புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் 2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக ஈரோடு மாவட்டத்திலும், 2017-2019 ஆம் ஆண்டில் திண்டிவனம் சார் ஆட்சியராகவும், 2019-2021 ஆம் ஆண்டில் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) கன்னியாகுமரி மாவட்டத்திலும், 2021-2023 ஆம் ஆண்டில் வணிக வரித்துறையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தும் துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.