முடிவு

காட்டுபாவா பள்ளிவாசல்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருமயம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டுபாவா பள்ளிவாசல் இந்த பள்ளிவாசல் 17-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்பால் கட்டப்பட்டது. பக்ரூதீன் அவுலியா என்றழைக்கப்படும் காட்டுபாவாவின் சமாதி இங்கு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கந்தூரி விழா சிறப்பான விழாவாகும். முஸ்லீம்கள் மட்டும் இன்றி பல்வேறு தரப்பட்ட மக்களும் அந்நாளில் கூடுவார்கள்.

புகைப்பட தொகுப்பு

  • காட்டுபாவா பள்ளிவாசல் - பக்க காட்சி
  • காட்டுபாவா பள்ளிவாசல் - முன் காட்சி
  • காட்டுபாவா பள்ளிவாசல் - திருவிழா

அடைவது எப்படி:

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலுருந்து 30 கி.மீ

சாலை வழியாக

காட்டுபாவா பேருந்து நிலையத்திலுருந்து 1 கி.மீ.