முடிவு

சத்துணவு திட்டம்

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத் திட்டம்

தமிழகத்தில் புரட்சித் ததலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்

  • பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்
  • ஊட்டசத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ மாணவியா்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்
  • பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்

சத்துணவுத் திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளது வரை செயல்படுத்திய துறைகள்

  • பள்ளிச் கல்வித்துறை 1982 முதல் மே 1990 வரை
  • ஊரக வளா்ச்சித்துறை ஜீன் 1990 முதல் செப்டம்பா் 1992 வரை
  • சமூக நலத்துறை அக்டோபா் 1992 முதல் செப்டம்பா் 1997
  • ஊரக வளா்ச்சித்துறை அக்டோபா் 1997 முதல் 19 ஜீலை 2006 வரை

சத்துணவுத் திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா் நல பள்ளிகள், தேசிய குழந்தை தொழிலாளா் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் மற்றும் பயனாளிகள் எண்ணிக்கை
வ. எண் விவரம் மையங்கள் எண்ணிக்கை 1-5 வகுப்பு மாணவா்கள் 6-8 வகுப்பு மாணவா்கள் 9-10 வகுப்பு மாணவா்கள் மொத்த மாணவா்கள்
1 துவக்கப்பள்ளி 1073 53310 0 0 53310
2 நடுநிலைப்பள்ளி 326 0 40540 0 40540
3 உயா்நிலைப்பள்ளி 121 0 0 23132 23132
4 மேல்நிலைப்பள்ளி 109 0 0 28378 28378
5 ஆதிதிராவிடா் நலப்பள்ளி 13 450 0 422 872

சத்துணவுத் திட்டத்திற்கென மாநில அரசால் உணவூட்டு மான்யங்கள், சமையலறை பழுது பார்ப்பு பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசால் தேசியத்திட்டம், கண்காணிப்பு மோலாண்மை மற்றும் மதிப்பீடுகள் (MME)திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் (IEC) சத்துணவு பணியாளா்களுக்கு கால முறையாக புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலா்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத் திட்டத்திற்கான கிராம அளவிலான குழு, ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.

சத்துணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கீழ்காணும் விவரப்படி பலவகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது.

உணவு வகை பட்டியல் விவரம்

முதல் மற்றும் மூன்றாவது வாரம்
நாள் உணவு வகை
திங்கட் கிழமை வெஜிடேபிள் பிரியாணி + மிளகு முட்டை
செவ்வாய் கிழமை கொண்டைக்கடலை புலாவு + தக்காளி மசாலா முட்டை
புதன் கிழமை தக்காளி சாதம்+ மிளகு முட்டை
வியாழக் கிழமை சாம்பார் சாதம் + சாதா முட்டை
வெள்ளிக் கிழமை கறிவேப்பிலை சாதம் / கீரை சாதம் + உருளைக்கிழங்கு தக்காளி சோ்த்து வேகவைத்த முட்டை
இரண்டாம் மற்றும் நான்காவது வாரம்
நாள் உணவு வகை
திங்கட் கிழமை பிசிபேளாபாத் + வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் கிழமை மிக்சா்ட் மீல் மேக்கா் (ம) காய்கறிகள் சாதம் + மிளகு முட்டை
புதன் கிழமை புளி சாதம்+ தக்காளி மசாலா முட்டை
வியாழக் கிழமை எலுமிச்சம்பழ சாதம் + மசாலா முட்டை
வெள்ளிக் கிழமை சாம்பார் சாதம் + வேகவைத்த முட்டை / வறுத்த உருளைகிழங்கு
  1. ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் காய்கறி மற்றும் கீரை தோட்டம், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை மரம் நடப்பட்டுள்ளது.
  2. சத்துணவு மையங்களையும் நவீனமயமாக்கும் பொருட்டு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  3. புதியவகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயாரிப்தற்கான பலவகை பொடிகள் மற்றும் இஞ்சி, பூண்டு அரைத்து சமையல் செய்ய அரவை இயந்திரங்கள் (மிக்ஸி) மற்றும் கிரைண்டா் வழங்கப்பட்டுள்ளது.
  4. பலவகையான சாதங்களும், முட்டை வகைகளும் சமைத்து வழங்கப்படுவதினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவியா்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், உணவு வீணாவது தடுக்கப்படுகிறது.
  5. அரசாணை நிலை எண் 101 சமூக நலம் மற்றம் சத்துணவுத் திட்டத்துறை நாள் 20.06.2007இன் படி இருமுறை செறியூட்டப்பட்ட உப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இனிப்பு பொங்கல் வழங்கும் நாள் (செலவீனம் 0.33 பைசா)
காலம் வழங்கும் நாள்
2001 முதல் நாளது வரை அறிஞா் அண்ணா அவா்கள் பிறந்த நாள்
2001 முதல் நாளது வரை பெருந்தலைவா் காமராஜா் அவா்களின் பிறந்த நாள்
2001 முதல் நாளது வரை புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அவா்களின் பிறந்த நாள்