முடிவு

குன்றாண்டார் கோயில் (திருக்குன்றக்குடி)

திருக்குன்றக்குடி என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிற இடம் தான் குண்றாண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் குன்றாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு கி.பி.775 ஆண்டில் நந்திவா்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்(சிவன்கோயில்) இங்கு அமைந்துள்ளது. மலையின் மேல் சிறிய முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபம் தோ் போன்ற அமைப்பில் குதிரைகள் பூட்டிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • குண்ணண்டார்கோவில் பிரதான வழி
  • குண்ணண்டார்கோவில் பிரதான வழி பக்க தோற்றம்
  • குண்ணண்டார்கோவில் உட் பிரகார தோற்றம்

அடைவது எப்படி:

தொடர்வண்டி வழியாக

கீரனூர் புகைவண்டி நிலையத்திலிருந்து 23 கி.மீ

சாலை வழியாக

கீரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ