2831
5 2018-19 60 120 1646 354 146 2326
6 2019-20 177 120 1271 109 159 1836
7 2020-21 0 478 1585 0 0 2063
வேளாண்மை விரிவாக்க மேலாண்மை முதுகலை படிப்பு
வ. எண் வருடம் பயிலுநர்களின் எண்ணிக்கை தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கை
1 2013-14 56 49
2 2014-15 53 49
3 2015-16 36 31
4 2016-17 50 42
5 2017-18 36 29
6 2018-19 62 50
7 2019-20 51 37
இடுபொருள் விற்பனையாளர்களுக்கான வேளாண் விரிவாக்க சேவை பட்டயப்படிப்பு
வ. எண் மாவட்டம் வருடம் இணைப்பு பயிற்சி மையம் பட்டய படிப்பில் சேர்ந்தோர் பட்டய படிப்பை முடித்தவர்கள்
1 தேனி 2015-16 VAPS, NGO, மதுரை 40 40
2 ஈரோடு 2015-16 AGCASS, NGO, ஈரோடு 40 39
3 திருவண்ணாமலை 2015-16 KSKSR Trust, NGO திருவண்ணாமலை 40 34
4 திருச்சி 2016-17 VAPS, NGO, மதுரை 40 40
5 ஈரோடு 2016-17 வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, ஈரோடு 40 40
6 காஞ்சிபுரம் 2017-18 திட்ட இயக்குநர் (ATMA) காஞ்சிபுரம் 40 40
7 திண்டுக்கல் 2017-18 வேளாண் அறிவியல் நிலையம், காந்தி கிராமம் 40 39
8 ஈரோடு 2017-18 AGCASS, ஈரோடு 40 38
9 ஈரோடு 2017-18 வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, ஈரோடு 40 37
10 காஞ்சிபுரம் 2017-18 திட்ட இயக்குநர் (ATMA) காஞ்சிபுரம் 40 40
11 கரூர் 2017-18 வேளாண் அறிவியல் நிலையம், கரூர் 40 40
12 காஞ்சிபுரம் 2018-19 திட்ட இயக்குநர் (ATMA) காஞ்சிபுரம் 40 40
13 ஈரோடு 2018-19 AGCASS, ஈரோடு 40 39
14 ஈரோடு 2018-19 வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, ஈரோடு 40 40
15 ஈரோடு 2019-20 AGCASS, ஈரோடு 40 48 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
16 ஈரோடு 2019-20 வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, ஈரோடு 40 48 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
17 ஈரோடு 2020-21 வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, ஈரோடு 40 15 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
18 சிவகங்கை 2020-21 உழவர் பயிற்சி நிலையம், சிவகங்கை 40 20 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
19 திருவண்ணாமலை 2021-22 உழவர் பயிற்சி நிலையம், திருவண்ணாமலை 40 4 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
20 திருப்பூர் 2021-22 வேளாண் அறிவியல் நிலையம், திருப்புர் 40 ஆரம்பிக்கவில்லை
21 ஈரோடு 2021-22 AGCASS, ஈரோடு 40 2 வகுப்புகள் முடிக்கப்பட்டுள்ளது
22 திண்டுக்கல் 2021-22 வேளாண் அறிவியல் நிலையம், திண்டுக்கல் 40 ஆரம்பிக்கவில்லை
பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான பூச்சிக்கொல்லி மேலாண்மை குறித்த சான்றிதழ் படிப்பு
வ. எண் மாவட்டம் வருடம் இணைப்பு பயிற்சி மையம் பட்டய படிப்பில் சேர்ந்தோர் பட்டய படிப்பை முடித்தவர்கள்
1 உதகமண்டலம் 2021 – 22 உழவர் பயிற்சி நிலையம், ஊட்டி 40 இறுதி தேர்வு 22.08.2021 அன்று நடத்தப்பட்டது
2 தூத்துக்குடி 2021 – 22 வேளாண் அறிவியல் நிலையம், வாகைக்குளம் 40 23.09.2021 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது
3 திருச்சி 2021 – 22 உழவர் பயிற்சி நிலையம், திருச்சி 30 17.09.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது
4 சேலம் 2021 – 22 உழவர் பயிற்சி நிலையம், சேலம் 24 01.10.2021 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது
5 இராமநாதபுரம் 2021 – 22 உழவர் பயிற்சி நிலையம், பரமகுடி 39 24.09.2021 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி
வ. எண் வருடம் நடத்தப்பட்ட பயிற்சிகள்
1 2017-18 30
2 2018-19 40
3 2019-20 38
4 2020-21 26
பண்ணை ஆலோசகர்
வ. எண் வருடம் படிப்பில் சேர்ந்தோர்
1 2017-18 15
2 2018-19 17
3 2019-20 64
4 2020-21 50