முடிவு

திரு. சு.கணேஷ் இ.ஆ.ப

மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.சு. கணேஷ், இ.ஆ.ப., அவர்கள் 2009 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர். இவர் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை (விவசாயம்) மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MBA முடித்திருக்கிறார். துண ஆட்சியராக (Group I) தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு , வருவாய் கோட்டாட்சியராக சேரன்மாதேவி மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் பணி புரிந்திருக்கிறார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் தாட்கோ பொது மேலாளராகவும், சுனாமி அலுவலராக கடலூர் மாவட்டத்திலும் , தனி அலுவலராக திருப்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் பணிபுரிந்திருக்கிறார். தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்திருக்கிறார். இந்திய ஆட்சிப் பணியாளராக பதவி உயர்வு பெற்று இணை நிர்வாக இயக்குநர் (TWAD) மற்றும் மாநகராட்சி ஆணையராகவும் பணி புரிந்திருக்கிறார்.