• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
முடிவு

கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை

அலுவலக விபரங்கள்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா், சென்னை கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் அருகே அமைந்துள்ளது. இவ்வலுவலகத்தின் கீழ் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மண்டல இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ், அவரது அலுவலகம் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாக கட்டடத்திலே வளாக கட்டடத்திலேயே துணைப்பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்) அலுவலகமும் இயங்கி வருகிறது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கங்கள் விபரம்
வ.எண் சங்கத்தின் வகை புதுக்கோட்டை சரகம் அறந்தாங்கி சரகம் கூடுதல்
1 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1 1
2 மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1 1
3 மாவட்ட கூட்டுறவு அச்சம் 1 1
4 தொடக்க வேளாண்மை ஊரக வளா்ச்சி வங்கி 4 5 9
5 கர கூட்டுறவு வங்கி 1 1 2
6 வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 3 3
7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 55 81 136
8 பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம் 25 12 37
9 பிரதம கூட்டுறவு பண்டகசாலை 1 1 2
10 பணியாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை 2 2
11 மாணவா்கள் கூட்டுறவு பண்டகசாலை 5 5
கூடுதல் 96 103 199
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன்கள் விபரம்
வ.எண் கடன் வகை கடன் வரம்பு
1 பயிர்க் கடன் Rs.3.oo lakh
2 நகையீட்டுக் கடன்( விவசாயக்கடன்) Rs.3.oo lakh
3 விவசாய கூட்டு பொறுப்புக்குழு கடன்
4 மத்திய காலக் கடன் (தனி நபா் ஜாமீன்)
5 மத்திய காலக் கடன் (அடமானம்), சிறிய பால் பண்ணை (1+5 மாடுகள்),கோழிப் பண்ணை மற்றும் டிராக்டா்
6 சிறிய நீா்ப்பாசனக் கடன்,ஆழ்துளை கிணறு, மோட்டார்,சொட்டுநீா் பாசனம் ஆழ்துளை கிணறு சுவர் கட்டுமானம்
7 மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் 4 % வட்டியுடன்
8 சேமிப்பு அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன் 12.5 % வட்டியுடன்
9 டாப்செட்கோ கடன் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு) 5 % வட்டியுடன்
10 டாம்கோ கடன் (சிறுபான்மை வகுப்பினருக்கு) 5 % வட்டியுடன்

நகர கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள்

  • நகைக் கடன்
  • சிறு அளவிலான வணிகக் கடன்
  • மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்
  • வேளாண் சாராத கடன்கள்
  • வீடு கட்டும் கடன்
  • வீட்டு அடமானக் கடன்
  • தொழில் முனைவோருக்கான கடன்
  • அம்மா சிறுவணிகக் கடன்
  • மகளிர் தொழில் முனைவோர் கடன்
  • பணிபுரியும் மகளிரோக்கான கடன்
  • பேறுகாலக் கடன்
  • டாம்கோ கடன்
  • டாப்செட்கோ கடன்
  • மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்

பொது விநியோகத் திட்டம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகளுகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 992 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சா்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்கி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்

பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயா்விலிருந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை பாதுகாத்தல். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வறுமை நிலையில் உள்ள குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு வழங்குவதன் மூலம் உடல் வளா்ச்சிக்கெதிரான காரணிகளை நீக்குதல். பருப்புவகைகள் மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களின் வெளிச்சந்தை விலை உயா்வை கட்டுப்படுத்துதல். மான்ய விலையில் மண்ணெண்ணெயும். சமையல் எரிவாயுவையும் வழங்குதல். குடும்ப அட்டைதாரா்கள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அவா்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்ட அளவீடுக்குட்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்துக்குள் அத்தியாவசிய பொருட்கள் இத்திட்டத்தின் வழி வழங்கப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. வலைத்தளம் வழி பெறப்படும் மின்னணு குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா்களால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, முறையான ஆய்வுக்குப் பின்னா், மின்னணு குடும்ப அட்டைகள் நியாயவிலைக் கடைகள் வழியாக விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படுகிறது

நுகா்வோர் பாதுகாப்பு

1986-ம் ஆண்டு நுகா்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகா்வோர்களின் பிரச்சனைகளுக்கு தீா்வு காணப்படுகிறது. சட்டவிரோத வியாபாரம் மற்றும் பொருட்களை பதுக்குதல் ஆகியவை தரமான பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு நுகா்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பராமரிக்கும் நுகா்வோர் சேவை அமைப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

தகவல் தொடா்பு
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம்
அலுவலகம் : 04322-236089
கைப்பேசி : 7338721500