முடிவு

மகளிர் திட்டம்

அறிமுகம்

பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டமே மகளிர் திட்டம் ஆகும்.1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக “தர்மபுரி மாவட்டத்தில்” பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி” ( International Fund for Agricultural Development) நிறுவனத்தின் உதவியுடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கும் திட்டம் ஒரு முனோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 1991-1992 ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கம் படிப்படியாக வளர்ந்து, தற்போது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் நலிவுற்ற மகளிரை இணைத்து , ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த இயக்கமாக இயங்கி வருகிறது. பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி ( ) நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், மகளிர் திட்டம் 1997ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. 1998-1999 ஆம் ஆண்டிலிருந்து புதுக்கோட்டையில் மகளிர் திட்டம் செயல்பட்டு வருகிறது..

மகளிர் திட்டத்தின் குறிக்கோள்கள்

  • மகளிர் சமூக மேம்பாடு அடைதல்
    1. மகளிரிடையே “ நமக்கு நாமே” – என்ற உணர்வை ஏற்படுத்துதல்
    2. சமூக விழிப்புணர்வை உண்டாக்குதல்
    3. கிராம அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்தல்.
    4. குடும்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுக்கும் பொறுப்பினை பகிர்ந்தளிக்கச் செய்தல்.
    5. அரசு மற்றும் பிறதுறை நலத் திட்டங்களை தெரிந்து பயன் பெற வைத்தல்.
  • மகளிர் பொருளாதார மேம்பாடு அடைய செய்தல்
    1. சேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல்.
    2. நிதித்தேவைகளை சுயமாக பூர்த்திசெய்தல்
    3. தொழில் செய்து குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்துதல்.
    4. அரசு வழங்கும் கடன் உதவிகளைப் பெற்று பயன் அடைதல்
    5. பெண்கள் பெயரில் சொத்துக்களை உருவாக்குதல்.
  • மகளிரின் திறன்களை வளர்த்தல்
    1. பெண்களிடையே அரிவுத் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன் வளர்த்தல்.
    2. தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல்
    3. நடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்று தருதல்
    4. சுய தொழிலுக்கான, தொழில் திறன் பயிற்சி அளித்தல்
    5. கணக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை உருவாக்குதல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

மத்திய மற்றும் மாநில அரசுகள் வறுமையை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வறுகின்றன. அத்திட்டங்களில் ஒன்றான ‘பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டம்’ (SGSY)மத்திய அரசால் மறுசீரமைக்கப்பட்டு, தேசிய ஊராக வாழ்வாதார இயக்கம் (NRLM)என்ற பெயரில் 2011-12 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற பெயரில் 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாநில மக்களின் தேவைக்கேற்பவும், ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், சென்னை மாவட்ட நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் ஊரக பகுதிகளில் முறையாகச் செயல்படுத்தப்படும். ஊரக ஏழை மக்களுக்கான வலுவான உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

இயக்கத்தின் குறிக்கோள்

  • வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மற்றும் மிகவும் ஏழைகளை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து அவர்களில் மகளிர் சுய உதிவிக் குழுவில் இதுவரை இணையாதவர்களை ஒருங்கிணைத்து குழுக்களாக அல்லது புதியகுழு அமைத்தல் அல்லது பிற குழுக்களில் இணத்தல்
  • கிராமப்புற ஏழைகளுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை நிலைத்த தன்மையுடன் செயல்பட வைத்தல்.
  • இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வறுமையிலிருந்து விடுபடச் செய்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்.

இயக்கத்தின் கோட்பாடுகள்

  • வலுவான மக்கள் அமைப்புகளை உருவாக்குதல்.
  • மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர்க்கு உறுதுணையாக இருத்தல்
  • அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து செயல்படுதல்
  • ஏழை மக்களின் வளர்ச்சியில் அவர்களீன் பங்கையும், சமுதாயத்தின் பங்கினையும் உறுதி செய்தல்.
  • நாணயமான செயல்பாடு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் செய்திடுதல்.
  • வாழ்வாதார இயக்கத்தின் வெற்றிக்கும், கிராம வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுதல்.

சுய உதவிக் குழு விளக்கம்

ஒரே கிராமத்தை சேர்ந்த, ஒருமித்த கருத்துடைய 18 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள், 12 முதல் 20 வரை என்ற எண்ணிக்கையில் ஒன்றிணைந்து தங்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் ஒரே குழுவாக சேர்ந்து செயல்படுதலே “சுய உதவிக் குழு” எனப்படும்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இதுவரை, சுய உதவிக் குழுவில் இணைந்திடாத, விடுப்பட்ட, ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். சுய உதவிக் குழு என்பது கிராம அளவிலான சமுதாயம் சார்ந்த அமைப்பாகும்.

  • சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தகுதிகள்
    1. ஒரே கிராமம் (அ) ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்/ வசிப்பவர்கள்
    2. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்
    3. குறைந்த பட்சம் 12 நபர் முதல் 20 மகளிர் வரை உறுப்பினராகலாம்.
    4. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
    5. மாற்றுத் திறனாளிகளை தகுதி அடிப்படையில் சுய உதவிக் குழுவில் சேர்த்தல்.
    6. மாற்றுத் திறனாளிகள் குறைவக இருப்பார்களேயானால் சிறப்புக் குழுக்களாக 5 நபர்களை கொண்டு குழு அமைக்கலாம்.
    7. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவிக் குழுவில், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் 18 வயதிற்குக் குறைவான மாற்றுத்திறனாளிகள் சார்பாக, அவர்களின் பெற்றோர் (அ) பாதுகாவலர் குழுவின் பிரதிநிதியாகச் செயல்படலாம்.
  • முக்கிய நடவடிக்கைகள்
    1. வங்கியில் குழுவின் பெயரில் ஊக்குநர் ம்ற்றும் பிரதிநிதி சேர்ந்து இயக்குகிற வகையில் வங்கி கணக்கு துவங்குதல்.
    2. மாதம் 2 முதல் 4 கூட்டங்கள் நடத்துதல்.
    3. உறுப்பினர் சேமிப்பு குறைந்தது ரூ.250/- கட்டுதல்.
    4. உறுப்பினர் சந்தா செலுத்துதல் ( தீர்மானத்தின் அடிப்படையில்)
    5. ஏடுகள் முறையாக பராமறித்தல்.( வருகைப் பதிவு மற்றும் தீர்மான
    6. புத்தகம், ரொக்கப் பேரேடு மற்றும் பொதுப் பேரேடு, சேமிப்பு மற்றும் கடன் பேரேடு, தனிநபர் வங்கி கணக்கு புத்தகம்)
    7. சேமிப்பு மற்றும் சந்தா தொகையினை வங்கியில் தீர்மானத்தின் அடிப்படையில் அன்றே செலுத்துதல்.
    8. தீர்மானத்தின் அடிப்படையில் தொகையினை வங்கியிலிருந்து தனிநபர் கணக்கிற்கு மாற்றுதல்.
    9. ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பயிற்சி 6 நாட்கள் நடத்தப்படும் அதில் கலந்து கொள்ளுதல்
    10. உறுப்பினர் பயிற்சி 4 நாட்கள் நடத்தப்படும் அதில் கலந்து கொள்ளுதல்.
    11. கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுதல் மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுதல்.
    12. கணக்காளராக ஒருவரை தேர்வு செய்து பயிற்சி வழங்கி முறையாக செயல்பட ஒத்துழைத்தல்.
    13. உள்கடன் மற்றும் வெளிக்கடன் ( வங்கிகள் ) பெற்று தொழில் செய்து வருமானத்தை பெருக்குதல்
  • சந்தா
    1. உறுப்பினர்கள் குழுவில் தொடர்ந்திருப்பதை உருதி செய்ய செலுத்தப்படும் தொகையே சந்தா ஆகும்.
    2. குழு உறுப்பினர்கள் சந்தா தொகையினை குழுவில் முடிவு செய்யலாம்.
    3. இதனை குழுவின் நிர்வாக செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சேமிப்பு
    1. அனைத்து உறுப்பினர்களும், குறைந்த பட்ச தொகையை (ரூ250/-) நிர்ணயம் செய்து சேமிப்பு செய்யவேண்டும்
    2. உறுப்பினர்கள் அவரவர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப குறைந்த பட்ச சேமிப்பை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
    3. சுய உதவிக் குழு நன்கு வளர்ச்சியடைந்த பிறகு ( உதாரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு ) குழுவின் தேவையை விட நிதி அதிகமாக இருப்பின் , தேவை அளவை கணக்கில் கொண்டு உபரியாகஇருக்கும் சேமிப்புத் தொகையை குழுவில் தீர்மானம் இயற்றி , லாப பகிர்வு செய்து கொள்ளலாம்.
    4. இது தவிர தனிநபர் பண்டிகை கால சேமிப்பு மற்றும் கல்வி தேவைக்கான சேமிப்பு போன்றவைகளுக்காகவும் சேமிப்பு செய்யலாம்.

வங்கிகடன் இணைப்பு

சுய உதவிக் குழுஉறுப்பினர்களின் வாழ்வாதாரம் நிலைத்து நீடித்திடவும் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் வங்கியானது சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் செய்வதற்கு பலமுறை கடன் இணைப்புகளை வழங்குகிறது.

வட்டிமானியம்

ஊரக ஏழை மக்கள் தொழில் செய்து வாழ்வில் முன்னேறிட குறைந்த வட்டியில் கடன் இணைப்புகளை வழங்கிட தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டி மானியம் வழங்கிட வழிவகை செய்துள்ளது. வங்கியிலிருந்து பெற்றகடனை தவணை தவறாமல் முறையாக திரும்ப செலுத்திய குழுக்களுக்கு 7% வட்டிக்கு மேல் உள்ள வட்டி தொகையினை வங்கி வழங்கிட மகளிர் திட்டம் வங்கிக்கு வேண்டுகோளின் அடிப்படையில் தொகை விடுவிக்கும்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

சுய உதவிக் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்பு, சமூக மேம்பாடு மற்றும் உயர்நிலை நிறுவனங்களில் இவற்றின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை ஏற்படுத்த குடியிருப்பு அளவிலும், ஊராட்சி அளவிலும் இவை கூட்டமைப்புகளாக உருவாக்கப்படுகின்றன. சுய உதவிக் குழுக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஏழை மக்கள் நலனில் அக்கரைக் கொண்ட நிதி நிறுவனங்களாகவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் செயல்படும்.

ஒரு ஊராட்சிக்கு ஒரு ஊராட்சி அளவிளான கூட்டமைப்பு மட்டுமே செயல்படும். இது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் படி பதிவு செய்யலாம். சங்கப்பதிவுச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 42 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை அதன் தொழில் உற்பத்திக்கு வரிச் சலுகை வழங்கிட வழிவகுக்கிறது.

சிறப்பாக செயல்படும் கூட்டமைப்புக்கு விருது வழங்கிடவும் இக்கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட மறுசீரமைப்பு செய்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தில் குறைந்தது 10 முதல் 20 வரையிலான நபர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம். ஊராட்சி மன்ற தலைவரே கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கெளரவ தலைவராகவும், உறுப்பினராகவும் இருப்பார். ஊராட்சி மன்றத் தலைவர் தவிர மற்ற உறுப்பினர்கள் ஏழை மக்கள் பட்டியலில் இருத்தல் வேண்டும். கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் என்பது , சமுதாயம் சார்ந்த ஒரு சமூக அமைப்பாகும். கிராம வறுமை ஒழிப்புச் சங்கமானது, தமிழ்நாடு மாநில் ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கும், மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக அமையும்.

  • உறுப்பினர்கள்
    1. ஊராட்சி மன்ற தலைவர்
    2. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயற்குழுவிலிருந்து ஒரு உறுப்பினர்
    3. இளைஞர் அமைப்பிலிருந்து இருவர் (ஒரு துணைத் தலைவர் ஒரு பெண்)
    4. மாற்றுத்திறனாளி பிரதிநிதி ஒருவர்
    5. நலிவுற்றோர் பிரதிநிதி ஒருவர்
    6. ஒவ்வொரு குடியிருப்பிலுள்ள ஏழை மக்கள் பட்டியலிலிருந்து ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரை தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • உறுப்பினர்களின் தேர்வானது உறுப்பினர்கள் நேரடியாக கிராம சபையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்
    1. பெண் உறுப்பினர்கள் குறைந்தது 50% இருக்க வேண்டும்
    2. குறைந்தது 30% வரை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
    3. கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கக் கூடாது.
    4. செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாகவும் அதில் ஒருவர் மிகவும் ஏழை மக்கள் பட்டியலில் இருக்க வேண்டும்.

சமூக தணிக்கை குழு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது மக்களால் செயல்படுத்தப்படும் ஒரு மக்கள் இயக்கமாகும். இவ்வியக்கம், கோட்பாடுகளின் படி முறையாக செயல்படுகிறதா? பெறப்படும் நிதியானது நாணயத்துடன் செலவு செய்யப்படுகிறதா? போன்றவைகளைக் கண்காணிப்பதும் மக்களின் பொறுப்பாகும். இதற்காக ஒரு சமூகத் தணிக்கைக் குழு சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது.

விருதுகள்

சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு முன் உதாரணமாக விளங்கிட ஒவ்வொரு வருடமும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது.

சான்றிதலுடன் தொகை
வ. எண் விவரம் மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில்
1 சுய உதவிக் குழு 25,000 1,00,000 1,00,000
2 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு 1,00,000 3,00,000 3,00,000

ஆதார நிதி

புதிதாக அமைத்த சுய உதவிக்குழுக்கள் நன்கு செயல்பட வேண்டும் என்பதற்காக ரூ15,000னை வறுமை ஒழிப்பு சங்கமானது ஆறுமாதம் முடிவுற்ற குழுக்கள் தரமதிப்பீட்டில் தேர்வு பெற்றால் வழங்கும் இத்தொகையினை குழுக்கள் தொகுப்பு நிதியாக பயன்படுத்தி வங்கியிலிருந்து தொழில் செய்திட வங்கிகடன் இணைப்பு பெற்றிடலாம்.

துயர் குறைப்பு நிதி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தொழில் செய்து வாழ்வில் முன்னேறிடவும் எதிற்காலத்திற்கு சிறு தொகையினை சேமித்திடவும் ரூ5,000 முதல் ரூ15,000 வரை 7% வட்டியில் திரும்பி செலுத்திட ஏதுவாக வழங்கப்படுகிறது.

சமுதாய மூலதன நிதி

சுய உதவிக் குழுக்கள் தொழில் செய்து அதிக வருவாய் ஈட்டிட ஏதுவாக தொழில் நிதி ரூ50,000 விடிவிக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் இந்த நிதியினை தொழில் செய்திட பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக 12% வட்டியினை உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி

DDU-GKY – திட்டமானது 2014-15-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுகின்ற இளைஞர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100/- வீதம் பயணப்படியும் 3- மாதகால பயிற்சிக்கு ரூ.1000/- மதிப்புள்ள ஒரு சீருடையும், 6- மாதகால பயிற்சிக்கு 2- சீருடையும், பயிற்சி முடித்தபின் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதல் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு உள்ளூர் மாவட்டங்களில் 3- மாத காலத்திற்க்கு ரூ.1000/- வீதம் ஊக்கத்தொகையும், வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.1000/- வீதம் 6- மாதங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகின்றது.

இத்திட்டமானது 2016-17ம் ஆண்டில் மேலும் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு பயிற்சிபெறும் பயிற்சியாளறுக்கு வழங்கப்படும் பயணப்படி ரூ.125/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பயிற்சி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும். என்ற உண்ணத நோக்கில் வட்டார அளவில் ஒரு வேலைவாய்ப்பு முகாம்களும் மாவட்ட அளவில் இரண்டு வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்படுகிறது.

அம்மா இருசக்கர வாகன திட்டம்

உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் மகளிர் பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையிலும் அவர்களின் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் இத்திட்டத்தின் கீழ் வாகனத்தின் விலையில் பாதியோ அல்லது ரூ.25000/- இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

  • தகுதிகள்
    1. பயனாளி 18 முதல் 40 வயதுடையவராகவும்
    2. அவரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    3. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முதிர்கண்ணிகள், கனவணால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் மற்றும் திருனங்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

நகர்ப்புற ஏழைகளின் வறுமை மற்றும் தாக்கத்தை படிப்படியாக குறைக்க கூடிய திறமையான அடித்தள அமைப்புகளின் மூலம் முன்னேற்றம் அடையவும், சுய வேலை வாய்ப்புகள் மூலமாகவும், கூலி வேலை வாய்ப்புகளுடன் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை ஏற்படுத்துதல், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் தொடர்பாக வசதியான இடங்கள் ஒதுக்குதல், நிறுவனங்கள் மூலம் கடன் வசதி, சமூகபாதுகாப்பு மற்றும் சந்தைகள் உருவாக்குவதற்கான திறன் வாய்ப்புகள் ஏற்படுத்துதல் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்த இயக்கம் 2014-15ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

  • உட்க்கூறுகள்
    1. சமூக திரட்டல் மற்றும் சமூக அமைப்பு வளர்ச்சி , (SMID)
    2. வேலைவாய்ப்பு மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி (ESTP)
    3. சுய வேலை வாய்ப்பு திட்டம் (SEP-I)
    4. திறன் மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி (CBT)
    5. நகர்ப்புற வாழ்வாதார மையம் (CLC)

சமூக திரட்டல் மற்றும் சமூக அமைப்பு வளர்ச்சி , (SMID)

தேசிய நகற்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வறுமை கோட்டுக்குகீழ் உள்ள பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகிறது. குறைந்தது 70%க்கும் மேல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களை வைத்து சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகிறபோது தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தொகை விடுவிப்புக்கு வழிவகுக்கும். பொதுவாக 12 முதல் 20 பெண்களை வைத்து சுய உதவிக்குழு அமைக்கப்படுகிறது. சிறப்புக் குழுக்கள் குறைந்தது 5 நபர்களை வைத்து மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர், காகிதம் சேகரிப்பவர்கள், ரிக்க்ஷா வண்டி இழுப்போர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அமைக்கப்படுகிறது. ஆண் மாற்றுத்திறனாளிகலும் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

திறன்சார் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு (ESTP)

நகர்ப்புற ஏழைகளின் திறனை வளர்சியடைய செய்வதற்கும் அல்லது மேம்படுத்துவதற்கும் இதன் மூலம் அவர்களின் சுய வேலை வாய்ப்பு திறனை உயர்த்திக்கொள்ளவும் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பையும் பெறலாம். நகர்ப்புற ஏழைகளுக்கு வணிகத்திற்கும் / சந்தைபடுத்துவதற்கும் தேவையான திறன்சார் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 3 மாத பயிற்சிக்கு NCVT/SSC சான்றிதலுடன் வழங்கப்படுகிறது.

சுய வேலை வாய்ப்பு திட்டம் (தனிநபர் & குழு)

சுய வேலை வாய்ப்புத்திட்டம் தனிநபர்கள் அல்லது குழுக்களை சுய வேலை வாய்ப்புகளில் ஈடுபடுத்துதல், உள்ளூர் நிலைகளுக்கு ஏற்ப பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி செய்வதை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்புற சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன் இணைப்பிற்கு வழிவகை செய்து கொடுக்கப்படும்.

திறன் மேம்படுத்துதல் பயிற்சி (CBT)

மாநில மற்றும் நகர அளவில் பணியாற்றும் தொழில் நுட்ப வள்ளுநர்கள், அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு திறன் வளர்த்தல் மற்றும் மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.

நகர்ப்புற வாழ்வாதார மையம் (CLC)

நகர வாழ்வாதார மையத்தின் முக்கிய நோக்கமானது இது ஒரு தகவல் அறியும் மையமாக திகழும். இம்மையத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இது ஒரு பயிற்சி கூடமாகவும் மற்றும் ஆலோசனை மையமாகவும் செயல்படும். சுய தொழில் செய்வோர்கள் வருவாயை பெருக்குவதற்கு இம்மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.

சிறப்பு முயற்சிகள்

தனிநபர் கழிப்பறை கட்டுதல் மற்றும் பயன்படுத்துதல்

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அவ்ர்களின் வீடுகளில் 100% தனிநபர் கழிப்பிடம் கட்டி முழுமையாக பயன்படுத்தி நோய் தொற்றுகளிலிருந்து தங்களை பாதுகாத்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறு கடன் வழங்கி அனைவரின் இல்லங்களிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டிடவும் முழுமையாக பயன்படுத்திடவும் பெருமுயற்சி எடுத்துவருகின்றனர்.

வங்கி பணம் எடுப்பு அட்டைகள் (ரூபே அட்டை)

வங்கி பணம் எடுப்பு அட்டைகளை அனைத்து மகளிர் சுயௌதவிக்குழு உறுப்பினர்களுக்கும் பெற்று கொடுத்து அதை பாதுகாபாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சமுதாயத்தில் உள்ள அனைவரையும் வங்கி பணம் எடுப்பு அட்டைகளை பயன்படுத்திட ஊக்குவிக்கின்றனர்.

வீடுதோறும் மரக்கன்று நடுதல்

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவகளின் இல்லங்கள், சுய உதவிக்குழு அலுவலகம் மற்றும் கிராம சேவைகட்டிடங்களிலும் மரக் கனறுகளை சுற்றுச் சூழலை பாதுகாத்திட வேண்டி மரக் கன்றுகளை வைத்து பராமரித்து வறுகின்றனர்.

சேமிப்பு

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேமிப்பு பழக்கத்தை ஒரு கட்டாய வழக்காமாக கொண்டு சேமித்து வருகின்றனர்.மேலும் மற்றவர்களையும் இப்பழக்கத்திற்கு கொண்டுவருகின்றனர்.


மேலும் விபரங்களுக்கு
திட்ட இயக்குநர்,
மகளிர் திட்டம்,
பூமாலை வணிக வளாகம்,
புதுபேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை.
தொலைபேசி எண் – 04322230950