முடிவு

பேரிடர் மேலாண்மை

அறிமுகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம், சூறாவளி, தீ விபத்து மற்றும் சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் அவசர காலங்களில் மனித உயிரிழப்புகள், கால்நடைகள் இறப்புகள், வீடுகள் சேதமடைதல் மற்றும் பாதிப்புகள் ஆகியவற்றினை மாவட்ட அளவில் கண்காணிக்கவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைளை மேற்கொள்வதும் மாவட்ட பேரிடர் மேலாண்மைப்பிரிவின் முதன்மையான பணி ஆகும்

அவசர கட்டுப்பாட்டு மையம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் (24×7) இயங்ககூடிய மாவட்ட அவசரகட்டுப்பாட்டு மையத்தில் மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம், சூறாவளி, தீ விபத்து மற்றும் சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் அவசர காலங்களில் மனித உயிரிழப்புகள், கால்நடைகள் இறப்புகள், வீடுகள் சேதமடைதல் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் போது பொது மக்கள் கீழ்காணும் தொலைபேசி எண்களினை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

இலவச தொலைபேசி எண் – 1077

தரைவழி தொலைபேசி எண் – 04322-222207

வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) – 9384056201
(Whatsapp Number)

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது)

04322 – 221658

Fax- 04322 – 221658