நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை
இம்மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களின் 763 கிராமங்களுக்கான நில விவரங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்களது நில உரிமை தொடர்பான சிட்டா மற்றும் அ-பதிவேடு விவரங்களை பொதுமக்கள் இணைய தளம் மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக http://eservices.tn.gov.in என்கிற வலைதளத்தில் தமிழக அரசால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களின் புலபப்டங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதற்கட்டமாக புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களின் புலப்பட நகல்களை மேற்காணும் வளைதளத்தில் பார்வையிட்டுக்கொள்ளவும் நகல் எடுத்துக்கொள்ளவும் தமிழக அரசால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதர கிராமங்களின் புலப்படங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றையும் விரைவில் வலைதளத்தில் பொதுமக்கள் பார்வையிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் உள்ள நிலப்பதிவேடுகளும் அனைத்து வட்டங்களில் உள்ள நத்தம் நிலப்பதிவேடுகளையும் கணினிமயமாக்கும் பணி முடிக்கப்பட்டு இணைய வழி சேவைக்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை இணைய வசதி உள்ள அனைத்து கணினிகள் மூலமாகவும் செல்லிடைபேசி மூலமாகவும் http://eservices.tn.gov.in என்கிற வலைதளத்தில் எவ்வித கட்டணமுமின்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். பட்டா மாறுதலை பொறுத்த வரையில் அனைத்து நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொது சேவை மையங்களில் ரூபாய் 50.00 கட்டணம் செலுத்தி தங்களது பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். பட்டா மாறுதல்கள் அனைத்தும் இணைய வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை கண்காணிக்கும் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
வ.எண் | தகுதி | பொறுப்புகள் |
---|---|---|
1 | உதவி இயக்குநர் | மாவட்ட அளவிலான மேற்பார்வை அலுவலர் |
2 | தொழில் நுட்ப மேலாளர் | நத்தம், நகரம் மற்றும் புலப்படங்கள் கணினிமயமாக்கல் மற்றும் துறை தொடர்பான அனைத்து தொழில் நுட்பப் பணிகள் கண்காணிப்பு |
3 | கண்காணிப்பாளர் | அமைச்சுப் பணிகள் கண்காணிப்பு |
4 | ஆய்வாளர் | சம்பந்தப்பட்ட கோட்டங்களில் உள்ள குறுவட்ட அளவர்களால் மேற்கொள்ளப்படும் இணையவழி பட்டா மாறுதல் பணிகள் கண்காணிப்பு மற்றும் வட்ட அலுவலகங்களில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளல் |
5 | தலைமை வரைவாளர்கள் | கிராம வரைபடம், வட்ட வரைபடம், மாவட்ட வரைபடம் விற்பனைப்பிரதிகளை கையாளுதல், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நத்தம், நகரம் புலப்படம் கணினிமயமாக்கப்பட்டதை இணையவழிக்கு கொண்டுவருவதற்கு ஒப்பிடல் பணி மேற்கொள்தல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இதரப் பணிகள் |
6 | வட்டத்துணை ஆய்வாளா்கள் | வட்ட அளவிலான நிலஅளவைப் பணிகளை மேற்பார்வையிடல் |
7 | வட்ட சார்ஆய்வாளா்கள் | நிலஅளவை மேல்முறையீடு மனுக்கள், வட்டாட்சியா் அலுவலகத்திற்கு நிலஅளவை தொடா்பாக விபரம் கேட்டு வரும் நபா்களுக்கு பதில் அளித்தல் மற்றும் நீதிமன்றம் தொடா்பான பணிகள் |
8 | முதுநிலை வரைவாளா்கள் | பராமப்பு பணியின் காரணமாக வட்ட கணக்கில் மாறுதல் செய்தல் |
9 | நிலஆவண வரைவாளா்கள் | தன்பதிவேடு, எல்லைக்கேட்பு மனு பதிவேடு, புதிய உட்பிரிவுகள் கூராய்வுப் பணி, மற்றும் மனுதாரா்களுக்கு புலப்பட நகல் வழங்குதல், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மனுக்களுக்கு பதில் அளித்தல் தொடா்பான பணிகள் |
10 | குறுவட்ட அளவா்கள் | இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் வழங்க கோரும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்தல், புலஎல்லை அளந்து காண்பிக்க கோரி வரும் மனுக்களின் மீது நடவடிக்க எடுத்தல், பராமரிப்பில் ஏற்படும் உட்பிரிவு மாறுதல்களை கிராம கணக்குகளில் மாறுதல் செய்தல் போன்ற பணி செய்தல் |