முடிவு

மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம்

அறிமுகம்

மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம் (சமிதி) 2012 ஆம் ஆண்டு முதல் ஸ்டாமின் வளாகம் குடுமியான்மலையில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை மற்றும் சகோதரத்துறை விரிவாக்க அலுவலர்களுக்காக இந்நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய குறிக்கோள்கள்

  • பொது, தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்களை சார்ந்த விரிவாக்க பணியாளர்களுக்கு, விரிவாக்க மேலாண்மை குறித்த திறனை மேம்படுத்துதல்.
  • திட்டமிடுதல், எடுத்துரைத்தல், செயலாக்கம், வரன்முறை மற்றும் மதிப்பீடு பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்குதல்.
  • வேளாண்மை விரிவாக்க பணிகள் திறனை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துதல்.
  • இரண்டாம் நிலை விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.
  • மேலாண்மை தொடர்புகள், பங்குபெறும் முறைகள் குறித்த வழிமுறைகளை ஏற்படுத்துதல்.
  • வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் உள்ள வேளாண்மை சார்ந்த நிலையங்களை ஒருங்கிணைத்து வருடாந்திர பணிமனை நடத்துதல்.
  • மேற்குறிப்பிட்டுள்ள செயல்பாட்டு திட்டங்களின்படி சமிதி நிறுவனம் மூலம் பயிற்சிகள் நடத்துதல், முதுகலை பட்டயப்படிப்பு (PGDAEM), இடுபொருள் விற்பனையாளர்களுக்கான பட்டயப்படிப்பு (DAESI) மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி (STRY) ஆகியவைகளை கண்காணித்தல் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வகையில், 2014-15 முதல் 2017-18 வரை 6516 இரண்டாம் நிலை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு (வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த சகோதரத்துறைகளான தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, பட்டுவளர்ப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு) பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2018-19 ஆம் நிதியாண்டு) 2280 தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ரூ.81.75 இலட்சத்தில் பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.