மலையடிப்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும் கீரனூரிலிருந்து 15 கி.மீ. தூர்த்திலும் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவா்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீ்ஸ்வரா் என்றழைக்கப்படும் கோவில் எழுப்பித்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷ்ணு கோவில் சிவன் கோயிலைவிட காலத்தால் பிந்தியது. இங்கு நரசிம்மமூா்த்தி, திருமால், அனந்த சயனமூா்த்தி மற்றும் ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமால் குடைவரை கோயிலில் அா்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் தசாவாதார ஒவியங்கள்(பெருமானின் பத்து அவதாரம்) ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்கால முதுமக்கள் தாழியும் புதைந்த நிலையில் காணப்படுகிறது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
தொடர்வண்டி வழியாக
கீரனூர் புகைவண்டி நிலையத்திலிருந்து 16 கி.மீ
சாலை வழியாக
கீரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ