முடிவு

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை

பொதுச் சுகாதாரத் துறை 1923ம் ஆண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு, தாய், சேய் நல சேவைகளை வழங்குதல் மற்றும் தொற்று நோய்களின் அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாத்து பொதுச் சுகாதாரம் பேணுதல் ஆகியவை இத்துறையின் முக்கிய குறிக்கோள்களாகும்.

1939ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘பொதுச் சுகாதார சட்டம் 1939’ பொது மக்களின் சுகாதார வாழ்வினைப் பாதுகாத்திட இத்துறை அலுவலர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

நமது மாவட்டம், நிர்வாக வசதிகளுக்காக புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டங்களாக இயங்கி வருகிறது. புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 125 துணை சுகாதார நிலையங்களும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 117 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் மக்கள் சேவையில் உள்ளன. மேலும் புதுக்கோட்டை நகர்புறத்தில் 2 நகர் நல மையங்களும், அறந்தாங்கி நகர்புறத்தில் 1 நகர் நல மையம் என மாவட்டத்தில் 3 நகர் நல மையங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவ அலுவலர்கள், மற்றும் களப்பணியாளர்கள் அந்தந்த பகுதியின் பொதுச் சுகாதாரத்தினை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்வதிலும் பெரும்பங்காற்றுகின்றனர். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சேவைகள் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றன. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப்பணியாளர்கள், கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் கட்டிட வசதிகள், வாகனங்கள் என பொதுச் சுகாதார உள் கட்டமைப்பு பெரிதாக வளர்ந்து வசீகர வளர்ச்சி கண்டுள்ளது.

பொதுத் தகவல்கள்

வ.எண் விபரம் புதுக்கோட்டை அறந்தாங்கி மொத்தம்
1 மக்கள் தொகை 933220 752425 1685645
2 ஊரகம் 771396 710486 1481882
3 நகர்புறம் 161824 41939 203763
4 வட்டாரங்கள் 7 6 13
5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 40 31 71
6 துணை சுகாதார நிலையங்கள் 125 117 242
7 30 படுக்கை வசதி கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 7 5 12
8 BEmONC ஆரம்ப சுகாதார நிலையம் 7 6 13
9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2 1 3
10 ரத்த சேமிப்பு வசதி உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள். 3 5 8

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் அடிப்படை மருத்துவ சேவைகள்

 • தாய் சேய் நல சேவைகள், கர்ப்ப கால சேவைகள், ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சர்க்கரை அளவு பரிசோதனை, இருப்புச் சத்து குறைபாடு கண்டறிதல், தாய் சேய் இருவருக்குமான தடுப்பூசிப் பணிகள், 24X7 மணி நேர கர்ப்ப கால சேவைகள், இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு இரத்தம் ஏற்றுதல், உயர் சிகிச்சைக்கான பரிந்துரைகள் போன்ற அடிப்படை சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 • வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான சிகிச்சை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மற்றும் உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரை.
 • அவசர கால ஊர்தி மற்றும் 108, 104 போன்ற சேவைகள் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றன.
 • தொற்றும் நோய்களுக்கான சிகிச்சைகள்
 • டெங்கு, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு, தட்டம்மை, அம்மை, நாய்கடி, பாம்புகடி உள்ளிட்ட விஷகடிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 • தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள்
 • 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த வியாதிகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மகளிர்க்கும் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

  மேற்கண்ட, பொதுச் சுகாதாரத் துறையின் அனைத்து அடிப்படை மருத்துவ சேவைகளும் ஏழை, எளிய மக்களுக்கு அவரவர்களின் வாழிடங்களிலேயே வழங்கப்படுகிறது.

தேசிய தடுப்பூசி அட்டவணை
எப்பொழுது கொடுக்க வேண்டும் தடுப்பூசி மருந்து தடுப்பு மருந்தின் அளவு கொடுக்கும் முறை கொடுக்க வேண்டிய இடம்
குழந்தை பிறந்தவுடன் B.C.G (காசநோய்) 0.1 ml தசை வழியாக இடது மேல் கை
குழந்தை பிறந்தவுடன் OPV-0 2 சொட்டுகள் வாய் வழியாக வாய் வழியாக
குழந்தை பிறந்தவுடன் HEP-B பிறந்த 24 மணி நேரத்திற்குள் 0.5 ml தசை வழியாக முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதி
6வது வாரம், 10வது வாரம் மற்றும் 14வது வாரங்கள் PENTAVALENT 1,2&3 0.5 ml தசை வழியாக முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதி
6வது வாரம், 10வது வாரம் மற்றும் 14வது வாரங்கள் OPV-1,2&3 2 சொட்டுகள் வாய் வழியாக வாய் வழியாக
6வது வாரம், 10வது வாரம் மற்றும் 14வது வாரங்கள் IPV 1&2 0.1 ml தோலுக்குள் வலது மேல் கை
9 மாதங்கள் நிறைவுற்ற பின் (270 நாட்களுக்குப் பிறகு) MR முதல் தவணை 0.1ml தோலுக்கு கீழ் வலது மேல் கை
9 மாதங்கள் நிறைவுற்ற பின் (270 நாட்களுக்குப் பிறகு) JE முதல் தவணை 0.5 ml தோலுக்கு கீழ் இடது மேல் கை
16-24 மாதத்திற்குள் DPT ஊக்குவிப்பு முதல் தவணை 0.5 ml தசை வழியாக முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதி
16-24 மாதத்திற்குள் MR 2ஆம் தவணை 0.5 ml தோலுக்கு கீழ் வலது மேல் கை
16-24 மாதத்திற்குள் *JE 2ஆம் தவணை 0.5 ml தோலுக்கு கீழ் இடது மேல் கை
16-24 மாதத்திற்குள் DPT ஊக்குவிப்பு முதல் தவணை 0.5 ml தசை வழியாக முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதி
16-24 மாதத்திற்குள் MR 2ஆம் தவணை 0.5 ml தோலுக்கு கீழ் வலது மேல் கை
16-24 மாதத்திற்குள் JE 2ஆம் தவணை 0.5 ml தோலுக்கு கீழ் இடது மேல் கை
16-24 மாதத்திற்குள் OPV ஊக்குவிப்பு 2 சொட்டுகள் வாய் வழியாக வாய் வழியாக
5 வருடத்தில் DPT ஊக்குவிப்பு 2ஆம் தவணை 0.5 ml தசை வழியாக மேல் கை
10வது வருடம் TT 0.5 ml தசை வழியாக மேல் கை
16வது வருடம் TT 0.5 ml தசை வழியாக மேல் கை
கருவுற்ற தாய்மார்களுக்கு TT-1 (இரணஜன்னி) 0.5 ml தசை வழியாக மேல் கை
கருவுற்ற தாய்மார்களுக்கு TT-2 (இரணஜன்னி) TT-1 கொடுத்த 4 வாரம் கழித்து 0.5 ml தசை வழியாக மேல் கை
கருவுற்ற தாய்மார்களுக்கு TT-B (இரணஜன்னி ஊக்குவிப்பு தவணை) முந்தைய கர்ப்ப காலத்திலிருந்து
3 வருடங்களுக்குள் இருந்தால் ஒரு ஊக்குவிப்பு தவணை மட்டும்
0.5 ml தசை வழியாக மேல் கை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்: அரசாணை எண் 118 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நாள்: 02.04.2018ன் படி நிதியுதவி தொகை ரூ.12,000 லிருந்து ரூ.18,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் பிறந்த மாதர் குல மாணிக்கம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக ஏழை எளிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.18,000/= நிதியுதவி வழங்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நலம் பேணவும், வருவாய் இழப்பினை ஈடு செய்யும் விதத்திலும் ரூ. 18,000 (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்) 5 தவணைகளில், இரண்டு பிரசவங்களுக்கு உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, வழங்கப்படுகிறது. இத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய பெட்டகமும் ஒவ்வொரு பிரசவத்திற்கு ஒன்று வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இருப்பினும், சில வரையறைகளுக்குட்பட்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெறும் தாய்மார்களுக்கும் முதல் மற்றும் ஐந்தாம் தவணை நிதியுதவியுடன், மருந்துகள் மற்றும் சத்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும்.

கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் நகர்புற சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் பற்றிய விபரங்களை பிக்மி இணையதளத்தில் (PICME 2.0) பதிவு செய்திட வேண்டும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் ஒரு ’ தாய்மை நல எண் ‘ (RCH ID) வழங்கப்படுகிறது. இந்த எண் டாக்டர் . முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறவும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறவும் மிகவும் முக்கியமானதாகும்.இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, கர்ப்பிணித்தாய் தனக்கான மற்றும் தன் குழந்தைக்கான அனைத்து சேவைகளையும் அரசு மருத்துவ நிலையங்களிலேயே பெற்றிருக்க வேண்டும்.

அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம்

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழ்வுறும் பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் தேவையான உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து 24 மணிநேரமும் பிரசவ சேவைகளை வழங்கி வருகின்றனர்.

பிக்மி இணையதளம்

கிராமப்புறங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதியில் உள்ள தகுதிவாய்ந்த தம்பதியர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் விபரங்களை பிக்மி 2.0 இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். இந்த இணைய தள விபரங்கள் வெவ்வேறு மட்டங்களில் உள்ள அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் தாங்களாகவே தங்களது விபரங்களை https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். பொது இ-சேவை மையங்கள் மூலமும், 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையினைப் பயன்படுத்துவதன் மூலமும் பதிவுசெய்துகொள்ளலாம்.

மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்

கர்ப்பிணித் தாய்மார்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்ப கால பரிசோதனைகளுக்காக வருகையில் அவர்களுக்கு அனைத்து சத்துக்களும் நிரம்பிய சரிவிகித சத்துணவு வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கும், பிரசவம் நிகழ்வுற்ற பின், குடும்ப நல அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட தாய்மார்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கியிருக்கும் காலம் வரை மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

பள்ளியில் பயிலும், பயிலா வளரிளம் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்

அனைத்து பள்ளிகளிலும் பயிலும் வளரிளம் பெண்கள் மற்றும் பள்ளி செல்லாத, கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களின் மாதாந்திர தேவைகளின் போது தன் சுத்தம் பேணுவதற்காக ‘சானிட்டரி நாப்கின் ‘ அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் வாயிலாக இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பிறப்பு இறப்பு பதிவுகள்

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் கூடுதல் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, சுகாதார ஆய்வாளர்கள் கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு பிறப்பு இறப்பு பதிவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 பிரிவு 12ன் படி அனைத்து மருத்துவ நிலையங்களில் நிகழ்வுறும் குழந்தைப் பேற்றிற்கும் பிரசவித்த தாய் மருத்துவ நிலையங்களை விட்டுச் செல்லும் போதே குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடுகிறது.

வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான பிறப்பு இறப்புகளை பதிவு செய்திடும் பணியில் கீழ்க்கண்ட தமிழக அரசுத் துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

 • நகராட்சி நிர்வாகம்
 • பேரூராட்சிகள்
 • வருவாய்த் துறை
 • மாநகராட்சி மற்றும்பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை

நிகழ்வுகளை பதிவு செய்திட நிர்ணயிக்கப்பட்ட கால அளவு

பிறப்பு இறப்பு மற்றும் இறந்து பிறந்தவை போன்ற நிகழ்வுகள், நிகழ்வுற்ற நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தொடர்புடைய பிறப்பு இறப்பு பதிவாளருக்குத் தெரிவிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்திட நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதங்கள்

பிறப்பு இறப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்வுற்ற நாளிலிருந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்திட கட்டணம் ஏதும் செலுத்திட வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட நிகழ்வுகள் இலவசமாக பதிவு செய்யப்படுகிறது.

பதிவிற்கான காலவரையறையினைத் தாண்டி பதிவு செய்திட வேண்டிய பிறப்பு இறப்பு பதிவுகளுக்கான கட்டணங்கள்:

வ.எண் பிறப்பு இறப்பு நிகழ்வுற்ற நாளிலிருந்து கால அளவு தாமதக் கட்டணம் மற்றும் அனுமதி வழங்கும் அலுவலர்
1 21 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை Rs. 100/-
2 30 நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை ரூ200/= (ரூபாய் இருநூறு மட்டும்) தாமதக் கட்டணத்துடன், குறித்துரைக்கப்பட்ட அலுவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி.
3 ஒரு ஆண்டு நிறைவிற்குப் பின் ஓர் ஆண்டிற்குள் பதிவு செய்யப்படாத பிறப்பு இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் ரூபாய் 500/- (ரூபாய் ஐந்நூறு மட்டும்) தாமதக் கட்டணத்துடன், தொடர்புடைய வருவாய்க் கோட்டாட்சியரின் அனுமதி ஆணை பெற்ற பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்திட, அரசாணை எண் 360 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ( ஏபி2) நாள்: 12.10.2017ன்படி பதிவுக் கட்டணங்கள் கீழ்க்கண்டவாறு மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

குழந்தையின் பெயரினை ஒரு ஆண்டிற்கு மேல் பதிவு செய்தல்: பதிவேடுகள் பதிவாளர் வசம் இல்லாத நிலையில், பதிவேடுகளை உரிய அலுவலரிடமிருந்து கேட்டுப் பெற்று, தாமதக் கட்டணத்துடன் குழந்தையின் பெயரினை உரிய இடத்தில் பதிவு செய்திட வேண்டும்.
புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள் கட்டண விகிதங்கள்.
வ.எண் பிரிவு பிரிவு துணை விதி விபரம் கட்டணம் G.O.Ms.No.370 Health
1 13 9  
9(1)
9(2)
9(3)
தாமதப் பதிவுகள்
1. பிறப்பு இறப்புகள் நிகழ்வுற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள்
2. 30 நாட்களுக்கு மேல் ஒரு வருட்த்திற்குட்பட்ட கால அளவு
3. ஒரு ஆண்டிற்கு மேற்பட்ட கால அளவு
 
100/-
200/-
500/-
2 14 10 10(a) பெயர்ப் பதிவுகள்
குழந்தையின் பெயரினை ஒரு ஆண்டிற்கு மேல் பதிவு செய்தல் (பதிவேடுகள் பதிவாளர் வசம் இருப்பின்,தாமதக் கட்டணத்துடன், குழந்தையின் பெயரினை உரிய இடத்தில் பதிவு செய்திட வேண்டும்.
Rs.200 /-
3 14 10 10(b) 200/-
 
4
 
17
 
13
 
13(1)(a)
13(1)(b)
13(1)(c)
13(1)(c)
13(1)(d)
தேடுதல் கட்டணம்
ஒரு பதிவின், தேடுகை நடைபெறும் முதலாம் ஆண்டிற்கான கட்டணம்
தேடுகையின் கூடுதலான ஒவ்வொடு வருடத்திற்கான கட்டணம்
பிறப்பு/இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் ( நகல் ஒன்றுக்கு)
கூடுதலாக தேவைப்படும் நகல்களுக்கு (ஒவ்வொரு நகலும்))
பதிவின்மைச் சான்று வழங்கிட
 
100/-
100/-
200/-
200/-
100/-

யாரை அணுக வேண்டும்

பிறப்பு இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் அவை நிகழ்வுறும் இடங்களிலேயே பதிவு செய்யப்படுகின்றன. பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 பிரிவு 7ன்படி ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பிறப்பு இறப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பிறப்பு இறப்பு பதிவாளர்கள் குறித்துரைக்கப்பட்டுள்ள அலுவலர்களால் நியமிக்கப்படுகின்றனர்.

பிறப்பு இறப்பு பதிவாளர்களாகப் பணியாற்றிடும் அலுவலர்கள்
பதிவுப் பகுதி பிறப்பு இறப்பு பதிவாளர்களாகச் செயல்படும் அலுவலர்கள்
மாநகராட்சிகள் துப்புறவு ஆய்வாளர்கள்
நகராட்சிகள் ,நகரியங்கள் துப்புறவு ஆய்வாளர்கள்
பேரூராட்சிகள் செயல் அலுவலர்கள்/ துப்புறவு ஆய்வாளர்கள்
கிராம ஊராட்சிகள் கிராம நிர்வாக அலுவலர்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவ நிலையங்கள் பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர் (ஆண்)
கன்டோண்மென்ட் துப்புறவு ஆய்வாளர்கள்
பண்ணைகள் / தோட்டங்கள் மேலாளர்கள்

பிறப்பு இறப்பு சான்று நகல்கள்

பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 பிரிவு 12ன் படி ஒரு பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட்டவுடன் தகவல் அளிக்கும் உறவினர்களுக்கு ஒரு நகல் இலவசமாக வழங்கப்படும். அதன்பின்னர் பிரிவு 17ன்படி, தேவைப்படும் நகல்கள், உரிய கட்டணங்களை பெற்ற பின்னர் பதிவாளரால் வழங்கப்படும்.

குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட வழங்கப்பட்டுள்ள கால அளவு

ஒரு குழந்தை பிறந்த பின்னர் ஓராண்டு நிறைவுபெறும் கால அளவிற்குள், எவ்விதக் கட்டணமுமின்றி அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்படவில்லையெனில், ஓராண்டிற்குள் மேல் 15 வருடங்களுக்குள் ரூ 200/= தாமதக் கட்டணத்துடன் குழந்தையின் பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

குழந்தையின் பெயரினைப் பதிவு செய்திட வழங்கப்பட்டுள்ள கால அளவு நீட்டிப்பு

01.01.2000 க்கு முன்பாக பெயரின்றி பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் பெயரினைப் பதிவு செய்து கொள்வதற்கான கால அளவு 31.12.2019 வரை வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 பிரிவு 17ன்படி தேடுகை மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்

எந்தவொரு நபரும் தனது குடும்பத்தில் நிகழ்வுற்ற பிறப்பு இறப்பு பதிவுகள் தொடர்பாக தேடுதல் மற்றும் சான்றிதழ்கள் வழங்க கோரி விண்ணப்பிக்கலாம். தேடுகைக் கட்டணம், பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவின்மைச் சான்றிதழ்கள் பெற அரசால் குறித்துரைக்கப்பட்டுள்ள கட்டணங்கள்

 1. பிறப்பு இறப்புச் சான்றிதழ் நகல் ஒன்றிற்கு ரூ 200/-
 2. ஒரு வருடத்திற்கு தேடுகை கட்டணம் Rs.100/-
 3. கூடுதலாக உள்ள ஒவ்வொரு வருடத்திற்கும் தேடுகைக் கட்டணம் Rs.100/-
 4. பதிவின்மைச் சான்று பெற Rs.100/-

தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்கள்

தொடர்ந்து நடத்தப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம்களின் பயனாக, போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்ட நிலையினைத் தமிழகம் எய்தியுள்ளது. இருப்பினும் இந்நோய் பரவுதலைக் கட்டுப்படுத்திடும் வகையில் வருடத்திற்கு இருமுறைகள் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு, பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டுகள் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யகரம் (RBSK)

அரசு மருத்துவ நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகின்றனர். பிறவிக் குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள், சத்து பற்றாக்குறை, மற்றும் அனைத்து குழந்தைப் பருவ நோய்களும் இளம்பருவத்திலேயே இனம் கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் மூலம் குறைபாடுகளை நீக்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கொசுக்களால் பரவும் நோய்களுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

 1. கொசு உற்பத்தியாகும் இடங்களை குறைத்தல், நீர் தேங்கும் பள்ளங்களை நிரப்புதல், கால்வாய்களை ஓடும்படி செய்தல்.
 2. கொசுப் புழுக்களை உண்ணும் மீன்களை நீர் நிலைகளில் விடுதல்
 3. கொசுப்புழுக் கொல்லி உபயோகித்தல், முதிர் கொசுக்களை அழித்தல்
 4. கொசு வலைக்குள் உறங்குதல், கொசுவிரட்டி சாதனங்களை உபயோகித்தல்
 5. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சியில் விழிப்புணர்வு செய்திகள்.
 6. சமுதாயத்தில் நலக்கல்வி

டெங்கு காச்சலை தடுக்க

காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமைனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

 1. ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடுவோம்
 2. தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசுபுகாதவாறு மூடி வைப்போம்.
 3. பகலிலும் சிறு குழந்தைகளை கொசுவலைக்குள் தூங்க வைப்போம்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்வராமல் தடுப்பது எப்படி:

காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

 1. இந்நோய் தாக்காமல் இருக்க கொசுவலை உபயோகப்படுத்தி குறிப்பாக குழந்தைகளை கொசுக் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
 2. பன்றிகளை குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்ற வேண்டும்.
 3. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்
 4. நெல்வயல்களில் தேங்கியிருக்கும் நீரை வாரம் ஒருமுறை வடிப்பதன் மூலம் கொசு உற்பத்தியை பெரிதும் தடுக்கலாம்.
பொது சுகாதாரத் துறையின் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களின் தொடர்பு முகவரிகள்
வ.எண் பதவி பதவி தொலைபேசி எண்கள்
1 துணை இயக்குநர்
புதுக்கோட்டை.
சாந்தநாதபுரம் 6 வீதி, புதுக்கோட்டை. 622001 04322-221733
FAX: 222723 (04322)
dphpdk[at]tn[dot]nic[dot]in
2 துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
அறந்தாங்கி.
ஜீவா தெரு, அறந்தாங்கி- 612613 04371-220501
FAX: 04371-220501
dphatg[at]tn[dot]nic[dot]in
வட்டார அளவிலான அலுவலர்களின் தொடர்பு முகவரிகள்
வ.எண் பதவி அலுவலக முகவரி தொலைபேசி எண்கள்
1 வட்டார மருத்துவ அலுவலர் புதுக்கோட்டை ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆதனக்கோட்டை 04322-293124
phcadk[at]gmail[dot]com
2 வட்டார மருத்துவ அலுவலர் குன்னண்டார்கோவில் ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அண்டக்குளம் 04339-248309
phcandakulam1[at]gmail[dot]com
3 வட்டார மருத்துவ அலுவலர் அன்னவாசல் ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரம்பூர் 04339-241230
phcparambur[at]gmail[dot]com
4 வட்டார மருத்துவ அலுவலர் பொன்னமராவதி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரையூர் 04333-294994
phckaraiyur[at]gmail[dot]com
5 வட்டார மருத்துவ அலுவலர் திருமயம் ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நச்சாந்துப்பட்டி 04333-277276
phcnatchpty[at]gmail[dot]com
6 வட்டார மருத்துவ அலுவலர் விராலிமலை ஒன்றியம் Government அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொடும்பாளூர் 04339-220484
phckodumbalur[at]gmail[dot]com
7 வட்டார மருத்துவ அலுவலர், அரிமளம் ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடியாபட்டி 04333-272361
phckadiyapty[at]gmail[dot]com