முடிவு

திருக்கோகர்ணம் கோயில்

வழிகாட்டுதல்

புதுக்கோட்டை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான் வம்சத்தினா் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழா்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனா்.

தரிசனம் செய்யும் நேரம்
காலை 6 முதல் 12 வரை
மாலை 4 முதல் 8 வரை
தொலைபேசி- 04322- 236195

புகைப்பட தொகுப்பு

  • திருகோகர்ணம் திருக்கோவில் - நுழைவாயில்
  • திருகோகர்ணம் திருக்கோவில் - மேல் தள திருக்கோவில் தோற்றம்
  • திருகோகர்ணம் திருக்கோவில் - சுவாமி - அம்பாள்

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையத்திலுருந்து 45 கி.மீ

தொடர்வண்டி வழியாக

புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்திலுருந்து 3 கி.மீ