முடிவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயலல்படுத்தி வருகிறது.

வ.எண் திட்டம் பயனாளிகள் ஆண்டு வருமானம் வயது வரம்பு அணுக வேண்டிய அலுவலா்
1 பாடபுத்தகங்கள் குறிப்பேடுகள் சீருடைகள் வழங்குதல் ஆதிதிராவிடர் பழங்குடியினா் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும். தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள் , விடுதி காப்பாளா்கள்
2 சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி அனைத்து 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணாக்கர்களும் தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள் , விடுதி காப்பாளா்கள்
3 மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் ஆதிதிராவிடர் , பழங்குடியினா் , மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன 11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள்
4 சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சேர்க்கும் திட்டம் அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் / அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பயின்று அந்தந்த வட்ட அளவில் நடத்தப்படும் தனித்தோ்வில் சிறந்துவிளங்கும் 5 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
5 சிறந்த தனியார் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு சேர்க்கும் திட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்துவிளங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் , பழங்குடியினா் மாணாக்கர்கள் Rs. 1,00,000 மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
6 ப்ரிமெட்ரிக் இணையதள கல்வி உதவித் தொகை திட்டம் 9 முதல் 10 – ஆம் வகுப்பு Rs.2,00,000 தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள்
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
7 போஸ்ட்மெட்ரிக் இணையதள கல்வி உதவித்தொகை திட்டம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் ( 11 முதல் கல்லுாரிகள்) Rs.2,00,000 பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லுாரி முதல்வா்கள்
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
8 சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை துப்புரவு தொழில் ( குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவா், தோல் பதனிடும் தொழில் புரிவோர்) அத்தகைய தொழில் புரிவோரின் குழந்தைகள். 10- ஆம் வகுப்பு வரை பயில்வதற்கு உதவித் தொகை வழங்கப்படும்.> தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
9 உயா் கல்வி பயில சிறப்பு உதவித்தொகை பொறியியல் , தொழில் நுட்பவியல், அறிவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம், ஆராய்ச்சி படிப்பு மேற்படிப்பு விரும்பும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் . Rs.2,00,000 ஆதிதிராவிடா் நல இயக்குநா். சென்னை-5
10 முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை முழூ நேர முனைவா் பட்டப் படிப்பு பயிலும் ஆதிதிராவிடர் /பழங்குடியினா் மாணாக்கர்கள் Rs.2,00,000 ஆதிதிராவிடா் நல இயக்குநா். சென்னை-5.
11 பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 3 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் பள்ளி தலைமையாசிரியா்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
12 வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை ஆதிதிராவிடா் / பழங்குடியினா் இன மக்களை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியா்.
13 நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமத்தை தோ்வு செய்து பரிசு வழங்குதல் அனைத்து இன மக்கள் நல்லிணக்கத்துடன் வாழூம் கிராமம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
14 இலவச வீட்டுமனை வழங்குதல் ஆதிதிராவிடர் / பழங்குடியினா் வீடு வீட்டுமனை இல்லாத மக்கள் Rs. 72000 தனி வட்டாட்சியா் (ஆதிந), மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
15 மயான மேம்பாடு மற்றும் பாதை வசதி அமைத்தல் ஆதிதிராவிடர் / பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு மயானம் இருந்தால் பொதுப்பாதை வசதி செய்து தருதல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
16 இணைப்புச் சாலை, சமுதாய கூடங்கள் அமைத்தல் ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்களின் குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலை, சமுதாய கூடங்கள் அமைத்தல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா், தாட்கோ
17 ஈமச்சடங்கு செய்வதற்கு நிதியுதவி வழங்குதல் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் எவராவது இறப்பின் ஈமச்சடங்கு நிதி ரூ.2500/- Rs. 40000 (கிராம பகுதி )
Rs.60000(நகர பகுதி )
வட்டார வளா்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி செயல் அலுவலா்கள் , மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
18 சிறந்த எழூத்தாளருக்கு நிதியுதவி வழங்குதல் சிறந்த எழூத்தாற்றல் மிக்க ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்கள் ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா், சென்னை-5.
19 கலப்புத் திருமணம் – ஊக்குவிப்பு நிதியுதவி வழங்குதல் கலப்புத் திருமணம் – ஊக்குவிப்பு நிதியுதவி வழங்குதல். கலப்பு திருமணச் சான்று, இந்து திருமணச்சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
20 சட்ட பட்டதாரி நிதியுதவி வழங்குதல் சட்டம் பயின்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினா் 25-45 மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
21 இலவச தையல் இயந்திரம் வழங்குதல் ஆதிதிராவிடர் / பழங்குடியினா் இன மக்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல் 18 முதல் 40 தனி வட்டாட்சியா் (ஆதிந)/ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் புதுக்கோட்டை
தொலைபேசி எண்: 04322- 220418
நிகரி எண் : 04322-221245
அலுவலக முகவரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை
மின்னஞ்சல் முகவரி : dadwpdk[at]nic[dot]in