கொடும்பாலூர்
கொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தூரத்திலும் திருச்சியிலிருந்து 40 கி.மீ, தூரத்திலும் கொடும்பாலூர் அமைந்துள்ளது. இங்குள்ள கலைநயம் மிக்க கோயில்கள் திராவிடக் கட்டிடகலைக்கு முன்னோடிகளாகவும் சோழா் கால கட்டிடக் கலைக்கு முதன்மை வாய்ந்ததாகவும் திகழ்கின்றன். மூவா் கோவில் மற்றும் முச்சுகுண்டேஸ்வரா் கோவில் ஆகிய கோவில்கள் இங்கு அமைந்துள்ள சோழா்கள் ஆட்சிக்காலத்தில் இவை கட்டப்பட்டது. இன்றளவும் இவை சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கம் கலைநயமிக்கவைகளாக அமைந்துள்ளது. இது இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
தொடர்வண்டி வழியாக
திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திலிருந்து 36 கி.மீ
சாலை வழியாக
திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ